சர்வபக்ஷன்- கிடைத்ததை உடனடியாக முழுவதுமாக உண்பவன் என்று அக்னிக்கு பெயர். பகவான் சொன்னார், சர்வபக்ஷ! மிகப் பெரும் செயலை உன்னிடம் ஒப்படைக்கிறேன். என்றார். தேவி மலைமகளோ சபித்தாள். எனக்குரியது என் மகனைப் பெறுவது என்ற செயல், அதைப் பறித்த உன்னை குஷ்டம் வந்து ஸூழட்டும் (புகை அக்னியுடன் இணைந்தே இருப்பது)
Tag: குமார சம்பவம்
குமார சம்பவம் மஹா காவ்யம்- 8
ஹே! பார்வதி, திடுமென அந்தகாரம் மறைந்து வானம் சந்திரனின் ஒளி நிரம்பி நிர்மலமாகத் தெரிவதைப் பார். யானைகள் குளித்து குளத்தை சேறாக்கி விட்டு சென்ற பின் சற்று நேரத்தில் குளத்து ஜலம் சுத்தமாக ஆவது போல இருள் சேறு போல வானத்தை மறைத்திருந்தது. சந்திரனின் வரவால் தூய்மையாகி விட்டது. தூய்மையான எண்ணங்கள் கொண்ட நல்லவர்கள் கால வசத்தால் கஷ்டங்கள் அனுபவிப்பதும், பின் நன்மை அடைவதும் போல இருக்கிறது.
குமார சம்பவம் மஹா காவ்யம்- 7
அதன் வழியே, ஊரில் இருந்த அழகிய பெண்கள் அவரைக் காணும் பொருட்டு மற்ற வேலைகளை விட்டு அங்கு கூடியிருந்தனர். மாளிகைகளின் மேல் பகுதிகள் நிறைந்து இருந்தன. மணமகனைக் காணும் ஆசையால் கிடைத்த இடங்களில் ஊரார் நின்று பூக்களை மழையாக பொழிந்தனர். தங்களும் தங்களை நன்றாக அலங்கரித்துக் கொண்டு போக விரும்பியவர்கள் பாதியில் விட்டு ஓடி வந்தார்கள். கேசத்தை முடிந்து கொண்டிருந்தவர்கள், காலில் பாதி செம்குழம்பு பூசிக் கோண்டிருந்தவர்கள், எதிரில் வராமல் ஜன்னல்கள் அருகிலேயே நின்றபடி ஊர்வலத்தைக் கண்டனர்
குமார சம்பவம் மஹா காவ்யம் – 5
அவர் முன் ஒரு சமயம் உன்னை அலட்சியப் படுத்தியதாக கேள்வி. இருந்தும் அவரை விரும்புவதாகச் சொல்கிறாய். எனக்கு சந்தேகம் – அமங்களமான தோற்றம். காமனை எரித்தவர் என்பதால் கோபம் அதிகம் உடையவர் என்று தெரிகிறது. மேலும் அவர் சம்பந்தப் பட்ட சில விஷயங்கள் அமங்களமே. மிகவும் துச்சமாக நினைக்கும் விஷயங்கள் அவரிடம் உள்ளன. எப்படி நீ அவரை சகிப்பாய்?
குமார சம்பவம் மஹா காவ்யம் – 3
பகவான் சங்கரன் திடுமென அப்சர பெண்கள் பாடுவதைக் கேட்டும் தன் சமாதி கலையாமலே இருந்தார். தன்னை அடக்கியவர்கள், அனிச்சையாக எதுவும் செய்வதில்லை என்பர். நந்திகேஸ்வரர் லதா மண்டபத்தின் வாயிலில் வந்து நின்றபடி வாயில் விரலை வைத்து, சபலத்துக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று ஆணையிடுவது போல நின்றது. அதைக் கண்டு அவருடைய பூத கணங்கள் மட்டுமல்ல, வண்டுகள் மாமரத்தை விட்டு விலகின, முட்டையிடும் பறவை இனங்கள், மற்றும் ஊர்வனவைகளும் ஸ்தம்பித்து நின்றன
குமார சம்பவம் மஹா காவ்யம் – 2
பகவானே! நீங்கள் சொன்னது சரியே. எங்களை பொறுப்பு கொடுத்து பதவிகளில் அமர்த்தினீர்கள். அவைகளை எதிரிகள் அபகரித்துக் கொண்டு விட்டனர். ஒவ்வொரு உயிரிலும் உங்கள் ஆத்மா உள்ளதே, எப்படி இது வரை நீங்கள் அறியாமல் இருந்தீர்கள். உங்களிடம் வரம் பெற்றவன் தான் தாரகன் என்ற அசுரன். மூவுலகையும் ஆட்டி வைக்கும் தூம கேதுவாக வளர்ந்து விட்டான். அவன் செய்யும் உபத்ரவம் தாங்க முடியவில்லை.
குமார சம்பவம் மஹா காவ்யம்
ஈசனின் பிரிய பத்னியாக அவருடைய மடியில் அமர ஏதுவாக இருக்கவே என்பது போல இடை பாகமும் பின்னழகும் விளங்கின. அடுத்து அழகிய நாபியும், அதைச் சுற்றி ரோம ராசியும், மேகலையில் பதித்த மணி போலவும், வளித்ரயம் என்ற கோடுகள், அழகிய ஸ்தனங்கள், உத்பலம் போன்ற கண்கள் என ஒவ்வொரு அங்கமும் யௌவனம் வந்து விட்டதை பறை சாற்றின போலும்
