- குமார சம்பவம் மஹா காவ்யம்
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 2
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 3
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 4
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 5
- குமார சம்பவம் மஹா காவ்யம் – 6
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 7
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 8
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 10
- குமார சம்பவம்: பாகம் – 2
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 9
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 13
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 14
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 15
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 16
- குமார சம்பவம் மஹா காவ்யம்- 17
அத்யாயம்-16
அதன் பின் இரு பக்கமும் சம பலமும், அஸ்த்ர சஸ்திரங்களும் இருக்கவே, பயங்கரமான யுத்தம் ஆரம்பமானது. இந்திரனும், தாரகனும் முன் நிற்க அவர்கள் படையினர் பலவிதமாக தங்கள் திறமையை காட்டலாயினர். பாத சாரிகள், பாத சாரிகளான காலட்படையுடன், ரதங்களில் இருந்தவர்கள், ரதங்களில் வருபவர்களுடன், குதிரை வீரர்கள் அதேபோல, குதிரையில் வந்த வீரர்களுடன், யானை மேல் ஏறி வந்தவர்களும் தங்களுக்கு இணையான யானை மேல் வந்த வீரர்களுடன் என்று போரிட்டனர்.

இரு பக்கமும் இருந்த வீரர்கள் பரபரப்புடன் ஓடிக் கொண்டு இருக்க, இரு பக்கமும் நடப்பதைச் சொல்வதற்காக இருக்கும் வந்திகள் – அரண்மனையின் துதி பாடகர்கள்- (இவர்கள் தான் அன்னாட்களின் செய்தி அறிவிப்பாளர்கள்) ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி, இன்னார் இன்ன செய்கிறான், இந்த சஸ்திரங்களோ, அஸ்திரங்களோ உடையவன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள். இவர்களை வைதாலிகா: என்பர்.
இதன் மூலம் வீரர்கள் ஒவ்வொருவருடைய விக்ரமங்களையும் சொல்லச் சொல்ல போர் வீரர்கள் நிதானித்து தங்கள் செயல்களை மேற் கொண்டு எடுத்துச் செல்ல வசதியாயிற்று. இரு பக்கமும் அவர்கள் யுத்தம், அதன் முறைகள் ,தங்கள் திறமை இவைகளுடன் அதே முனைப்பாக செய்யலாயினர். இதுவும் ஒரு விதத்தில் ரசிக்கத் தக்கதாகவே ஆயிற்று. யார் எந்த தரப்பினர் என்பது கூட முக்யம் இன்றி சமமான வீர்களுடன் நேருக்கு நேர் நடக்கும் ஒரு போட்டி போலவே ஆயிற்று. கவசங்கள் பிளந்து சில இடங்களில் ரத்தம் பெருகுவதும் அதை பொருட்டாக நினைக்காமல் தொடர்ந்து போரிடுவதுமாக இருந்தனர்.
புஜங்கம்- சர்ப்பங்களின் முகத்திலிருந்து ஜ்வாலை போல வெளிப் படும் பெரு மூச்சுகள் போல அவர்கள் கைகளிலிருந்து கூர்மையான பளபளக்கும் பாணங்கள் வெளிப்பட்டன.
இரு பக்கத்து வீரர்களும் திடமான சரீரம் உடையவர்கள் ஆனதால், அந்த பாணங்கள் பட்டு உதிரம் பெருகி வழிந்தாலும் கீழே விழாமல் தாக்கு பிடித்தபடி போரைத் தொடர்ந்தனர். வேகமாக வந்த பாணங்கள் மேலே பட்டு தெறித்து விழச் செய்தனர். அந்த கூர்மையான பாணங்கள் யானைகளை துளைத்து விழச் செய்தன, அவ்வளவே. யுத்த மகோத்ஸவம் என்று வீரர்கள் குதூகலம் அடைந்தனர்.
இடைவெளி விடாது சர மாரியாக வந்த பாணங்கள், அக்னியை ஏந்தி வருவது போல கூர்மையாகவும் ப்ரகாசமாகவும் இருந்தன. வான வெளியில் விமானங்களில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள், அசுரர்கள், இவர்களின் அனுதாபிகள் வேகமாக அங்கிருந்து நகர்ந்தனர். பாடகர்களுக்கு கழுகுகள் வட்டமடித்ததைத் தவிர பாடு பொருளே இல்லையென்றாகி விட்டது போலும்.
ஒவ்வொருவருவரும் தங்கள் காது வரை வில்லை இழுத்து முடிந்த அளவு வேகமாக அம்புகளை பிரயோகம் செய்தனர். உதிரத்தைக் குடிக்கும் ஆவலுடன் பர பரப்பாக ஓடும் பிராணிகள் போல அந்த பாணங்கள் சென்றனவாம். யம ராஜனுடைய படர்களின் நாக்குக்கு ரண பூமியில் மரணித்து விழுந்தவர்கள் ருசிகரமான உணவானார்கள்.
சந்திர ஸூரியர்களின் ப்ரகாசமான சக்கரங்கள், அவர்களின் கதி செல்வது போல, அதே அளவு பிரகாசமாகவும், கூர்மையாகவும் இருந்த ஆயுதங்களோடு வீரர்கள் ரதங்களில் மண்டலமாக சஞ்சரித்தனர்.
நேருக்கு நேர் நின்று போரிட்டவர்கள் எதிரில் நிற்பவரின் கம்பீரமான ஆக்ருதியையும் ஆற்றலையும் உணர்ந்து சிலர் மூர்ச்சையானர்கள். சிலர் எதிர்த்து நின்றனர், சிலர் தங்கள் வீரமோ, புத்தியோ ஸ்தம்பித்து போக செய்வதறியாது நின்றனர். ஆஹவம்- யுத்தம் – சிலர் மல் யுத்தம் போல யுத்தமும் இவர்களுக்கு விளையாட்டு போலவே மனதுக்கு பிடித்தமானதாக இருக்கவும், இவ்வாறு திகைத்து நிற்பவர்களை அடிக்கவும் முடியாமல் ஏமாற்றமே அடைந்தனர். (யுத்த தர்மம் என்பதால்). இவர்கள் தனக்கு சம மான எதிரிகளைத் தேடி ரண பூமியில் சுற்றினர்.
மல்யுத்தம் செய்பவர்கள், மதம் கொண்டவர்கள் போல புஜ பலம் உள்ளவர்களையே விரும்பினர். வில் அம்பு என்று ஆயுதங்கள் அவர்களுக்கு தேவையாகவும் இல்லை, அதில் ஈடுபாடும் இல்லை. சஸ்திரங்களால் அடிபட்ட யானைகளின் முகத்திலிருந்து முத்துக்கள் சிதறின. அப்பொழுது தான் நாற்று நடவு முடிந்த வயல்கள் போல யுத்த பூமி காணப் பட்டது. தங்கள் புஜ பலத்தால் தங்கள் பெருமையை நிலை நாட்ட விரும்பிய வீரர்கள், கடுமையான போட்டியையே மதித்தனர்.
அங்குசத்தால் குத்தி யானைகளை கட்டுப் படுத்த வேண்டியிருந்தது. அவைகளும் கூச்சலும் ஆரவாரமுமாக இருந்த போர்க் களத்தை விட்டு விலகவே விரும்பியது போல இதே காரணமாக ஓடி விட்டன. அடிபட்ட வீரர்களின் உடல்களும், உதிரமும் சேறாக்கி வைத்திருந்த ரண பூமி, அவர்களை வேகமாக செல்ல விடாமல் திணற அடித்தன. இதற்கிடையில் ரதங்களில் செல்வோர், எக்காளமிட்டு உரத்த குரலில் எதிரிகளை அழைத்தபடி இருந்தனர். தலை துண்டிக்கப் பட்ட போர் வீரர்களை குதிரைகள் சுமந்த படியே ஓடின. ஆயுதம் இன்றி, உடல் பாகங்களும் இழந்த சிலர் பற்களால் கடித்து எதிரிகளை அழித்தனர்.
கீழே விழுந்த உடல் பாகங்கள், முகமோ, அங்கங்களோ, கழுகுகள் உடனடியாக தூக்கிச் சென்றன. குழப்பமாக யார் என்ன செய்கிறார்கள் என்பது கூட புரி படாமல் ரண களம் சடலங்களால் நிரம்பியது. காலாட் படையினர், குதிரை, யானை மேல் சென்ற வீரர்கள், அனைவருமே யுக முடிவில் சண்ட மாருதத்தால் தள்ளப் பட்டவர் போல இங்கும் அங்குமாக அலைக்கழிக்கப் பட்டனர். எதிரில் நிற்பவர் யார் என்று கூட பார்க்க நேரமின்றி அடித்துக் கொண்டனர்.
யானைகளின் நிலை பரிதாபமாயிற்று. விரட்டப் பட்டு முன்னேறி வரும் சமயம் தன் பக்கத்து வீர்களாலேயே வாளால் அல்லது ஏதோ ஆயுதத்தால் அடி பட்டன. அந்த வீரர்களை அவை தங்கள் துதிக்கையால் தூக்கி வீசின. முக்தியோ, பூமியில் அங்க ஹீனமான வாழ்வோ அவர்களுக்கு எது விதிக்கப்பட்டதோ அதை அந்த போர் வீரர்கள் அடைந்தனர். அதே சமயம் தங்கள் ஆயுதத்தால் யானைகளைத் தாக்க தயங்கியும், தவிர்க்கமுடியாமல் தாக்கி விட்டால் அதற்காக வருத்தமும் அடைந்தனர்.
கையில் திவ்யமான ஆயுதங்களுடன் குதிரையில் வந்த போர் வீரர்கள், இந்த காட்சிகளால் கலக்கம் அடைந்தனர். சமயோசிதமாக சிலர் யானைகளின் துதிக்கை வழியாகவே மேலே அமர்ந்து பாதுகாப்பாக ஆயினர். உடனே எதிர் பக்ஷத்து வீரர்கள் தந்தங்களை வேரோடு பிடுங்கி விட்டனர்.
குதிரை படையினர், எதிரி பட்சத்து குதிரைகளை தாக்கினர். அவை விழுந்தாலும் அதிகமாக கவலைப் படவில்லை. பல வீரர்கள் திடமாக குதிரையின் முதுகில் கட்டப் பட்ட ஆசனங்களில் அமர்ந்த படியே யுத்த வேகத்தில் தலை துண்டிக்கப் பட்டவர்களாக அதன் மேலேயே உடல் தங்கி விட விழுந்தோம் என்ற அபவாதம் இன்றி பிழைத்தனர். தூக்கிய கையில் வாளுடன் பார்த்தவர்கள் உயிருள்ளவனா இல்லையா என்ற பிரமையை அடைந்தனர். அருகில் இருந்த சிலர் பார்த்து கீழே விழச் செய்தாலும், குதிரைகள் அருகில் கண்ணீர் வடித்தபடி அருகிலேயே நின்றன. அதுவே தன் மேல் அடிபட்டு விழுந்தாலும் மூர்ச்சையாகாமல் எழுந்து போரில் கலந்து கொண்டன.
பூமியில் விழுந்தாலும் உடனடியாக எழுந்து நின்று பல குதிரை வீரர்கள் போரிடவே முயன்றனர். அவைகளும் தங்கள் ஜாதி குதிரைகளுடன் முட்டிக் கொண்டன.
ரதங்களில் வந்தவர்கள் நிலையும் அதுவே. உயிருடன் இருக்கிறார்களா என்பதே தெரியாமல் தான் பரஸ்பரம் அடித்துக் கொண்டனர். கைகளில் வில்லும் அம்பும் ஏந்தியபடியே பலர் உயிர் துறந்திருந்தார்கள். ஆனால் அடிபட்டவர்களை அடிப்பதில்லை என்ற யுத்த தர்மம் முழுவதுமாக பாலிக்கப் பட்டது. தேவனோ, அசுரனோ, யுத்த களத்தில் விழுந்தவன், அடித்தவனும், அடிபட்டவனும் சுவர்க லோகத்தில் சந்தித்தித்துக் கொண்டார்களோ, அங்கு அப்சரஸ்களின் உபசாரத்தால் மகிழ்ந்து இருந்தனரோ எனும் சந்தேகம் வருவது நியாயமே.
இவ்வாறு தேவர்கள் விரோதியான தாரகனின் சைன்யங்களும், தங்கள் சைன்யத்தில் ஏராளமான யானைகள், குதிரைகள், பாத சாரிகள் என்பவர்களை இழந்தாலும் யுத்தத்தை நிறுத்தவில்லை.
(இது வரை ஸ்ரீ காளிதாஸரின் குமார சம்பவம் என்ற மகா காவ்யத்தில் देवसेना प्रयाणम् -தேவ சேனா ப்ரயாணம் என்ற பதினாறாவது அத்யாயம். )
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
