- அதிரியன் நினைவுகள்-1
- அதிரியன் நினைவுகள்-2
- அதிரியன் நினைவுகள் -3
- அதிரியன் நினைவுகள் – 4
- அதிரியன் நினைவுகள் – 5
- அதிரியன் நினைவுகள் – 6
- அதிரியன் நினைவுகள் – 7
- அதிரியன் நினைவுகள் – 8
- அதிரியன் நினைவுகள் – 9
- அதிரியன் நினைவுகள் – 10
- அதிரியன் நினைவுகள் – 11
- அதிரியன் நினைவுகள் – 12
- அதிரியன் நினைவுகள் – 13
- அதிரியன் நினைவுகள் -14
- அதிரியன் நினைவுகள் -15
- அதிரியன் நினைவுகள் – 16
- அதிரியன் நினைவுகள் -17
- அதிரியன் நினைவுகள் -18
- அதிரியன் நினைவுகள் -19
- அதிரியன் நினைவுகள் -20
- அதிரியன் நினைவுகள் -21
- அதிரியன் நினைவுகள் -22
- அதிரியன் நினைவுகள் – 24
- அதிரியன் நினைவுகள் -25
- அதிரியன் நினைவுகள் -26
- அதிரியன் நினைவுகள் – 27
- அதிரியன் நினைவுகள் -28
- அதிரியன் நினைவுகள் -29
- அதிரியன் நினைவுகள் -30
- அதிரியன் நினைவுகள் -31
- அதிரியன் நினைவுகள் – 32
- அதிரியன் நினைவுகள் – 33
- இரத்தம் வரும்வரைத் தனதுடலைச் சொறிந்துகொள்ளும்…
- காட்டுப்பன்றி இலச்சினையை நாட்டுப் பன்றியெனத் தவறாகப் புரிந்துகொண்டு…
- அதிரியன் நினைவுகள் – 36
- அதிரியன் நினைவுகள் – 37
- அதிரியன் நினைவுகள் – 38
- அதிரியன் நினைவுகள் – 39
- அதிரியன் நினைவுகள் – 40
- அதிரியன் நினைவுகள் -41
- அதிரியன் நினைவுகள் – 42
- அதிரியன் நினைவுகள் – 43
- அதிரியன் நினைவுகள் – 44
- அதிரியன் நினைவுகள் – 45
- “அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 1
- “அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 2
- “அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள்
- “அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 4
மூலம் : மார்கெரித் யூர்செனார்
தமிழாக்கம் : நா.கிருஷ்ணா
குறிப்பு
வணக்கத்திற்குரிய நண்பர்களுக்கு, கிரேக்க வரலாற்றின் அடிப்படையில் அதிரியின் நினைவுகள் என்கிற இப்புதினத்தைப் படைத்த மார்கெரித் யூர்செனார் இந்நாவல் உருவாக்கத்திற்கான கூறுகளை ஒன்றிணைக்க எடுத்துக்கொண்ட முயற்சிகளையும் பிறவற்ரையும் தமது வாசகர்களுடன் பகிர்ந்துகொணடுள்ளார். தமிழ்வாசகர்களுக்கு பயனளிக்கக் கூடுமென்கிற நம்பிக்கையில், நாவலின் இப்பிற்சேர்க்கையையும் மொழிபெயர்த்துள்ளேன். நா.கிருஷ்ணா
“அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள்
குஸ்டாஃவ் ஃப்ளோபெருக்கு
இப்புத்தகத்தை என்னுடைய இருபதில் ஆரம்பித்து இருபத்தைந்து வயதுவரை ( 1924 -1929 ) மனதில் உருவாகிப் பின்னர் பல பகுதிகளாக எழுதியும் முடித்ததை, நிராகரித்து, அனைத்துக் கையெழுத்துப் பிரதியையும் அழிக்கவும் செய்தேன்;அப்போதைக்கு அது உகந்த முடிவுங்கூட.
* * *
1927 ஆம் ஆண்டில், நான் அதிகம் வாசித்த ” நேற்றுவரை கொண்டாடிய கடவுள்கள் இல்லையென்றான பிறகு, கிறிஸ்து என்கிற கடவுள் இன்னமும் தரை இறங்காத நிலையில் சிசெரோன் தொடங்கி மார்க் அரேலியர் வரையிலான தருணம் மனிதம் தனித்துவம் பெற்ற தருணம் ” என்கிற வாக்கியத்தை எனக்கும் ஃப்ளோபெர் இடையிலான கடிதப் பரிமாற்றத் தொகுப்பொன்றில் திரும்ப வாசித்தேன். வாசித்த கணத்தில் என்னுடைய வாழ்க்கையின் பெரும்பங்கை இவர்களிடமிருந்த மனிதனைப் புரிந்துகொள்ளவும், வார்த்தைச் சித்திரமாகத் தீட்டவும், அவற்றைத் தொடர்ந்து இம்மனிதனுக்கும் பிற அனைத்து மனிதர்களுக்குமான பந்தத்தை நிலைநாட்ட முயற்சிப்பதெனவும் முடிவுசெய்தேன்.
* * *
1934 இல் மீண்டும் எழுதத் தொடங்கினேன். நீண்ட தேடல்களுக்குப் பிறகு பதினைந்து பக்கங்கள் எழுதிமுடிக்க, இறுதிவடிவம் பெற்றதாக நினைத்தேன்; இல்லை. திரும்பத் தொடங்கிப் பல முறை 1934 -1937க்கிடையில் பல முறை முயற்சியைக் கைவிடுவதும் பின்னர் கையிலெடுப்பதுமாக இருந்துள்ளேன்.
* * *
இப்படைப்பை நெடுங்காலம் ஒரு தொடர் உரையாடல் வடிவத்தில் கற்பனை செய்திருந்தேன். நோக்கம், அக்காலத்தின் அனைத்துக் குரல்களையும் வாசிக்கிறவர்கள் காதில் வாங்கவேண்டும். பிரச்சினை என்னவெனில், எனது முயற்சிக்கு மாறாக உரையாடல்களினும் பார்க்க, படைப்பில் இடம்பெறும் விவரங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கி விடுகின்றன. இப்பகுதிகள் நாவலின் ஒட்டுமொத்த சமநிலையைப் பாதித்தன.
* * *
என் மரணத்தின் முகத்தை நான் பார்க்கத் தொடங்குகிறேன்” என்கிற ஒரு வாக்கியம் மட்டுமே 1934 இல் எழுதப்பட்டவைகளில் மிஞ்சியது. ஒர் இயற்கைக் காட்சிமுன் நிறுத்தப்பட்ட ஓவியன் ஓயாமல் தம்முடைய வரைபலகைத் தாங்கும் சட்டத்தை இடம் மாற்றிவைப்பதுபோல நானும் பல முறை முயற்சித்து இறுதியில் எனது படைப்பிற்கான துவக்கப் புள்ளி எதுவெனக் கண்டறிய வேண்டியிருந்தது.
* * *
வரலாற்றின் மூலம் தெரியவந்த, வரையறுத்து முழுமையாகச் சொல்லப்பட்ட (என்றென்றும் செல்லுபடியாகக்கூடிய) ஒரு வாழ்க்கையைக் கையிலெடுத்து, ஒட்டுமொத்த வடிவையும் முதற்பார்வையிலேயே தழுவ முடிந்ததுபோல செயல்படவேண்டும்; அதிலும் குறிப்பாக அந்த வாழ்வை வாழ்ந்த மனிதனின் காலத்தைக் கையிலெடுத்து அதை எடைபோட்டு, பரிசோதித்து, மதிப்பீடு செய்யக்கூடிய தருணத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இதொருவகையில் அம்மனிதன் தனது சொந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது நம்மைப்போன்றே அதே நிலையில் தன்னைக் காண்கிறார் என்பதை நிச்சயப்படுத்தும் செயல்.
* * *
என்னுடைய காலைப்பொழுதுகள் வில்லா அதிரியானாவில் கழிந்தன. அதுபோல ஒலிம்பியான் பகுதியை ஒட்டியுள்ள காப்பிக் கடைகளில் எண்ணற்ற மாலைப்பொழுதுகளைச் செலவழித்திருக்கிறேன். அதனைத் தவிர கிரேக்கக் கடற்கரைகள், ஆசியா மைனர் செல்லும் சாலைகள் ஆகியவற்றில் ஓயாமல் போவதும் வருவதுமாக இருந்துள்ளேன். இப்படைப்பு சார்ந்த என்னுடைய நினைவுகளைப் பயன்படுத்திக்கொள்ள, அவற்றை என்னிடமிருந்து இரண்டாம் நூற்றாண்டிற்கு இணையான தூரத்திற்குக் கொண்டு நிறுத்துவதும் அவசியமாயிற்று.
* * *

பதினெட்டு நாட்கள், பதினெட்டு மாதங்கள், பதினெட்டு ஆண்டுகள், பதினெட்டு நூற்றாண்டுகள, இவை காலத்துடனான என்னுடைய பயண அனுபவத்தின் அட்டவணை. அசைவற்ற பல சிலைகள் லூவ்ரு அருங்காட்சியகத்திலுள்ள ஆன்டினஸ் மாண்ட்ராகோனின் (Antinoüs Mondragone) தலையைப் போல, இறப்பு என்கிற காலத்திற்குள் இன்றைக்கும் உயிர்வாழ்ந்துகொண்டிருக்கின்றன. தலைமுறைகள் தோறும் பெயர் மாறினாலும் பிரச்சினை என்னவோ மனிதருக்கு ஒன்றுதான். இரண்டு டஜன் ஜோடி மெலிந்த கைகளும், இருபத்தைந்து தள்ளாமையும் அதிரியனுக்கும் நமக்கும் இடையறாததொரு தொடர்பை ஏற்படுத்தித் தர இன்னுலுற்றிருக்கிறார்கள்.
* * *
1937 இல், அமெரிக்காவில் முதல்முறை தங்கியிருந்தபோது, யேல் பல்கலைக்கழக நூலகத்தில் இப் புத்தகத்திற்காகச் சிலவற்றை வாசித்தேன். மருத்துவரிடம் சென்றதையும், உடல் பயிற்சிகளை வேணாடாமென்று ஒதுக்கிய பகுதியையும் அங்கு எழுதினேன். அவற்றில் சில தற்போதையை நூலில் இருக்கின்றன என்கிறபோதும் சில மாற்றங்களுடன் உள்ளன.
* * *
ஆயினும் இதைத் தொடங்கியபோது நான் மிகவும் இளம் வயதினள். நாற்பது வயதுக்கு முன்பு எழுதத் துணியக்கூடாத புத்தகங்கள் இருக்கின்றன. இந்த வயதுக்கு முன்னதாக இரு மனிதர்களுக்கிடையிலும், இரண்டு நூற்றாண்டுகளுக்கிடையிலும் நிலவும் மிகப்பெரிய இயற்கைப் பிரிவினை எல்லைகளயும், எண்ணற்ற பல்வேறு உயிரினங்களையும் தவறுதலாகப் புரிந்துகொள்ளும் அபாயம் இருக்கிறது. அதுபோல உண்மைக்கு மாறாக அரசு மற்றும் சுங்க இலாகாக்களில்சாதாரணமாகக் காண்கிற நிர்வாக உட்பிரிவுகள் அல்லது இராணுவக் காவலரண்களுக்கு நம்முடைய வயது காரணமாகத் தேவையற்ற முக்கியத்துவத்தைக் கொடுக்கவும் நேரிடும். சக்கரவர்த்திக்கும் எனக்கும் இடையிலான சரியான தூரத்தைக் கணக்கிட இத்தனை வருடங்கள் தேவைப்பட்டுள்ளன.
* * *
1937 மற்றும் 1939 க்கு இடையில் (பாரிஸில் இருந்த சில நாட்களைத்தவிர) எழுதுவதைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தேன்.
* * *
T.E. லாரன்ஸ் ஆசியா மைனர் குறித்து எழுதியவை எனது நினைவில் குறுக்கிடுகின்றன; அவை அதிரியனை நினைவூட்டுபவை. ஆனால் அதிரியன் பின்னணி பாலைவனம் அல்ல, ஏதென்ஸ் நகரமும் அதன் மலைகளும். இந்த இரு மனிதர்களையும் குறித்து எந்த அளவிற்கு நான் யோசித்திருந்தேனோ அந்த அளவிற்கு முதலில் தன்னையும் பின்னர் மொத்த வாழ்க்கையையும் வெறுக்கத் துணியும் ஒரு மனிதர் குறித்தும் யோசித்தேன். அதனைச் சக்கரவர்த்தி அதிரியன் ஊடாக வாழ்க்கையில் அனைத்து அனுபவங்களையும் ஏற்கிற அல்லது ஏதேனும் ஒன்றிரண்டை மறுத்து பொதுவில் அனைத்தையும் ஏற்கிற ஒரு மனிதனைக்குறித்து பேச நினைத்தேன். ஆக துறத்தலும் ஏற்றலும் இணக்கத்தன்மை கொண்டவை.
* * *
அக்டோபர் 1939 இல், கையெழுத்துப் பிரதி ஐரோப்பாவில் பெரும்பாலான குறிப்புகளுடன் விடப்பட்டது. இருப்பினும், யேல் பல்கலைகழகத்தில் முன்பு எழுதிய குறிப்புகளுடன் அமெரிக்காவிற்குச் சென்றேன். கைவசம் ஆண்டுகள் பலவாக மன்னர் திராயான் இறப்புக் காலத்தைக் குறிக்கும் உரோமானிய பேரரசின் வரைபடமும், 1926 ஆம் ஆண்டு புளோரன்ஸ் அருங்காட்சியகத்தில் வாங்கிய இளமையும், அழகும், சோகமும் கொண்ட ஆண்ட்டினஸ் படமொன்றும் இருந்தன.
* * *
1939 முதல் 1948 வரை திட்டத்தை கைவிட்டிருந்தேன். சில சமயங்களில் அதைப்பற்றி யோசிப்பதுண்டு, அவ்வளவுதான் அதற்குமேல் தெரிவிக்க ஏதுமில்லை. ஒரு வித அலட்சியம், எனக்கிது சரிவராது என்பதுபோல, இதற்கு முன்பு இப்படி நிகழ்ந்தது அல்ல, முதன்முறை என்பதால் இதுபோன்ற நிலைக்கு வெட்கப்பட்டேன்.
* * *
எழுதாமல் வெறுமனே இருக்கும் ஓர் எழுத்தாளனுக்குரிய விரக்தி.
* * *
தன்னம்பிக்கையையும் மனச்சோர்வையும் உணரும் நேரத்தில், கனெக்டிக்கட்டிலுள்ள அழகான ஹார்ட்ஃபோர்ட் அருங்காட்சியக கனாலெட்டோவின்(Canaletto) ரோமானிய ஓவியம், கோடையின் பிற்பகுதியில், பிற்பகல் நேரத்தில் நீல வானத்தில் நிழலாடிய பழுப்பு மற்றும் தங்க நிற பாந்தியன் ஆகியவற்றைச் சென்று மீண்டும் பார்ப்பதுண்டு. திரும்பிவரும்போது ஒவ்வொரு முறையும், இழந்தவற்றைத் திரும்பப் பெற்றதுபோன்ற உணர்வு, மனதில் கதகதப்பு.
* * *
1941 ஆம் ஆண்டில், தற்செயலாக, நியூயார்க்கில் உள்ள ஓவியப்பொருட்கள் வியாபாரியிடம், பிரனேசியின்(Piranesi) நான்கு வேலைப்பாடுகளைக் கண்டேன்; அவற்றை நானும் குஸ்த்தாவ் ஃப்ளொபெருமாக(Gustav Flaubert) வாங்கினோம். அவற்றில் ஒன்று, அதுவரை நான் அறிந்திராத அதிரியன் வில்லாவின் காட்சி; அக்காட்சி கனோபஸின் தேவாலயத்தின் உட்பகுதிக்குரியது; இங்கிருந்துதான் இன்று வாட்டிகனில் நாம் காணும் எகிப்திய பாணியிலான ஆன்டினஸ் மற்றும் பாசால்ட் பெண் சாமியார்களின் சிலைகள் எடுத்துச் செல்லப்பட்டன. அக்காட்சியில் முற்றம் வட்டவடிவமாகவும், பிளவுபட்டதொரு மண்டையோடுபோலவும் இருந்தது. அதன் விதானத்திலிருந்து குறுஞ்செடிகள் தலைமுடிபோல ஊசலாடின. நினைவுகளின் வழமையான நடைமுறை, அகவுலகின் துன்பியல் கலைவடிவம்; இம்மாயத்தோற்றத்தை பிரனேசியின் ஓரளவு நடுத்தர மேதைமை உணர முடிந்திருப்பதை, அவ்வேலைப்பாடுகள் தெரிவித்தன. பல ஆண்டுகள் இக்காட்சியைக் கிட்டத்தட்ட நாள்தோறும் நினைத்துப் பார்ப்பதுண்டு; ஆயினும் நான் கைவிட்டிருந்த எழுத்துப் பணியை நினைத்துப் பார்த்ததில்லை; காரணம் அது முடிந்த கதையென்ற எண்ணம் மனதிலிருந்தது. சிற்சில வேளைகளில் நாம் மறதியென நினைப்பதுவும் இப்படியான மாற்றுப் பாதைகளுக்கு அழைத்துச் செல்லக் கூடியவையே.
* * *
1947ம் ஆண்டு வசந்த காலத்தில், எழுதியவற்றை ஒழுங்குபடுத்தியபோது, அமெரிக்க யேல் நகரத்தில் எடுக்கப்பட்ட குறிப்புகளை எரித்துவிட்டேன்; காரணம் அவற்றால் இனி எவ்விதப் பயனுமில்லையென நினைத்தேன்.
* * *
இருப்பினும், 1943 இல் கிரீஸ் புராணம் என்ற பெயரில் நான் எழுதி, கையிவ்வா(Gaillois) பதிப்பித்த “பியூனஸ் ஏர்ஸ் பிரெஞ்சு கடிதங்கள்( Les Lettres françaises de Buenos Aires)என்கிற தொகுப்பில் அதிரியன் பெயர் இடம் பெற்றது. அதன் பின்னர் நீரில் மூழ்கி, நீரோட்டத்தினால் கொண்டுசெல்லபட்ட ஆண்ட்டினஸ் உடல் கரை சேர்க்கப்பட்டது; கடுமையாக நோய்வாய்ப் பட்டிருந்தபோது நான் எழுதிப் பிரசுரம் ஆகாத கட்டுரை (Cantique de l’Âme libre)ஒன்றில்.
* * *
இங்கு நான் சொல்வதனைத்துமே ஒருவகையில், நான் சொல்ல அஞ்சியவற்றைத் திரித்துச் சொல்கிறேனென்று எனக்குள் அடிக்கடிச் சொல்லிக்கொள்வதும் தொடர்கிறது. உண்மை, இக்குறிப்புகள் சொல்லத் தவிர்த்த இடைவெளியைச் சுட்டுகின்றன; அதற்காக இக்கடினமான ஆண்டுகளில் நான் என்ன செய்தேன், எதைப்பற்றிச் சிந்தித்தேன்; எனது பிற காரியங்கள், கவலைகள் அல்லது மகிழ்ச்சிகள், வெளிப்புற நிகழ்வுகள், தன்னையே ஓயாமல் சோதித்துக்கொண்ட அனுபவங்கள் போன்றவற்றிற்கெல்லாம் இங்கு இடமில்லை. நோயின் அனுபவங்களை, அதுபோன்ற பிறவற்றையும் அமைதியாகக் கடந்துசெல்லும் அனுபவமும் உண்டு; அவற்றில் சில அந்தரங்கமானவை;அவற்றின் அழைப்பை மறுப்பதில்லை; பிறகு காதல், அல்லது இருப்புக்கான நிரந்தரத் தேடலுக்கும் நேரம் ஒதுக்கினேன்.
* * *
தேவையற்ற கவலைகளைத் தவிர்க்கிறேன்: அக்காலத்தில் நம்மில் கணிசமான எண்ணிக்கையினர் அவரவர் முறையில் தொடர்ந்துசென்று, முடிவில் கண்ட இத்தீர்வும், இப் பிரிவும், ஆத்மாவின் இந்த இரவும் அதிரியனிடமிருந்து மட்டுமின்றி என்னிடமிருந்தே பலகாததூரம் விலகியிருக்கும் என்னை ஒன்றிணைக்கிற பாலமென்கிற வகையில் முக்கியமானவை.
* * *
இலாப நோக்கின்றி, ஒன்றைச்செய்யும்போது அது பெறுமதிக்கு உரியதாக மாறுகிறது. வழக்கமான சூழலிலிருந்து விலகி இந்நாட்களில் தொன்மக்காலப் படைப்புகளை வாசிக்கலானேன். Loeb – Heinemann பதிப்பித்த சிவப்பு மற்றும் பச்சைநிறத் தொகுதிகள் எனுடைய பிறந்த மண்ணாக உருமாறின. ஒரு மனிதனின் சிந்தனைகளை மீளுருவாக்கம் செய்ய, உகந்த முறைகளிலொன்று அவனுக்கான நூலகத்தைக் கட்டமைத்தல். ஆனால் இந்த உண்மையைக் கணக்கிற் கொள்ளாமலேயே தீபுரில் புத்தக அலமாரிகளை ஏற்கனவே நிரப்பியிருந்தேன். இனிச் செய்யவேண்டியது நோயாளி ஒருவனுடைய வீக்கமான கைகளில் பாதி பிரித்திருக்கும் நிலையில் கையெழுத்துப் பிரதியைக் கற்பனை செய்வது, அதையும் செய்தேன்.
தொடரும்…
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
