என்னுடன் ஒரு நேர்முகம் – சால் பெல்லோ

நாவல் இருக்க வேண்டிய இடத்தில், அதற்குப் பதிலாக “படித்தவர்கள்” அதைப் பற்றி என்ன கூறமுடியும் என்பதே முன்னிலையில் இருக்கிறது. நாவலைக் காட்டிலும் இதைப்போன்ற “படித்த” சொல்லாடல்களே சில பேராசிரியர்களுக்கு உவப்பாக இருக்கிறது. தேவாலயப் பிதாமகர்களில் ஒருவர் வேதாகமத்தை எதிர்கொண்ட மனோபாவத்துடன் இவர்கள் புனைவை எதிர்கொள்கிறார்கள். ஆதாமும் ஏவாளும் புதரடியில் ஒளிந்து கொண்டிருக்கையில் கடவுள் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்ததை நாம் உண்மையிலேயே கற்பனை செய்ய வேண்டுமா என்று அலெக்சாண்டிரியாவின் ஒரீஜென் (Origen) கேட்டார்.

ஷார்தா உக்ரா – சந்திப்பு

நிஜத்தில் இத்துறையில் நிறைய பெண் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பலரும் அறிவதில்லை. தொலைக்காட்சியில் அதிகமாய் அவர்களைப் பார்க்கிறோம், ஆனால் அச்சுப்பத்திரிகைகளிலும் விளையாட்டுப் பகுதியில் ஒரு பெண் பத்திரிகையாளர் என்பது இன்று ஆச்சரியமே இல்லை. ஒவ்வொரு பெரிய ஆங்கிலப் பத்திரிகையின் விளையாட்டுப் பகுதியிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள், சிலவற்றில் தலைமைப் பதவியிலும் இருக்கிறார்கள்.

சிறகு விரித்து எழுந்த பறவை – அம்பையுடன் உரையாடல்

ஆனந்தவிகடன் கதைகள் உறவுகளில் உள்ள ஏய்ப்புகள் பற்றியும், உடலை மையப் படுத்திய உறவுகளில் உள்ள ஏமாற்றங்கள், சோகங்கள் பற்றியுமான கதைகள். வாழ்க்கையைப் பற்றி மெத்தவும் அறிந்த ஒரு பெண் எழுதுவது போன்ற கதைகள். ஆனால் இளம் வயதில் வாழ்க்கையை முற்றிலும் உணர்ந்து விட்டதுபோல் நினைப்பதும் ஒரு வித முதிர்ச்சியற்ற குழந்தைத்தனம்தான்.
இந்தக் கதைகள் பிரபலமான பத்திரிகைகளின் நடையை ஒட்டியே இருந்தன. கருத்துகள் சிறிதே மாறுபட்டிருக்கலாம். ஆனால் நான் வளரும்போது இருந்த இலக்கியத்திலும் சினிமாவிலும் படித்த, நாகரீகமான பெண், படித்த ஆனால் பழமை விரும்பியான, பண்பாட்டைக் காப்பாற்றும் பெண்ணுக்கு எதிர்மறையாகவே பார்க்கப்பட்டாள். அந்த வகையில் என் கதையின் பெண்கள் தங்கள் மனத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும், குரல் இழக்காதவர்களாகவும் இருந்தாலும் அவர்களுக்குள் பெண்களை ஒடுக்கும் பல விஷயங்களுக்கான ஆதரவு இருந்தது.

கல்யாணராமனுடன் ஒரு காஃபி

அம்பையின் ஓரிரு சிறுகதைகளையும் இந்த காலகட்டத்தில் மொழிபெயர்த்தேன். சுந்தர ராமசாமியின் ‘எங்கள் டீச்சர்’ கதையையும் ஒரு போட்டிக்காக மொழிபெயர்த்தேன். ஆறுதல் பரிசுதான் கிடைத்தது.

இந்த கட்டத்தில் பல விஷயங்கள் எனக்குத் தெளிவாகியது. மொழிபெயர்ப்பு, படைப்பெழுத்துக்கு ஈடான நிறைவைக் கொடுக்ககூடியது.மொழிபெயர்ப்பு தரமானதாயிருந்தால் தேர்ந்த வாசகர்கள் அதை நாடி வருவர். ஒரு சிறந்த படைப்பின் வாசகத் தளத்தை மொழிபெயர்ப்பின் மூலம் விரிவாக்குவது முக்கியமான சமூகப் பங்களிப்பு.எதற்கும் மேலாக மொழிபெயர்ப்பு எனக்கு ஊக்கமும் உவகையும் தரும் செயல்பாடாக இருந்தது.நான் அதைத் தொடர்ந்து செய்துவருவதற்கு இவையே இன்றும் உந்துதலாக விளங்குகின்றன.