கல்யாணராமனுடன் ஒரு காஃபி

அம்பையின் ஓரிரு சிறுகதைகளையும் இந்த காலகட்டத்தில் மொழிபெயர்த்தேன். சுந்தர ராமசாமியின் ‘எங்கள் டீச்சர்’ கதையையும் ஒரு போட்டிக்காக மொழிபெயர்த்தேன். ஆறுதல் பரிசுதான் கிடைத்தது.

இந்த கட்டத்தில் பல விஷயங்கள் எனக்குத் தெளிவாகியது. மொழிபெயர்ப்பு, படைப்பெழுத்துக்கு ஈடான நிறைவைக் கொடுக்ககூடியது.மொழிபெயர்ப்பு தரமானதாயிருந்தால் தேர்ந்த வாசகர்கள் அதை நாடி வருவர். ஒரு சிறந்த படைப்பின் வாசகத் தளத்தை மொழிபெயர்ப்பின் மூலம் விரிவாக்குவது முக்கியமான சமூகப் பங்களிப்பு.எதற்கும் மேலாக மொழிபெயர்ப்பு எனக்கு ஊக்கமும் உவகையும் தரும் செயல்பாடாக இருந்தது.நான் அதைத் தொடர்ந்து செய்துவருவதற்கு இவையே இன்றும் உந்துதலாக விளங்குகின்றன.