துளிமம்

உப்பு வெண்மையிலும், மிளகு கருப்பிலும், மிளகாய் செந்நிறத்திலும் இருக்கிறது. ஏன்?  பொருட்களுக்கு தனித்த நிறங்கள் இருக்கின்றன என்பது அணுக்களின் ஒளி உமிழ்வை ஆராய்கையில் தெரிய வருகிறது.  நிறம் என்பது ஒளியின் அதிர்வெண் என்பதால், பொருட்கள் குறிப்பிட்ட சில அதிர்வெண்களிலேயே ஒளியை உமிழ்கின்றன. ஒரு பொருளை அவ்வாறு வகைப்படுத்த உதவும் அந்த சில அதிர்வெண்கள் – அதிர்வெண்களின் தொகை அப்பொருளின் நிறமாலை (Spectrum) எனப்படுகிறது. 

இயற்பியல் நோபல் பரிசு 2025

விஞ்ஞானிகள் எவ்வாறு குவாண்டம் கோட்பாட்டை யதார்த்தமாக மாற்றினார்கள் இந்த ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு, குவாண்டம் மெக்கானிக்கல் டன்னலிங் (Quantum Mechanical Tunneling) என்ற அடிப்படை கண்டுபிடிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இது மேக்ரோஸ்கோபிக் (பெரிய அளவிலான) குவாண்டம் டன்னலிங் மற்றும் மின்சார சுற்றுகளில் ஆற்றல் குவாண்டைசேஷன் (energy quantization) “இயற்பியல் நோபல் பரிசு 2025”

பைனரி பல்ஸார் என்னது?

This entry is part 5 of 12 in the series ஈர்ப்பு அலைகள்

கடைசி காலத்தில், எப்படி ஒரு நட்சத்திரம் தன்னுடைய எரிபொருளை இழக்கும் பொழுது வெடித்து, சிதறுகையில் அதன் கரு, ஒரு நியூட்ரான் நட்சத்திரமாக மாறுகிறது என்று பார்த்தோம். இவ்வாறு, சில சமயம், அருகாமையில் இருக்கும் இரு நடசத்திரங்கள், ஒரே சமயத்தில், தங்களது எரிபொருளை இழந்து, விண்வெளியில் வெடித்து, சிதறி, பாக்கி இருக்கும் இரு கருக்கள், அதாவது, இரு நியூட்ரான் நட்சத்திரங்கள், ஒரு மையத்தில் சுற்ற ஆரம்பிக்கலாம். அவ்வாறு நேர்ந்தால், அதை பைனரி பல்ஸார் என்று அழைக்கப்படுகிறது”

துளிம ஈர்ப்பியலை நோக்கிய பயணம்

தொலைநோக்கிகளின் அறிதிறன் வழியே எதிர்பாராத புதிய புவனங்களைக் நோக்குகிறோம். பொருட்களின் நுண்மையை நோக்கி நகர நகர அவற்றின் அபாரமான கட்டமைப்பினை அறிகிறோம். விண்மீன் மண்டலங்கள்(Galaxies) தோன்றிய, ஆயிரத்து நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பெருவெடிப்பு நிகழ்வு வரை கிட்டத்தட்ட நெருங்கினாலும், அதற்கு முன் உள்ள ஏதோ ஒன்றின் தீற்றலை அறிகிறோம். வெளி(Space) வளைவானது என தெரிந்திருந்தாலும் அது அதிரும் துளிமக் கூலங்களால் (Quantum Grains) நெய்யப்பட்டுள்ளது என்பதையும் முன்னறிகிறோம். 

ஓஸோன் அடுக்கில் ஓட்டை

This entry is part 13 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

வெளியேறிய குளோரின் அணு ஓஸோன் மூலக்கூறுடன் வினைபுரிந்து, ஓஸோன் மூலக்கூறை மீண்டும் ஆக்ஸிஜன் மற்றும் குளோரின் மோனாக்ஸைடாக மாற்றிவிடும். வெளியேறிய ஆக்ஸிஜனுடன் குளோரின் மோனாக்ஸைடு மீண்டும் வினைபுரிந்து, இன்னோர் ஆக்ஸிஜன் மூலக்கூறு மற்றும் குளோரின் அணு உருவாகும். ஒரு குளோரின் அணு ஒரு லட்சம் ஓஸோன் மூலக்கூறுகளை அழிக்கும் சக்தி வாய்ந்தது.

பூ கர்ப்பம்

வானில் தெரிவதற்கெல்லாம் பால் வெளிதான் வீடு என்று நினைத்திருந்தோம். நியூட்டனின் ஈர்ப்பு விதிகளின்படி அகிலம் மாறுதலற்றது, தொடர்வது, எப்போதுமே நிலை பெற்றிருக்கக்கூடும் என எண்ணினோம். ஐன்ஸ்டீனின் பொதுச் சார்பியல் கோட்பாடு காலவெளி நெசவைச் சொன்னது. அவரது கண்டுபிடிப்பு, பேரண்டம் மாறுதலுக்கு உட்பட்டது என்பதைச் சொன்னதோடு நில்லாது கருந்துளைகளை அனுமானித்தது. தற்போதைய அறிவியல் யூகித்துச் சொல்வது என்னவென்றால் இந்த புவனம் கருந்துளையில் இருந்து பிறந்துள்ளது என்பதே.

மகரந்தம்

 அகிலம் ஒரு பெட்டிக்குள் இல்லை பெட்டகத்தைத் தாண்டிச் சிந்தித்திருக்கிறார் ஜூலியன் பார்பர்.அவருடன் நடந்த உரையாடலை மேற்குறிப்பிட்ட சுட்டியில் விரிவாகப் பார்க்கலாம். காலம் முன்னோக்கித்தான் நகர்கிறது. குழந்தைகள்தான் பெரியவர்களாக ஆகிறார்கள். காலமும், இயக்கமும் மனித சிந்தனையில் இரசிக்கத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன. அறிவியல் சட்டங்களின் படி ஒரு நிகழ்வு காலத்தில் திரும்பிப்பார்க்கப்படுகையிலும் “மகரந்தம்”