நான் இலந்தை ஊறுகாய் போட போகிறேன். உனக்கு கொஞ்சம் வேணுமா? ஊறுகாய் இன்னும் தயாராகவில்லை நான் வெல்லம் மட்டும் தான் சேர்த்திருக்கிறேன்.” இப்படியாக குசுமும் நானும் மறுபடியும் பேச ஆரம்பித்தோம். குசும் இலந்தை ஊறுகாயை என் கையில் தந்ததுமே என்னுடைய கோபத்தையும் வலியையும் நான் மறந்து போனேன். நாங்கள் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அதற்குப் பிறகு நான் குசுமின் அறையை ஒட்டியிருந்த மாக்கனின் அறைக்குச் சென்றேன். அவளுடைய அறையில் நூற்றுக்கணக்கான பொம்மைகள் இருந்தன
Tag: அனுராதா க்ருஷ்ணசுவாமி
வாழ்த்துகள் – வினோத் குமார் சுக்லா
திரு வினோத்குமார் சுக்லா ராஜ் நந்த் காவ் (சத்தீஸ்கர்) இன்னும் கிராமத்தில் பிறந்தார். இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு 1971 ஆம் ஆண்டு வெளிவந்தது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் கழித்து 1981 இல் இவரது இரண்டாம் கவிதை தொகுப்பு வெளியானது. வேளாண்மையில் முதுகலை பட்டம் பெற்ற இவர் ராய்ப்பூர் வேளாண்மைக் கல்லூரியில் சில காலம் ஆசிரியராக பணியாற்றினார். இவருடைய கவிதை தொகுப்புகள் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
அம்மி அஸ்கரி
இந்த நாடகம் பேகம் அக்தரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை கோர்வையாக சொல்லிச் செல்கிறது. வசனம் முடிகிற இடத்தில் பாடல் தொடங்கி விடுகிறது. சில இடங்களில் வசனத்தின் கூடவே பாடல் ஒலிக்க ஆரம்பித்து விடுகிறது. நடிகர் பாடகர் இருவருக்குமே இது மிகவும் சவாலான விஷயம்தான். உரையாடல்களின் வாயிலாக சம்பவங்களை காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு புதிய முயற்சி. நல்ல முயற்சியும் கூட.
டெர்மினல்
ட்ராமின் ஜன்னல் கம்பிகளின் மீது கனத்த போர்வை போல தூசு படிந்திருந்ததில் நடைபாதையில் இருந்த மரம், விளக்குக் கம்பம் மற்றும் தெருவில் சென்று கொண்டிருந்த மனிதர்கள் எல்லாம் ஏதோ பழைய படத்தின் மீது படிந்திருக்கும் அழுக்கைப் போல வழுக்கியபடி மங்கலாகக் காட்சியளித்தார்கள். ஒவ்வொரு நிறுத்தத்திலும் சில பயணிகள் இறங்கினார்கள். நடத்துநர் மணி கட்டப்பட்டிருந்த கயிற்றை இழுக்கும்போதெல்லாம் ட்ராம் விக்கலுடன் முன்னால் சென்று நின்றது.
ஒன்றரை அங்குலம் மேலே
வெகு நாட்களாக காஸ்ட்டோபி போலீஸ் அவளை கண்காணித்து வந்ததாக பிறகு எனக்கு தெரியவந்தது. அவளிடம் சட்டத்துக்கு விரோதமான சில நோட்டீஸ்களும் துண்டு பிரசுரங்களும் இருந்ததாகத் தெரிய வந்தது. இவை அந்நாட்களில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக மக்களிடையே விநியோகிக்கப்பட்டன. ஜெர்மனி அதிகாரிகளின் பார்வையில் இது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்பட்டது.
