சுகாந்தொ பட்டாச்சார்யா கவிதைகள்

அக்குழந்தையின் நம்பிக்கையூட்டும் வரும் காலத்தின் அறிகுறிகளை
என்னால் பார்க்க முடிகிறது.
புதிய குழந்தை வந்து சேர்ந்திருக்கிறாள்.
நாம் அவளுக்கான இடத்தைத் தயார் செய்ய வேண்டும்;
பின் இந்தப் பழம்பூமியின்
சிதைந்தழிந்த தரிசு நிலத்துக்குள் நகர்ந்து விட வேண்டும்.

யசோதராவின் புன்னகை

என்னையறியாமலே அனிச்சையாய் எழுந்த என் முகத்தின் கேள்விக்குறியைக் கண்டுகொண்ட அந்த சுட்டிப்பெண் சொன்னாள்: “ஆன்ட்டி! எனக்கு எட்டு வயசாக இருக்கும்போது எங்கப்பா திடீர்னு வீட்டை விட்டுப்போய் சன்யாசம் வாங்கிண்டுட்டார். என் தங்கைக்கு அப்போ ஆறு வயசு. அவர் இப்போ எங்கே என்று யாருக்கும் தெரியாது.”

ஜீபனானந்தா தாஸ் கவிதைகள்

ஒரு பனிக்கால அந்தியில்,
பரிச்சயமானவரின் மரணப்படுக்கைக்கு அருகே
குளிர்ந்த கமலாப்பழத்தின் மிருதுவான சுளையாக
வருவேனா.

கிருஷ்ணா பாஸு கவிதைகள்

அம்மா, நீங்களாவது என்னிடம் சொல்லுங்கள்
என்னுடைய வீடு என்பது எங்கே?
பெண்கள் தங்களுடையது என்று ஒரு வீட்டை
எங்கேனும் கோர முடியுமா?

கேதார்நாத் சிங் கவிதைகள்

தரை மேல் என் காலை அப்போது தான் தூக்கியிருந்தேன்
குறுஞ்சிறு வார்த்தையொன்று
குருதியில் குளித்து
எங்குமில்லாததிலிருந்து
என்னை நோக்கி மூச்சிரைக்க
ஓடி வந்து உரைத்தது-
”வா, உன்னை நான் அழைத்துச் செல்கிறேன் வீட்டுக்கு ”