kamagra paypal

முகப்பு » தொகுப்பு

அரசியல், கட்டுரை, தத்துவம் »

உலகம் இன்று நம் கையில்

ஒரு சாதுரியத் தொலை பேசி இருந்தால் ஏதாவது நாட்டில் நடக்கும் ஏதோ ஒரு வினோத சம்பவத்தையாவது பார்த்துக் கொண்டிருக்கலாம். ஓய்வாக அமர்ந்து யோசிப்பது என்பது இல்லாததாக, செய்ய முடியாததாகக் கூட ஆகி விட்டது. சிகரெட் குடிப்பவர்களுக்குக் கையில் அது இல்லாது நிற்கக்கூடத் தெரியாது என்று கிண்டல் செய்வார்கள், அதே போலக் கையில் ஏதோ ஒரு காட்சிக்கருவி இல்லாது நடக்க, இருக்க முடியாத மக்களாகிக் கொண்டிருக்கின்றனர் உலக மக்கள். அடுத்து மூச்சு விடக் கூட ஏதேனும் கருவி தேவைப்படும் நிலைக்கு வருவார்களோ என்னவோ. இப்படிப்பட்ட கருவிகளில் நாம் எல்லாரும் பார்க்கக் கூடிய உலக சம்பவங்களில், அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம் நேற்றைய வினோதம். அங்கு ஒரு புது அதிபர் நாடாளும் பதவியை நேற்று ஏற்றார். அவர் வழக்கமான அரசியல்வாதி இல்லை. திடீர் மழையில் முளைத்த காளானா என்றால் அத்தனை புது நபர் இல்லை, … டானல்ட் ட்ரம்ப் என்கிற ரியல் எஸ்டேட் அதிபர்.

உலகச் சிறுகதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு »

சமூகவியல்

மற்றவர்கள் எதை எல்லாம் ஒளித்தனரோ, அவற்றை ஜூன் கொடுத்தாள்; அவள் வாய் விட்டுச் சிரித்தாள், தன் பயங்களைப் பற்றிப் பேசினாள். எல்லெனுக்கு நினைவிருந்த நாட்களில் சிறப்பானது ஒன்று, அன்று ஜூன் அடுக்கத் தக்கனவாக உருவமைக்கப்பட்ட உலோக நாற்காலி ஒன்றில் அருள் வாக்கு கூறும் பெண் ஒருத்தியைப் போல உட்கார்ந்திருந்தாள், அவளுடைய ஒளி ஊடுருவும் கண்ணிமைகளின் பின்னே பார்வை இல்லாத கண்பாவைகள் தாவி அலைந்தன. ‘என்னால் நம்பவே முடியவில்லை, நான் கர்ப்பமாகி இருக்கிறேன் என்பதை,’ என்றாள் அவள். ‘என்னை நான் பார்த்ததே இல்லை என்பதால் இப்படி இருக்கும் போலிருக்கிறது.’

நிதி, பொருளாதாரம், மகரந்தம், வரலாறு »

மகரந்தம்: கோஹினூர் வைரம்; சீனப் பொருளாதாரம்

வழக்கின் நோக்கம், இங்கிலாந்தின் அரசை கோஹினூர் வைரத்தை பாகிஸ்தானுக்குத் திருப்பிக் கொடுக்கச் செய்வதுதான். கோஹினூர் வைரத்துக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால், அந்த வாதங்கள் பொருட்படுத்தத் தக்கனவாக இராது- நம் பார்வையில். ஏனெனில், அதை சீக்கிய அரசர் ரஞ்சித் சிங்கிடமிருந்துதான் பிரிட்டிஷார் எடுத்துச் சென்றனர். ஆனால் இதே வைரத்துக்கு ஆஃப்கானிஸ்தானும் உரிமை கொண்டாடுகிறது. அது எப்படிஎன்றால், நாதிர்ஷா என்னும் ஈரானிய ஆக்கிரமிப்பாளன் அதை இந்தியாவிலிருந்து பறித்துச் சென்றான், பிறகு நாதிர் ஷாவின் ஆட்சி வீழ்ந்த பின்னர், ஆஃப்கன் அரசர் ஒருவர் அதை பர்சியர்களிடமிருந்து பறித்தார். அவர் ஆட்சி வீழ்ந்த போது…

எதிர்வினை, தத்துவம் »

பேச்சிப்பாறைகளும் பண்பாட்டுப் படுகைகளும் – பாலகங்காதரா நூல் அறிமுகம் குறித்துச் சில எதிர்வினைகள்

நம் பண்பாடோ, பெரும் சிவத்தை, பரம சிவனையே பித்தன் என்று கொண்டாடுகிற ஒரு பண்பாடு. அதை பெருவாரி மக்கள் கேள்வி கேட்டதாகவோ, எள்ளி நகைத்ததாகவோ எனக்குத் தெரியவில்லை. பித்தனிடம் உள்ளது கருவி நோக்கங்களை எல்லாம் தாண்டிய ஒரு பெருந்துலக்கமான அறிவு என்று நம் பண்பாடு வெகுகாலமாக அறிவதோடு, அங்கு பெறக்கூடியதை ஞானமாகவும், விடுபெற்ற அறிவாகவும் ஏற்றுக் கொண்டாடி வருகிறது.

உயிரியல் »

கொன்று தீர்க்கும் நுண்ணுயிர்கள் – வரமும், சாபமும்

உலகிலேயே முதல் குழந்தை, முதல் தடவை இப்படிப் பட்ட சிகிச்சைக்கு ஆளாக்கப்பட்டவளும் இந்தப் பெண். இது புற்று நோய் சிகிச்சையில் மனிதருக்குச் சமீப காலத்தில் கிடைத்து வரும் சில வெற்றிகளின் துவக்கம். இங்கிருந்து மனித குலம் பல வகைப் புற்று நோய்களைத் தோற்கடிக்கும் காலத்துக்கான பாதை தெரியத் துவங்கி இருக்கிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

இலக்கியம் »

அவர்கள் வந்தனர் எதிர்காலத்திலிருந்து

இன்றைய புனைவுகளில் தொழில் உற்பத்தி முறை குறித்து அத்தனை வருணிப்பு இல்லை என்றாலும் அது ஆங்காங்கே தொடர்ந்து பேசப்படுகிறது. பொருட்களின் வருணனையோ பக்கங்களெங்கும். அவற்றின் பயன்முறை, தாக்கம் போன்றனவே கதையின் எலும்புக் கூடு. மனித லாகவமும், தீர்மானங்களும் முன்னத்தனை கதைவெளியை நிரப்பவில்லை, மாறாக கருவிப் பயன்பாட்டின் விளைவுகள்- மனித உடலில், மனதில், அறிவில், சமூகத்தில், காலத்தில் என்று ஒவ்வொரு வெளியாக, ஒவ்வொரு ஊடகமாகத் தொட்டுச் செல்லுமிந்தக் கதைகள்- என்னவென்று காலில் தைக்கும் நெருஞ்சி முள்ளாகவோ, ஊனை ஒழிக்கும் அணு ஊசியாகவோ எழுதப்படுகின்றன.