மான்பெண்

பெண்கள் தொடரந்து வர ரேயும், ஜாக்கியும் காரை விட்டு இறங்கினார்கள். அடர்த்தியான கருவாலி செடி புதர்களின் வழியே சென்று, சிறு கரையில் சறுக்கிக் கொண்டே இறங்கி ஓடையை அடைந்தார்கள். ஆண்கள் இருவரும் நீரின் விளிம்பில் நின்றார்கள் ஆனால் பெண்கள் நடன ஆடைகளுடன் தயக்கமின்றி நீரினுள் இறங்கிச் சென்றனர். குனிந்து நீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டு எப்போதும் போல அவர்களுடைய மொழியில் பேசிக் கொண்டனர். இளைஞர்களும் தங்களின் டென்னிஸ் காலணிகளை கழற்றிவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் தொப்பியை திணித்து கொண்டு அப்பெண்களை தொடர்ந்து நீரினுள் சென்றார்கள்.