ராமர் கோவில் கருப்பனுக்கு இரு கிடாக்கள் செய்த உயிர்தியாகத்தில் பிறந்த பிள்ளை காணாமலானது குறித்து அவர் தாய் நியாயம் வேண்டினார். வெள்ளானைக்கோட்டை ஊர்க்காரர்கள் எண்திசையும் கடுகி முடுகி தேடுகையில் திருமண விருந்தின் பின்விளைவாக ஊருணி சென்றிருந்த மணியின் தாத்தா திரும்பி வந்து நிகழ்வைக் கேள்வியுற்று சற்றே சிந்தித்த அவர் வெடித்த பலாவின் சுளையென மீசைக்குள் தெரிந்த வாய் விட்டு சிரித்து இருவர் தன்னைப் பின்தொடர ஆணையிட்டு “பொறவாசலில் சோறாக்குமிடத்திற்கு” வந்து இரண்டடி விட்டமும், மூன்றடி உயரமும் கொண்ட சேமியா பாயாச வட்டைக்குள் பார்க்கும்படி சொன்னார்.
Tag: தமிழகம்
தமிழகம்-தமிழ்நாடு சர்ச்சை பற்றி
உணர்வு என்பதே ஒரு அற்புதமான சொல். நேர்மறையான, உன்னதமான, நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் அகத்தை ஊடுருவும் பொழுது ஏற்படுவதே உணர்வு. தொன்மையில் இருந்தது போலன்றி தற்காலத்தில் சொற்கள் அவரவர் விருப்பதிற்கேற்றவாறு பயன்படுத்தப்பட்டு பொருளின் அடர்த்தி நீர்த்துப் போய்விட்டது. பள்ளி செல்லும் வயதில், 80களின் முற்பகுதியில், மதுரை மேம்பாலங்கள் அனைத்திலும் “இன உணர்வு கொள்” என்று கரியினால் எழுதப்பட்ட வாசகத்தை பார்த்தபடி கடந்ததுண்டு.
