அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 2

This entry is part 2 of 10 in the series கணினி நிலாக்காலம்

இப்படி உள்ளேற்றப்படும் தரவுகள் ஒரு ஃப்ளாப்பி டிஸ்க் -கில் (floppy disk) பதிவு செய்யப்படும். டிஸ்க் என்றவுடன் ஏராளமான தேக்கம் (storage) இருப்பதாக நினக்காதீர்கள். ஒரு ஃப்ளாப்பி டிஸ்கில் 80 -களின் ஆரம்ப கட்டத்தில் வெறும் 256 KB மட்டுமே சாத்தியம். இந்தத் தரவு உள்வாங்கும் எந்திரங்கள், அவை முற்றிலும் நிரம்பிவிடாமல் பார்த்துக் கொண்டு, வித்தியாசமான ஒலிகள் மூலம் இயக்கியிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும்.