வசந்தத்தை வண்ணங்களைக் கொண்டு வரவேற்கும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களின் படங்கள் இங்கே.
Category: புகைப்படத்தொகுப்பு
2013 சோனி உலக புகைப்பட விருதுகள்
புகைப்படங்கள் 170 நாடுகளிலிருந்து வந்தன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை.
காலம், தேசம், புகைப்படம்
தினம் ஒரு புகைப்படமென்ற கணக்கில் உலகின் பல நாடுகளின் சுவரஸியமான தருணங்கள் இந்த பக்கத்தில் கிடைக்கின்றன. காலம், தேசம் கடந்த மக்களின் வாழ்க்கை இதில் பதிவாகியுள்ளது.
அகச்சிவப்பு ஒளிப்படங்கள்
David Keochkerian என்பவர் எடுத்திருக்கும் அசாத்தியமான வண்ணச்சேர்க்கையை வெளிப்படுத்திய அகச்சிவப்பு ஒளிப்படங்களின் தொகுப்பை ஸ்லேட் இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது. அவற்றை இங்கே பார்க்கலாம்.
2012-இன் சிறந்த இயற்கைப் படங்கள்
இயற்கையின் பல்வேறு இழைகளைக் காட்டும் அருமையான ஒளிப்படங்களின் அணிவகுப்பு இந்த இணைப்பில்!
நிலப்பரப்புகளின் வண்ணங்கள்
நேஷனல் ஜியோகிரபிக் நிறுவனம் சமீபத்தில் நடத்திய புகைப்பட போட்டிக்கு வந்த புகைப்படங்களில் சில இங்கே.
கானுயிர் புகைப்படங்கள்
BBC நிறுவனமும் தேசிய வரலாற்று அருங்காட்சியகமும் கானுயிர் புகைப்படங்களுக்கான ஒரு சர்வதேச அளவிலான ஒரு போட்டியை அறிவித்தது. 98 நாடுகளிலிருந்து 48,000 புகைப்படங்கள் குவிந்தன. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 10 புகைப்படங்கள் இங்கே.
அகத்தின் அழகு
நம் வாழ்க்கை அனுபவங்கள் நம் மனதை மட்டுமன்றி புறத்தோற்றத்தையும் மாற்றும் வலிமிஅகொண்டவையா? இதோ ஆஃப்கானிஸ்தானத்தில் போரில் ஈடுபட்டுத் திரும்பிய ராணுவவீரர்களின் படங்கள் – போர் அனுபவத்துக்கு முன்பும், அதன் பின்பும். பனிரெண்டே மாதங்களில் அவர்கள் முகத்தின் மாற்றங்கள் என்ன சொல்கின்றன? அந்தக் கண்களில் என்ன தெரிகின்றன? http://www.slate.com/blogs/behold/2012/10/17/claire_felicie_s_photographs_marines_faces_before_during_and_after_afghanistan.html
பார்வையிழந்தவர்களின் ஒளிப்படங்கள்
இந்த வாரம் தில்லி ஃப்ரெஞ்ச் கலாசார மையத்தில் பார்வையிழந்தவர்கள் மற்றும் பார்வைக் குறைபாடு உடையவர்கள் எடுத்த ஒளிப்படங்களின் கண்காட்சி நடைபெறுகிறது. இப்படங்களில் சிலவற்றின் தொகுப்பை பிபிஸி இணையதளம் வெளியிட்டிருக்கிறது. ஒலியின் நகர்வு, தொடுவுணர்வு ஆகியவற்றைக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கும் இப்படங்கள் வெகு நேர்த்தியாக இருப்பதோடு, பார்வையிழந்தவர்கள் உலகைப் பார்க்கும் விதத்தை “பார்வையிழந்தவர்களின் ஒளிப்படங்கள்”
பாதசாரிகளின் புகைப்படங்கள்
நேஷனல் ஜியோகிரபிக் நிறுவனம் பயணப் படுவோரின் புகைப்பட போட்டி ஒன்றை நடத்தி அதன் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. பிரமிக்க வைக்கும், லயிக்க வைக்கும் காட்சிகள். இங்கே பார்க்கலாம்.
அபார புகைப்படங்களும் ஒரு புதிர் போட்டியும்
போட்டியை நடத்துவது சொல்வனம் அல்ல, வேறு ஒரு ஆங்கில பத்திரிக்கை. கூகுள் நிறுவனத்தின் வரைப்படங்களை அளிக்கிறது. அப்படங்களில் உள்ள நிலப்பரப்பு எந்த நாட்டை சேர்ந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். சுவரஸியமான விளையாட்டு. ஆச்சரியமான நிலப்பரப்புகள். முழுத் தொகுப்பையும் இங்கே காணுங்கள்.
24 மணி நேரம்
ஒரு 24 மணி நேரத்தில் உலகின் பல பகுதிகளிலும் உள்ள மக்களின் வாழ்வை பதிவு செய்யும் ஒரு படத் தொகுப்பு இங்கே.
மேலிருந்து…
நம் உலகை கொஞ்சம் உயரத்திலிருந்து பார்க்கலாம். இங்கே செல்லுங்கள்.
World Earth Day 2012
World Earth Day 2012 குறித்த சில அருமையான ஒளிப்படங்களை இங்கே பார்க்கலாம்.
ராணுவ தருணங்கள்
அமெரிக்க ராணுவப் பயிற்சியின்போது அவ்வீரர்களின் மனநிலைகளை காட்சிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு ஒன்று இங்கே. மனிதர்கள் மாறுபடலாம். உணர்வுகள் ஒன்றுதான்.
ஹோலி – இந்தியாவின் வண்ணங்கள்
இந்தியாவின் பன்மைத் தன்மையை, கலாச்சார மேன்மையை இன்றளவும் வலியுறுத்தி வரும் ஹோலி பண்டிகையின் புகைப்படத் தொகுப்பு இங்கே.
உலக ஒளிப்படப் போட்டி – 2012
ஒவ்வொரு வருடமும் உலகின் சிறந்த ஒளிப்படங்களுக்கான ‘World Press Photo Competition’ போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜப்பான், கொரியா, செனகல், அமெரிக்கா என உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறந்த படங்கள், பல்வேறு பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
2012-ஆம் ஆண்டின் இரும்பு மனிதர்
மானுடம் பல விண்ணைத் தொடும் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்களை சாதித்துள்ளது. ஆனால், இந்த தொழில்நுட்பங்களை அனுபவித்துக் கொண்டே தன்னுடைய குறைபட்ட அறிவையும் மானுடம் அவ்வப்போது வெளிப்படுத்தும். அத்தகைய கோணங்கித்தனம் ஒன்றை இந்த புகைப்படத் தொகுப்பு ஆவணப்படுத்துகிறது. தங்களை வலுவானவர்களாக முன்னிருத்த மனித இனம் தான் எத்தனை பாடுபடுகிறது? இதனூடேயே “2012-ஆம் ஆண்டின் இரும்பு மனிதர்”
2011 – ஒரு பார்வை
இந்த வருடமும் வழக்கம்போல் மகிழ்ச்சிகள், நிறைவேறாத எதிர்பார்ப்புகள், சோகங்களுக்கிடையே கழிந்தது. பல இடங்களில் நடந்த பல்வேறு இது போன்ற நடவடிக்கைகளை காட்சிப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு இங்கே : மேலும் புகைப்படங்கள் : 1. http://www.theatlantic.com/infocus/2011/12/2011-the-year-in-photos-part-1-of-3/100203/ 2. http://www.theatlantic.com/infocus/2011/12/2011-the-year-in-photos-part-2-of-3/100204/
நேஷனல் ஜியோகரபிக் புகைப்படப் போட்டி
பல்வேறு இயற்கை, மனிதர்கள், இடங்களை அழகிய முறையில் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள். தவறவிடக் கூடாதவை. அவற்றை இங்கே பார்க்கலாம்.
7 பில்லியனும், மாசடைந்த சூழலும்
உலக ஜனத்தொகையின் எண்ணிக்கை 7 பில்லியனை தொட்டு, தொடர்ந்து வெற்றிகரமாக முன்னேறி வருகிறது. ‘வருங்காலத்தில் இன்னும் ஜனத்தொகை அதிகமாகும். இவர்கள் அனைவருக்கும் நம்மால் உணவளிக்க முடியுமா?’ போன்ற வேள்விகள் 60-களிலேயே கேட்கப்பட்டு அந்த கேள்விகள் தற்போது அர்த்தமற்று போயுள்ளன. தற்போது நிலவி வரும் வறுமை நிச்சயம் விவசாயத்தின் குறைபாடல்ல. “7 பில்லியனும், மாசடைந்த சூழலும்”
நீர் சூழ் பேங்காக்
பருவ மழையால் வெள்ளம் பெருகி பாங்காக் நீர் நிரம்பிக் கிடக்கிறது. அடுத்த ஒரு மாதத்திற்கு வெள்ள அளவு குறையாது என்று அரசு சொல்லிவிட்டது. இத்தகைய சூழலில் பாங்காக்கின் வெவ்வேறு தருணங்களை அழகாக நம்முன் வைக்கும் படத் தொகுப்பு. இங்கே. தவறாமல் பார்க்கவேண்டி தொகுப்பு.
காஷ்மீர்
காஷ்மீர் குறித்து இந்திய/உலக பிரக்ஞையில் பதிந்துள்ள பிம்பம் என்பது ரத்தம் சார்ந்தது. அது யாருடைய ரத்தமாகவும் இருக்கலம. அதன் இயற்கை அழகு பெரும்பாலும் யாருக்கும் நினைவிற்கு வருவதில்லை. இந்தப் புகைப்படங்கள் காஷ்மீரின் பல்வேறு அழகான தருணங்களை காட்சிப்படுத்துகிறது.. அதன் பதட்டத்தையும். இந்தியாவின் கிரீடமான காஷ்மீர் தனது அழிவுகளிலிருந்து மீண்டு “காஷ்மீர்”
பெரு எனும் நாடு
பெரு நாடு குறித்தும், அதன் புகழ்பெற்ற “மச்சு பிச்சு” குறித்தும் நீங்கள் அறிந்திருக்கலாம். அந்நாட்டை பல கோணங்களில் ஆவணப்படுத்தும் புகைப்படத் தொகுப்பு இங்கே.
ஐரீன்
சமீபத்தில் அமெரிக்காவை தாக்கிய ஐரீன் புயலை ஒட்டி மக்களின் பதட்டங்களையும், மகிழ்ச்சிகளையும் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் இங்கே.
இசை, கேளிக்கை, வாழ்க்கை
கடந்த சில வாரங்களாக உலகமெங்கும் நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள், அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மக்களின் கொண்டாட்டங்களை வண்ண மயமாக காட்சிப்படுத்திய புகைப்படங்கள் இங்கே.
தெற்கு சூடான்
நீண்ட போராட்டத்திற்கு பிறகு தெற்கு சூடான் சுதந்திர காற்றை சுவாசிக்கிறது. தங்களுக்கென ஒரு நாட்டை பெற்ற அந்த மக்களின் மகிழ்ச்சி தருணங்கள் இங்கே புகைப்பட ஆவணமாய் :
ஸ்டீவ் மக்கரி
ஸ்டீவ் மக்கரி உலகமெங்கும் புகழப்படும் புகைப்படக் கலைஞர். மனிதர்கள், அவர்களது அவலங்கள், தினசரி நடப்புகளை உள்ளடக்கியது அவரது கலை. அவரது ”ஆப்கன் சிறுமி”(Afghan Girl) எனும் புகைப்படம் உலகை உலுக்கிய ஒன்று. அவரது இன்ன பிற சிறந்த புகைப்படங்களின் தொகுப்பு இங்கே.
சிலியை மூடிய எரிமலை வெடிப்பு
சிலியில் நிகழ்ந்த சமீபத்திய எரிமலை வெடிப்பு, அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது. விமானத்தின் நேர தாமதங்களை மட்டும் பேசும் ஊடகங்களிலிருந்து விலகி சாதாரண மக்களின் துன்பத்தையும் பதிவு செய்திருக்கிறது இந்த புகைப்படத் தொகுப்பு.
உலக அருங்காட்சியக தினம்
கடந்த மே 17 உலகமெங்கும் உலக அருங்காட்சியக தினமாக கருதப்படுகிறது. அதையொட்டி ஒரு புகைப்படத்தொகுப்பு இங்கே.
உலக ஊடக சுதந்திர தினம்
உலகமெங்கும் ஒவ்வொரு ஆண்டும் மே 3-ஆம் நாள் உலக ஊடக சுதந்திர தினம்(World Press Freedom Day) என்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி Slate இதழ் உலகமெங்கும் இருக்கும் பத்திரிக்கையாள நிருபர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை கெளரவிக்கும் விதமாக புகைப்படத் தொகுப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதை இங்கே காணலாம்.
’பறவைப் பார்வை’ ஒளிப்படங்களின் வரலாறு
உலக பூமி நாளை (World Earth Day – ஏப்ரல் 23) முன்னிட்டு ஸ்லேட் இணையதளம் ஒரு சுவாரசியமான ஒளிப்படங்களின் தொகுப்பைத் தந்திருக்கிறது. அதில் வான்வெளியிலிருந்து எடுக்கப்பட்ட ஒளிப்படங்களின் வரலாற்றை உதாரணப் படங்களோடு தந்திருக்கிறது. அதைப் பார்க்க, படிக்க இங்கே செல்லுங்கள்.
வைரம் தேடிய மண்
மண் அனைத்தையும் வெற்றி கொள்ளும். மண், காலத்துடைப்பான். மண்ணின் நீரினும் சீரிய ஆற்றொழுக்குக்குக்கு கரைகள் கிடையாது, அணைபோட்டு மாளாது. மண்ணில் பிறந்தோம், மண்ணில் இருந்தோம், மண் நமக்கு இல்லிடமும் ஆகும். நம் காலடியில் கிடக்கும் மண்ணினும் வலியது எதுவும் இல்லை- அதன் உறுதியான வெற்றியைச் சுட்டுகிறது நமீபியாவின் கோல்மான்ஸ்கோப் “வைரம் தேடிய மண்”
ஆப்பிரிக்க புஷ் யானைகள்
ஸ்மித்சொனியன் இன்ஸ்டிட்யூட்டின் இணைய தளம் ஸ்மித்சோனியன் வைல்ட். இங்கு உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு சரணாலயங்களில் காமேராவைப் பொறியாக வைத்து எடுத்த இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்களை இணைத்திருக்கிறார்கள். இயற்கை சூழலில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் சிறப்பான வகைகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கென்யாவில் எடுக்கப்பட்ட ஆப்பிரிக்க புஷ் யானைகளின் புகைப்படங்கள் எவ்வளவு “ஆப்பிரிக்க புஷ் யானைகள்”
தொலைபேசி – ஒரு பரிணாமம்
90-களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் பொது தொலைபேசியகத்தில் ஒரு பெரிய வரிசை காத்திருக்கும். ஏனெனில் தொலைதூர அழைப்புகளுக்கு(STD) ஒன்பது மணிக்கு மேல் விலை சற்று குறைவு. ஓசி விகடன், ஓசி குமுதம் இவற்றோடு ஓசி டெலிபோன் வாய்ப்புக்காக கழுகாய் திரியும் பக்கத்துவீட்டுகாரர்கள் இன்னும் நினைவில் உள்ளனர். ஆனால் “தொலைபேசி – ஒரு பரிணாமம்”
World Press Photo போட்டியில் வென்ற ஒளிப்படங்கள்
உலகெங்கும் நன்றாக அறியப்பட்ட இப்போட்டிக்கு ஒரு லட்சத்து சொச்சம் ஒளிப்படங்கள் அனுப்பட்டிருக்கின்றன. அதிலிருந்து வெற்றிபெற்றிருக்கும் அந்த ஒரு படம்தான் எத்தனை விஷயங்களைச் சொல்லாமல் சொல்லிவிடுகிறது! இப்போட்டியில் கல்கத்தா நகர வாழ்க்கையை பிரதிபலிக்கும் ஒரு படமும் வெற்றிபெற்றிருக்கிறது. படங்களை இங்கே காணலாம்: http://www.boston.com/bigpicture/2011/02/world_press_photo_winners.html
மத்தியக்கிழக்கில் வேகமாகப் பரவும் கலகம்
துனிஷியா, லெபனான், எகிப்து என்று தொடர்ந்து மக்கள் கலகம் மத்தியக் கிழக்கு நாடுகளில் பரவி வருகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பிரச்சனை. சுதந்திரம், பொருளாதாரம், மதம், இன்னும். கீழே இந்த மூன்று நாடுகளிலும் நடைபெற்ற கலகத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
டிராம் வண்டிகள்
டிராம் வண்டிகள் நவீன யுகத்தின் ஒரு முக்கியமான சின்னம். பல நாடுகளிலும் டிராம் வண்டிகள் பல பத்தாண்டுகளாக உபயோகத்தில் உள்ளன. காலத்தோடு அது பல வடிவங்களை அடைந்திருக்கிறது. பயணங்களின் அனுபவங்கள் நீடித்து நிற்பவை. பயணம் செய்த வாகனமும் அவ்வகையில் முக்கியமானவை. இங்கு பல்வேறு காலகட்டங்களில் பல நாடுகளில் உபயோகப்படுத்தப்பட்ட “டிராம் வண்டிகள்”
2011 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்
புதிய திறப்பு, புது துவக்கம் குறித்த மானுடத்தின் காதல் அளவற்றது. கடந்த கால நிகழ்வுகளில் பெற்ற பாடங்களிலிருந்து பெற்ற புதிய கண்ணோட்டங்கள், வருங்காலத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வகைசெய்கிறது. அத்தகைய ஒரு புதிய துவக்கத்தை மானுடம் மிக கோலகலமாக கொண்டாடியுள்ளது. அதன் புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம். வாசகர்களுக்கு புத்தாண்டு “2011 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்”
ஒளி விளையாட்டு
இயற்கை விளையாட்டின் ஒவ்வொரு துளியுமே பிரம்மாண்டம்தான். அந்த துளியின் ஏதோவொரு தெறிப்புதான் மானுடம் என்று கருத இடமுண்டு. Aurora borealis எனப்படும் இயற்கை நிகழ்த்தும் ஒளியின் அற்புத நிகழ்வை நீங்கள் அறிந்திருக்கலாம். மிக நீண்ட தூரத்திற்கு மேகத்தில் ஒளி தன்னுடைய பரப்பை நிகழ்த்திக் காட்டும். சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டில் “ஒளி விளையாட்டு”
போதையில் சிதையும் ரியோ
போதை மருந்து அனைத்து நாட்டிலும் பிரச்சனை தான். ஆனால் போதை மருந்துக் கடத்தல்காரர்களின் இரண்டு குழுக்கள் தெருவில் துப்பாக்கியுடன் சண்டையிட துவங்கினால்? பிரஸிலின் ரியோ நகரில் கடந்த வாரம் இத்தகைய விஷயம் நிகழ்ந்தது. பொதுமக்களின் உயிரிழப்பை தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய அதிரடி சோதனையில் மேலும் “போதையில் சிதையும் ரியோ”
இடப்பெயர்வு
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய, இன்று வரை நில்லாத மனித குலத்தின் இடப்பெயர்வை, அதன் விளைவுகளை வரலாறு மீள மீளப் பேசுகிறது. தன்னைச் சுற்றிய இயற்கையை அதன் நடவடிக்கைகளை, இயற்கையின் பகுதியான பிற உயிரினங்களின் நடவடிக்கைகளை தனது முதல் படியிலிருந்தே மனிதன் கவனித்து வருகிறான். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, “இடப்பெயர்வு”
முகமது அலி
குத்துசண்டை மீதான ஈடுபாடு நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆக்ரோஷமான மோதல்களும், முகத்தில் வழியும் ரத்தமும், வலியில் துடிக்கும் வீரரும் நம்மை எந்தவகையிலும் உறுத்துவதில்லை. மாறாக ஒரு வித கிளர்ச்சியை அது அளிக்கிறது. அதற்கான பரிணாம/உளவியல் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கட்டும். நாம் உலகப் புகழ்பெற்ற குத்துசண்டை வீரர் முகமது அலி “முகமது அலி”
மாஃபியாக்களை எதிர்க்கும் சிஸிலிய மக்கள்
இத்தாலி என்றாலே நமக்கு மாஃபியா நினைவு வருவது சகஜம். மேலும் ஃபாசிஸம், முசோலினி இத்தியாதிகளோடு, ரோம், வாடிகனின் ஊழல்கள், டான் ப்ரௌன் நாவல்கள் என்று பல இருண்ட அத்தியாயங்கள் நினைவும் வரும். ஒரு காலத்தில் இத்தாலி என்றால் அழகுப் பெட்டகங்களான பெண்கள் – சோஃபியா லொரென், ஜினா லோலாப்ரிகெடா, “மாஃபியாக்களை எதிர்க்கும் சிஸிலிய மக்கள்”
பியானோ
பியானோவுடனான கலைஞனின் உறவென்பது மிகவும் நெருக்கமானது. இருவருக்கும் இடையில் நிகழும் உரையாடலே இசையாக நிகழ்கிறது. பீத்தோவன் தன் காதலியின் நினைவாக உருவாக்கிய இந்த இசைக் கோர்வை தன் காதலியுடனான காலம் தாண்டியும் நிலைத்த உரையாடலாக கருதமுடியும். இசையின் நுணுக்கம் அறிந்தவர்கள் இந்த உரையாடலின் மெல்லிய அந்தரங்கங்களை ரசிக்க முடியும். “பியானோ”
Beatles – காலத்தில் சிறிது பின்னோக்கி….
1960-70 களில் உலகத்தை தங்கள் இசையால் மயக்கிய Beatles இசைக்குழுவினரின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு. மக்களிடையே அவர்களுக்கு பெற்றிருந்த செல்வாக்கை பறைசாற்றும் படங்கள் இவை. குழு உறுப்பினர்களின் சில சுவரசியமான புகைப்படங்களைக் கொண்ட நல்லதொரு தொகுப்பை இங்கே பார்க்கலாம். கீழே உள்ள புகைப்படத்தை பாருங்கள். Beatles குழுவின் பின்னால் “Beatles – காலத்தில் சிறிது பின்னோக்கி….”
ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தினர்
ஒரு நாளின் எந்த மணித்துளியிலும் வெடிகுண்டு வெடிக்கலாம். கலவரம் நிகழலாம். நிச்சயமற்ற தருணங்கள். வலி கொடுக்கும் நிகழ்வுகள். இந்த புகைப்படங்களை பார்க்கையில் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையின் பலியாடுகள் ஈராக்கியர்கள் மட்டுமல்ல என்று புரியும்.
உலக நகரங்கள்
Foreign Policy இதழ் உலகின் பல்வேறு நகரங்களை தன்னளவில் வரிசைப்படுத்தியுள்ளது. இந்த வரிசையை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாமல் போயினும், அதன் புகைப்படங்களுக்காக மட்டுமாவது இந்த வரிசையை ஒரு முறை பார்த்துவிட வேண்டும். அற்புதமான புகைப்படங்கள். வரிசை இங்கே.
சீனாவிலும் எண்ணெய்ச் சிதறல்
அமெரிக்காவை சகல விதத்திலும் சமமாக துடிக்கும் சீனா இந்த விஷயத்திலும் சந்தோஷப்படலாம். சீனாவின் டாலியன் துறைமுகத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பொருளாதாரம் மட்டுமன்றி, சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் என்று சேதம் பல அடுக்குகளுக்கு பரவியிருக்கிறது. சிந்திய எண்ணெயை மீண்டும் அள்ளி இறைக்கும் பணி செவ்வனே “சீனாவிலும் எண்ணெய்ச் சிதறல்”
இடம்பெயர்க்கப்படும் மாவோவின் பிள்ளைகள்
சீனாவின் அசுர வளர்ச்சி நம் பிரபல ஊடகங்களில் திரும்பத் திரும்ப சிலாகிப்பாக எழுதப்படுகிறது. வின்னை முட்டும் கட்டடங்களும், அதிவிரைவுச் சாலைகளும் சீனாவின் புதிய முகங்களாகக் காட்டப்படுகின்றன. ஆனால் இந்த அசுர வளர்ச்சிக்கு சீனாவின் நடுத்தர வர்க்க மக்களும், ஏழை மக்களும் தரும் விலை மிக மிக அதிகம். பல “இடம்பெயர்க்கப்படும் மாவோவின் பிள்ளைகள்”
