நம்மிடையே உள்ள இரண்டாயிரம் வருடங்களின் புகழ் பெற்ற கவிதைகள் இசைவடிவம் அடையாத நிலையில் முதல் முறையாக ஆறு சங்கப்பாடல்கள் இசைவடிவம் பெற்று ’சந்தம்’ (Sandham: Symphony Meets Classical Tamil) என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்திருப்பது இசையுலகின் ஒரு குறிப்பிடத்தக்க நகர்வு. இப்பாடலகளுக்கு இசையமைத்தவர் திருவாரூரில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் இசையமைப்பாளர். ராஜன் சோமசுந்தரம். மேஸ்ட்ரோ வில்லியம் ஹென்றி கர்ரியின் தலைமையில் அமெரிக்காவின் வடக்கு கரொலினா மாகாணத்தில் உள்ள டர்ஹாம் சிம்பொனியின் 68 வாத்திய இசைக் கலைஞர்களின் குழு இத்தொகுப்புக்கு பின்ணனி இசை அளித்துள்ளது.
Category: லயம்
இசைபட வாழ்வோம்- 2
“அதாவது நான் முன்னமே சொன்னது போல, உன்னுடைய உடல் ரீதியான எம்.எஸ்.வி ரசாயன மாற்றங்களை சற்று மாற்றினால், செலின் டியானின் இசையை ரசித்து மெய் சிலிர்க்க வைக்க முடியும். அதே போல, கணேஷை டெய்லர் ஸ்விஃப்டின் இசையில் மெய் மறக்கச் செய்ய முடியும்.”
மதராஸ் கண்ணனுடன் ஒரு நேர்முகம் – பாகம் இரண்டு
தனக்கு இருபது வயதாகும்போது கண்ணன் அரியக்குடி, செம்பை, ஜிஎன்பி, செம்மங்குடி, மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் போன்ற ஜாம்பவான்கள் அனைவருக்கும் வாசித்திருத்தார். “என் பக்கவாத்தியம் இல்லாத தண்டபாணி தேசிகரின் கச்சேரியை நீங்கள் கண்டுபிடிப்பது அரிது,” என்கிறார் கண்ணன்.
இரு மணிகள்
மிருதங்க மேதைகளான மணி ஐயர், பழனி இருவரும் சமகாலத்தில் கோலோச்சியவர்கள் என்ற போதும், அவர்கள் உயரத்தை அடைந்த விதம் வேறாக அமைந்தது. அவர்கள் கடந்து வந்த பாதையே அவர்களின் ஆளுமையையும், வாசிப்பு அணுகுமுறையையும் பாதித்தது. இடது கைப்பழக்கம் கொண்டதாலும், ஆரம்ப நாட்களில் கணக்கு வழக்குகளில் அதிகம் ஈடுபட்டதாலும் அதிக கச்சேரிகள் வாய்ப்புகள் இன்றி இருந்தார் பழனி. அவரது அணுகுமுறையை மாற்றிக் கொண்டு பாடுபவருக்கு அணுசரணையாய் வாசிக்க ஆரம்பித்த உடன் அவருக்கு கச்சேரி வாய்ப்புகள் பெருகின. பழனியின் தன்மையான பேச்சு அவருக்கு மதிப்பை ஏற்படுத்தியதென்றால். மணி ஐயரின் மௌனம் அவர் மதிப்பை உயர்த்திக் காட்டியது.
பழநி முத்தையா பிள்ளை
மான்பூண்டியா பிள்ளையின் சிஷ்யர்களுள், கச்சேரி வித்வானாக தட்சிணாமூர்த்தி பிள்ளைக்குப் பெரும் பெயர் இருந்த போதிலும், லய விவகாரங்களில் தேர்ச்சியைப் பொறுத்த மட்டில் முத்தையா பிள்ளையின் பெயர் சிறந்து விளங்கியது. “எந்த வித்வான் தலையால் போட்ட லய முடிச்சையும் முத்தையா பிள்ளை காலால் அவிழ்த்துவிடுவார். ஆனால் முத்தையா பிள்ளை காலால் போட்ட முடிச்சை தலையால் அவிழ்ப்பதே முடியாத காரியம்”, என்றொரு சொலவடை லய உலகில் இருந்து வந்ததாக எம்.என்.கந்தசாமி பிள்ளை கூறியுள்ளார்.
தட்சிணாமூர்த்தி பிள்ளை
காரைக்குடி பிரதர்ஸ் கச்சேரியில தட்சிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம். வர்ணம் முடிஞ்சு, ரெண்டாவது கிருதி வாசிக்கும் போதே மிருதங்கம் மக்கர் பண்ண ஆரம்பிச்சுடுச்சி. பாட்டு வாசிக்கும் போதே பிள்ளை இன்னொரு மிருதங்கத்தை எடுத்து பக்கத்துல நிமிர்த்தி வெச்சு, தபலா மாதிரி தொப்பிக்கு ஒரு வாத்யம், வலந்தலைக்கு ஒரு வாத்யமா வாசிச்சார். காரைக்குடி பிரதர்ஸுக்கு கேட்கக் கேட்க ஒரே ஆனந்தம். பாட்டு முடிஞ்சதும் தீர்மானம் வெச்சு முடிக்கப் போனவரைத் தடுத்து, “பிள்ளைவாள்! அப்படியே ஒரு தனி வாசிக்கணும்”-ன்னார் காரைக்குடி சுப்பராம ஐயர். கணக்கு வழக்குல எல்லாம் நுழையாம, டேக்காவும், குமுக்கியுமா வாசிக்க வாசிக்க கூட்டம் கூத்தாட ஆரம்பிச்சிடுச்சு. அப்படி ஒரு வாசிப்பை ஜென்மத்தில் கேட்டதில்லை.
மான்பூண்டியா பிள்ளை
கஞ்சிராவில் விடாமல் சாதகம் செய்து, மிக வேகமான உருட்டுச் சொற்களைக் கூட தெளிவாகவும் இனிமையாகவும் வாசிக்கும் திறனை பெற்றார் மான்பூண்டியாப் பிள்ளை. அவர் கற்பனைக்கு உதித்த நடை பேதங்கள், மொஹ்ராக்கள், கோர்வைகள் ஆகியவை அதற்கு முன்னால் எவருக்குமே தோன்றாத புது வழியில் அமைந்திருந்தன. அவர் வாசிப்பைக் கேட்டவர்கள் எல்லாம், “கர்நாடக இசையில் ராகங்களின் நுணுக்கங்களை எல்லாம் வெளிக் கொணர தியாகபிரம்மம் தோன்றியது போல, லய நுணுக்கங்களை உலகத்தாருக்கு எடுத்துச் சொல்லத் தோன்றியவர் இவர்”, என்று கூறி மகிழ்ந்தனர்.
மிருதங்கம் – தஞ்சாவூரும் புதுக்கோட்டையும்
மிருதங்கத்தில் கண்கள் உண்டு. வலந்தலையையும் தொப்பியையும் இணைக்கும் எட்டு ஜோடி இடங்களை கண்கள் என்று குறிப்பதுண்டு. அனைத்து கண்களிலும் ஒரே விதமாய் ஸ்ருதி சேர்ந்தால்தான் கேட்க இனிமையாக இருக்கும். நடைமுறையில் அத்தனை கண்களிலும் சீராய் ஸ்ருதி சேர்வது கடினம். அழகநம்பிக்கோ ஒரு கண்ணில் ஸ்ருதி சேர்ந்தாலே, நாதம் வெகு சௌக்யமாய் வெளிப்படுமாம். ஒரு கண்ணில் மட்டுமே பார்வை இருந்த அழகநம்பியைப் பற்றி சிலேடையாய், “அழக நம்பிக்கு ஒரு கண்ணே போதும்”, கூறியுள்ளனர்.
மிருதங்கம் – ஒரு பறவைப் பார்வை எழுப்பும் பல கேள்விகள்
இன்றிருக்கும் தரவுகளை வைத்துப் பார்க்கும் போது, சங்க காலம் முதலே தமிழகத்தில் தாள இசைக் கருவிகள் பல இருந்தன என்பதும், அவை ஆடலுக்கும், திருமணம் போன்ற விழாக்களிலும் உபயோகப்படுத்தப்பட்டன என்பதும் தெளிவாகின்றன. மராட்டியர் வருகைக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் தோலிசைக் கருவிகளும், அவற்றை முழக்கும் முறைகளும் பெரும் வளர்ச்சியை அடைந்திருந்தன.