பூமியின் ஒவ்வொரு மூலைகளிலிருந்தும் மக்கள் கொண்டுவரப்பட்டு, அவர்களில் தேர்ந்த அதி தீவிர தகவமைப்புத் திறன் பெற்ற ஜீன்களைக் கொண்டுள்ள மனிதர்களுள் முதல் முப்பது மனிதர்களை தெரிவு செய்து, அவர்களை விண்கலம் மூலம் வானத்தில் ஏவி புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பூமியில் அவர்களை குடி அமர்த்த முடிவெடுக்கப்பட்டு இருந்தது. அத்தகைய மனிதர்களை அவர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மரபணு மாற்றத்தில் ஈடுபடுத்தி வம்சாவளிகளாக பேணிக்காத்து வந்திருந்தனர். அவர்களின் மரபணுக்கள் அதீத கதிரியக்கங்களை தாங்குவதற்காகவும், குறைந்த ஆக்ஸிஜனைப் பயன்படுத்தி சுவாசிப்பதற்காகவும் சேர்ப்பனவற்றைச் சேர்த்தும் கழிப்பன வற்றை கழித்தும் மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. இப்படி மாற்றி அமைக்கப்பட்ட மரபணுக்களால் உடனடியாக எந்த விளைவுகளும் இருக்காது. மந்த நிலையில் இருக்கும். அதற்கான சந்தர்ப்பம் வரும்போது தூண்டப்பட்டு விழித்துக்கொண்டு, மனித பரிணாமத்தின் அடுத்த படிநிலையை எட்டும்.
Category: இதழ்-203
திலகம்- கவிதை
அதில் மீதமாக அதிக இனிப்பில்லை
மனிதர்களின் அருகே வசிக்க விரும்புகிறேன்
தன் தவறுகளுக்காகச் சிரிக்கத் தெரிந்த,
யதார்த்தமான, உண்மையான
தன் வெற்றிப் பெருமிதத்தில் மிதக்காதவரிடையே
தன் செயல்களுக்குப் பொறுப்பேற்வரிடையே
வாழ நினைக்கிறேன்
‘மலயம்.. என்பது பொதிய மாமலை!’
இமயம் எவ்விதம் இமய மலையைக் குறித்த சொல்லோ, அவ்விதமே மலயம் என்பது பொதிய மலையைக் குறித்த சொல்லாகும். பொதிய மலையை, அதாவது மலயத்தை, அதுவும் ஒரு மலை என்பதால் மலையம் என்று குறித்தால் தவறில்லை என்றாலும், மலயம் எனும் சொல் பொதிய மலையை மட்டுமே குறிக்கிறது, அல்லது செழுஞ் சீதச் சந்தனத்தை. மலயம் எனும் சொல்லின் இரண்டாவது பொருள் சாந்து, சாந்தம் அல்லது சந்தனம். மலையில் பிறந்த சந்தனம் என்பதால் மலைச் சந்தனம். ஆனால் மலயம் என்றாலே சந்தனம்.
கூடுகள்
கூட்டுக்குள்ளிருக்கும் நிலை ஒரு வாரம் போல நீடிக்கும்- சில நேரம் மேலும் கூடுதலான அல்லது குறைவான நாட்கள் பிடிக்கும். ஏனென்று எங்களுக்குத் தெரியவில்லை. என்ன வெளியே வருகிறதோ, அது மனிதனில்லை. அந்த உருவுக்கு இன்னும் இரண்டு கால்கள், இரண்டு கைகள், உடல், மேலும் தலை இருந்தது. அந்த மங்கிய சிவப்புத் தோலில் எங்கும் தூரிகை முடி போலச் சிறு முண்டுகள் இருந்தன- மயிர் இல்லை, மிருக உரோமம் இல்லை, செதிள்களில்லை- அவற்றின் பயன் என்ன என்று தெரியவில்லை. தலைதான் அருவருப்பூட்டியது.
வெறியாடல்
தற்காலத்தில் பேய் பிடித்து விட்டதென்று அதை ஓட்டப் பாட்டுப் பாடி ஆடுவோரிடத்தும், சாமி வந்து ஆடும் மகளிரிடத்தும் பண்டைய வெறியாடலின் கூறுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. இக்காலத்தில் குறி சொல்லும் நிகழ்வுகளும் இப்போக்கிலேயே அமைந்திருக்கின்றன. இந்த வெறியையே மையமாக வைத்துப் பாட்டுகள் பாடியதால் ஒரு சங்க காலப் புலவர் “வெறி பாடிய காமக்கண்ணியார்” என்று அழைக்கப்படுகின்றார். ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணையைப் பாடிய கபிலர் அதில் ‘வெறிப்பத்து’ என்று பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பகுதியையே படைத்துள்ளார்.
கவிதைகள்
வாள் கொண்டு அறுக்கும் போதும்
எரி கொண்டு தசையை தீய்க்கும்போதும்
வலி காட்டாது தாங்கியதால்
சற்றே சலுகையுடன்
புன்னகை கூட காட்டுகின்றன.
வார்த்தை என்பது வசவு அல்ல!
என்ன விந்தை என்றால் பிருஷ்டம், புட்டம், buttocks எனும் சொற்களைப் புழங்க நமக்கு எந்த நாணமும் இல்லை. குண்டி என்று சொல்ல அவமானப்படுகிறோம். தமிழ் எழுத்தாளர்களே கூட, குண்டி எனும் சொல்லை சோப்புப் போட்டு, அலசி, காய வைத்து, மடித்து, ஆசனவாய், அடிப்பக்கம், பின் பக்கம் என்று மழுப்புகிறார்கள்.
லூர்து நாயனார்
பழைய கதைகளைக் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கதைகளைப் படிக்க சில “வெப் சைட்”களை அறிமுகம் செய்துவைத்தேன். வாட்ஸ் அப்பில் சில சந்தேகங்களைக் கேட்டார். சொல்லிக்கொடுத்தேன். ‘வீபூதிப் பிள்ளையாருக்கு எதித்தாப்பல இங்க ஒரு கிளிக்கூண்டு இருந்ததே, எடுத்துட்டாங்களா?’ என்றேன். ‘அடேயப்பா, அதாச்சு கொள்ள வருஷம். அம்மன் கைல நின்னாலும் நின்னுச்சு, ஒரு பத்து பதினஞ்சு கிளியைப் பிடிச்சு கூண்டுல போட்டுட்டாய்ங்க, நல்ல வேளையா புது ‘தக்கார்’ எல்லாத்தையும் வெளில விட்டுட்டாரு. . . ‘ என்றார் படியேறிக்கொண்டே. “சார், நீங்க மதுரைல கிளி பாத்துருக்கீங்களா, நான் ஒண்ணே ஒண்ணு கூட பாத்ததில்லை. நான் படிச்சதெல்லாம் பக்கத்தில கிராமங்களிலேதான். அங்க கூட” என்றேன்.
ஒரு பந்தலின் கீழ்…
அவன் மெதுவான குரலில், “உன்ன மாறி சொகவாசியா…அங்க சுடுகாட்ல வந்து ஒக்காந்து பாரு தெரியும்,” என்றவன், “அய்யோ…வாய்தவறுது. . மவராசியா ஆயுசோட இரு. நம்ம விமலா போனவருஷம் செத்து போனுச்சே. . என்னால எரியறதபாத்துக்கிட்டு ஒக்கார முடியல. எளந்தேகம் குப்புற போட்டு எரிச்சம். . என்னடா பொழப்புன்னு இருந்துச்சு,” என்றான். “சொகவாசின்னு யாருமில்ல,” என்றபடி எழுந்து கீழே கிடந்த காகிதக் கோப்பைகளைப் பொறுக்கினாள்.