சாட் ஜிபிடி-யால் என்ன செய்ய முடியும்?

ஏஐ என்றால் என்ன? சாட்ஜிபிடியா? நம் உருவத்தை மாற்றி ஏமாற்றும் ஒரு பொதியா?
ஏஐ – பல வருடங்களாகவே இருக்கிறதே!? ஐபிஎம்மின் டீப் ப்ளு செஸ் விளையாட்டில் 1997ல் மனிதர்களை தோற்கடித்தது. ஆனால் இப்ப சமீப 4-5 ஆண்டுகளில் ஏன் இந்த திடீர் சுறுசுறுப்பு?
சமிபத்தில் அநிருத் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ மூலம் மீள் உருவாக்கம் செய்திருந்தார். இதன் மூலம் வருங்காலம் இசை, அமைப்பாளர் பாடகர்கள் எல்லாருக்கும் என்ன பணி மீதம் இருக்கும்?

புத்திசாலித்தனம் ஒரு சேவையாக..

நான் கல்லூரியில் படித்த காலத்தில் கணினித் திரையில் ஆரஞ்சு அல்லது பச்சை கலர் எழுத்துக்கள் மட்டும் தெரியும். பேராசிரியர்கள் உபயோகிக்கும் திரை ஒரு மாதிரி திருச்சி மைகேல் ஐஸ்கிரிம் வண்ணத்தில் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும். கலர் கம்யூட்டர் ஆர்.இ.சி போன்ற கல்லூரிகளில் பார்த்திருக்கிறேன். கல்லூரியில் செயற்கை அறிவாற்றல் ( Artificial Intelligence ) மீது ஒரு எனக்கு ஒரு மோகம் இருந்தது.