அந்த இரவின் மாயாவி என்ன செய்தான் என்று தெரியவில்லை. விடிந்ததும் தண்டனைக்காலம் முடிந்து உருவம் வரைந்த சுவடே இல்லாமலானது. வெகு நாள் கோபத்தைச் சுமக்க முடியாமல் சகஜமானாள் காயத்ரி. வந்த தடமும் தெரியவில்லை அழித்த தடமும் தெரியவில்லை. விக்ரமன் என்பதற்குப் பதில் விசித்திரன் என்று பெயர் வைத்திருக்கலாம். இந்தச் சித்து வேலையை எப்படிச் செய்தான் என்று கேட்கவே கொஞ்சம் கூச்சமாக இருந்தது காயத்ரிக்கு.
Author: சித்ரா பாஸ்கரன்
தற்செயலாய் வாழ்க்கை
இரவின் அமைதியில் எங்கோ ஒலிக்கும் ராஜா
எதிர் ஜன்னலில் கையசைக்கும் யாரோ ஓர் குழந்தை
குதித்துக் குதித்து புவியீர்ப்பு விசையை சோதித்து பார்க்கும் குழந்தைகள்
கோடையின் வருகையை அறிவிக்கும் மரத்தில் சில மாம்பூக்கள்
மதிய வேளையில் அசரீரியாய் காக்கைகள்
கல்யாணி
மஞ்சுவின் அண்ணன் ஆனந்த் அறையின் வாசலில் ஒரு நாள் கயிற்றைக் கட்டி பெண்களுக்கு அனுமதி இல்லை என்றான். பழுத்த மாம்பழங்களை விநியோகிக்கும் உரிமை தனக்கே உண்டு என புதிதாக சட்டம் கொண்டுவந்தான். அதிகார மையமாக தன்னை மாற்றிக் கொண்டான். வியாபாரம் நடக்குமிடத்தில் பெண்களுக்கு என்ன வேலை என்று வஞ்சகமாக யோசித்தான். வஞ்சகம் செய்பவர்களை வீழ்த்த காற்றில் நஞ்சைக் கலத்தோம்.
முளைக்கா விடைகள்
முல்லைக்கு எப்பொழுதும் அறைகளில் அடைந்து உறங்குவது பிடிக்காது. வராந்தாவில், முற்றத்தில், மாடியில் இப்படி. இடி மின்னல் நாட்களில் உள்ளே இழுத்து வரவேண்டி இருக்கும். அன்றும் அப்படித்தான் வராந்தாவில் படுத்திருந்தாள். உடல் உள்ளே இருக்க இடதுகை பரப்பி வாசலில் உள்ளங்கையில் நிலா வெளிச்சம் வாங்கிக்கொண்டு படுத்திருந்தாள். உறங்கும் மகளை இப்படி உற்று பார்ப்பதே குற்ற உணர்ச்சியாக இருந்தது . வேறு வழி இல்லை. ஆனால் எதை கண்காணிப்பது என்று புரியவில்லை.
மார்ஷ்லேண்ட் புத்தக விமர்சனம்
அவர் நினைவுகள் மெல்ல அவரின் கடந்தகால குற்ற சரித்திரத்தை வெளிக்கொணர்கிறது. 1968 மற்றும் 1969 ல் டோக்கியோ மற்றும் ஜப்பானின் இதர பகுதிகளில் நடந்த மாணவ கலவரம் நாவலின் மூன்றில் ஒரு பகுதியாக அமைகிறது.ஒரு ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டு அட்சுவோ, வாக்காகோ, அவர்களுக்கு அறிமுகமானவர்கள் மற்றும் தீவிர மாணவப் பிரிவினை சேர்ந்த மாணவர்கள் குழுவான ‘கியூ- செக்ட்ஐ’ சேர்ந்தவர்கள் கைதாகும் பொழுது கதையின் போக்கு தீவிரமடைகிறது.
