டாங்கோ : ஓர் அறிமுகம்

நினைவு தெரியும் முன்பே தாயையும்,  தந்தையையும் இழந்த,  மாமாவால் வெறுமென வளர்க்கப்பட்டு,  ஆசிரம இல்லத்தில் தங்கி தன்னை தகவமைத்துக் கொண்ட  ஆனந்த் என்கிற ஒரு தனியனின் கதை மட்டுமல்ல. அவனின் மனசஞ்சலங்கள்,  ஆர்வங்கள்,  ஆர்வமின்மைகள்,  லாகிரி,  காதல்,  காமம் என அனைத்தையும் மிக அழகாக நேர்த்தியாக blend செய்து கவனமாக நெய்யப்பட்ட ஓர் அழகிய தூய்மையான கம்பளம் என்று சொல்லலாம்.

பட்டியலில் 12வது நபர்

வெள்ளை நிறத்தில் வர்ண பூக்கள் இறைந்து கிடக்கும் காட்டன் சுரிதாரில் ஒரு சுடரென ஒளிர்ந்தாள். அவள் கன்னம் தடவி அம்மா முத்தமிட்டாள். அக்கா இவளை தன்னுடலுடன் அணைத்துக் கொண்டாள். அக்காவின் உடம்பிலிருந்து மிக லேசான செம்பருத்தி வாசம் வீசியது. அக்கா எப்போதும் செம்பருத்தி இதழ்கள் போட்டு காய்ச்சிய தைலத்தைத்தான் பூசுவாள். அதன் நறுமணம் அவள் உடலெங்கும் தங்கியிருக்கும்.

ட்டி.கல்லுப்பட்டி நகுலின் 418 வது கேட்ச்

ஏன் நண்பரே அந்த கேட்ச்சை விட்டீர்கள். எனக்குத் தெரியும் அது மிகச்சுலபமான கேட்ச் என்று. 418 வது கேட்ச். எவ்வளவு விலைமதிப்பில்லாத கேட்ச் என்று உலகமே அறியும். உங்களின் இரக்கத்தால் தானே நாங்கள் ஜெயித்தோம்.  அனைத்தையும் விளக்கிச்சொல்லி எங்கள் பத்திரிக்கைக்கு சொல்ல நினைத்திருந்தேன். அதற்குள் என் தந்தையின் மரணம் நிகழ்ந்து விட்டது. முப்பது நாட்கள் நான் எங்கும் போகக்கூடாது.

மூர்க்கரோடு இணங்கேல்

அவ இப்ப இல்ல.. எங்கள விட்டு போய்ட்டா.அதிர்ந்து பார்த்தாள்.இன்னையோட நாற்பத்தியெட்டு நாட்கள். டாக்டராகணும் டாக்டராகணும்னு சொல்லிட்டே இருப்பா. ஆனா அவளால ரெண்டு தடவையும் பாஸ் பண்ணமுடில.  அந்தப் பயத்துலேயே இந்த எக்ஸாமுக்கு முன்னாலேயே போய்ட்டா.

குப்பைத் தொட்டி

ப்ளீஸ்.. அப்பா தான் புரிச்சுக்கல.. நீயாச்சும் புரிச்சுக்கோ.நீ எல்லாரயும் மாதிரி கம்ப்யூட்டர் படிச்சுட்டு ஒரு ஐடி கம்பெனில பொட்டி தட்ட மாட்டேன்னு எவ்வளவு வீம்பா லா படிச்சே..  இப்ப வாய்க்கா, வரப்பு தகராறுல அண்ணன் தம்பியையும், டைவர்ஸ் கேஸ்ல புருஷன் பொண்டாட்டியையும் பிரிச்சுட்டு திரியற.. கேட்டா லா என்னோட passionன்னு சொல்லத் தெரியுதுல.. அது எனக்கு இருக்கக்கூடாதா?”

ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்

“நீ சொல்றது சரிதான் ஸ்ரீ. அப்பல்லாம் உன் அப்பா இசையமைச்ச ஒரு படத்தில் வர்ற்ற எல்லாப் பாட்டுக்களையும் என்னையேப் பாடச் சொன்னார். இப்ப பாரு ஒரு பாட்டுக் கேட்டேன். நாலு பேர் பாடறங்க.என்ன பண்றது. உங்கத் தலைமுறைக்கு நெறைய வேணும். வேகமா வேணும். சீக்கிரம் முடியணும். அதனால இன்றைய சினிமா உன் அப்பாக்கு வராதுன்னு நானும் சொன்னேன்.. கேகே எம்மேலயும் கோபமாய்ட்டார்.”