குப்பைத் தொட்டி

மொபைல் ஒளிர்ந்தது.

மாயா என்கிற மாயவிநோதினி.

“என்னடா.. ரிங் டோன் வச்சுருக்க?”

“ I’m in love the shape of you.. Ed Sheeran.”

”எப்போதும் அதே நெனப்பு.. சரி பேசணும்னு பில்டப் கொடுத்தே.என்ன விஷயம்?”

“ வந்து.. வந்து..”

“என்ன கொழந்தே கொஞ்சுது.”

“ஐ நீட் யூ மாயா.. ஐ பாட்லி நீட் யூ.”

“யூ மீன்..”

“யெஸ்… பருத்த முலைகளும், கனத்த தொடைகளும், குழிந்த நாபியும்..”

”ஸ்டாப் இட் இடியட். ”

“ஒய்..ஒய்.ஒய்?”

”இதுக்கு ஆயிரம் தடவ பதில் சொல்லியாச்சு ஃபக்கிங் இடியட்.”

”யெஸ்..யெஸ்.. த சேம் திங்க்.”

“அய்யா சாமி ..ஆள உடுறா.”

”……….”

“Is there anybody there?’

”ம். இருக்கேன். முன்னாடி ஒரு தடவ நடந்ததது தானே?”

”ஆமாண்டா.. ஒரு தடவ நடந்ததுதான்.. அன்னக்கி உன் காதலியோட கல்யாணம். குழந்த மாதிரி கரைஞ்சுகிட்டு கிடந்த.. சமாதானப்படுத்தப் போய் அது ஆகிடுச்சு…”

“இன்னைக்கும் நான் கரையவா?”

“போடா லூசு. நாந்தான் கரையணும்.”

”என்னாச்சு?”

“ஆபிஸ்ல அந்த பார்த்தசாரதி..”

“என்ன பண்ணான் அந்த பாச்சா மாமா.”

“மாமி ஊருக்கு போய்ருக்காளாம்.. தனியா இருக்க போர் அடிக்குதாம். வர்றியான்னு கேட்டான்.”

“போகவேண்டியதுதானே..”

“எடு செருப்ப ..”

“கூல்.. கூல்.”

“நான் சிரிச்சுட்டே சொல்லிட்டேன். ஒரு கெட்ட வார்த்த சொல்லி அத நெத்தியில பச்ச குத்திக்கச் சொன்னேன்.”

“என்ன வார்த்தை அது?”

“*&%$#@”

“மாமா என்ன சொன்னார்?”

“கம்பெனி மேலிடத்துல போட்டுக் கொடுத்துடுவான்.. அவனுங்களும் ரேபரேலி, தும்கூர் புராஜக்ட்டுக்கு போய் லீட் பண்ணு சொல்லுவானுங்க.”

“அய்யோ”

“அவனுங்களுக்குத் தெரியும் நான் போவமாட்டேன்னு.. இல்லேன்னா பேப்பர் போட்ருவேன்னு மெரட்டுவோம்ல..”

“ஆர்.இ.சிக்காரங்களுக்கே இந்த கெத்து இருக்குது.”

“ஆமா உங்கள மாதிரி புது ஐ.ஐ.டி பசங்கள வச்சுட்டு ஒண்ணும் பண்ண முடியாதுன்னு அவனுங்களுக்குத் தெரியும். ஐஐஎம் உதார் வேற”

“சரி.. ட்ராக் மாறாத..”

“நோ.”

”ஒய்”

“உன் அக்காகிட்ட கேளு.”

“ஔவையார்ட்டயா?’

சிரித்தாள் அந்த மாயா என்கிற மாயவிநோதினி.

வையார் என செல்லமாய் விளிக்கப்படும் அகிலா சிரித்தாள்.

“என்ன துரை வீட்டுக்கு வரமாட்டியா?”

“ அங்க வந்தா உன் மாமியார் கொசுக்கடி தாங்கமுடியாது.”

“ஏய் மாமாட்ட சொல்லிடுவேன்?”

“சரி என்ன விஷயம்?”

“அப்பா வீட்டுக்கு வந்துருக்கார்டா.”

“ஏன்?”

“உன் விஷயம் தான். நம்ப ரைஸ்மில்லை நல்ல விலைக்கு கேக்குறாங்களாம்.. அப்றம் கீழண்ட தென்னந்தோப்பையும் வித்துடலாம்னு சொல்றார்.”

“இப்ப எதுக்காம்?”

உனக்கு தாண்டா..”

“நான் கேட்டேனா?”

“கேக்கலை.. ஆனா நீ பணம் ரெடி பண்ண கஷ்டப்படறது அவருக்கு தெரியும்ல.”

”நீ தான் போட்டுக்குடுத்துருப்ப. நாந்தான் வெஞ்சர் கேப்பிடலுக்கு ரெடி பண்ணிட்டு இருக்கேன்ல..”

“எவ்வளவு நாள் தம்பி.. உன்னோட ஐ.ஐ.டி பேட்ச்மேட்லாம் ஃபாரின்ல செட்டிலாய்ட்டாங்க.. நீ மட்டும் தான் இப்படி சுத்திட்டு நிக்குற.”

“இங்க பாருக்கா.. மாச சம்பளம் வாங்கி கல்யாணமும் இஎம்ஐயும் கட்டி புள்ள  பெத்து அவங்கள வளத்து வயசாகி ஒரு காமன்மேனா இருமி இருமி சாக விரும்பல..”

“அடடா.. நல்லா பேசற தம்பி. தம்பிக்கு ஒரு ரோஸ்மில்க் பார்சல் கட்டவா?”

“ப்ளீஸ்.. அப்பா தான் புரிச்சுக்கல.. நீயாச்சும் புரிச்சுக்கோ.நீ எல்லாரயும் மாதிரி கம்ப்யூட்டர் படிச்சுட்டு ஒரு ஐடி கம்பெனில பொட்டி தட்ட மாட்டேன்னு எவ்வளவு வீம்பா லா படிச்சே..  இப்ப வாய்க்கா, வரப்பு தகராறுல அண்ணன் தம்பியையும், டைவர்ஸ் கேஸ்ல புருஷன் பொண்டாட்டியையும் பிரிச்சுட்டு திரியற.. கேட்டா லா என்னோட passionன்னு சொல்லத் தெரியுதுல.. அது எனக்கு இருக்கக்கூடாதா?”

“ம்..ம்.. லாஜிக் கரெக்ட். சரி என்ன பண்ணப் போறே” 

”ஷ்யாம்கிட்ட பேசணும்.. ஏதோ சொல்றேன்னுருக்கான்.”

“ஆல் த பெஸ்ட்  குட்டா.”

சிரித்தாள்.

“சரி.. மாயாட்ட வம்பு பண்ணிட்டு இருக்கியாமே?”

“என்ன சொன்னா?”

“டேய் அவ பாவம்டா.டைவர்ஸ் வாங்கி இப்ப நல்லா மூச்சு விடறா. குறுக்க பூந்து எதாவது குட்டையை குழப்பிடாதே.”

”உன் ஃபிரெண்டை தலைல தூக்கி வச்சு ஆடாத. நீ எனக்கு அவளை அறிமுகப் படுத்தாமலே இருந்திருக்கலாம்.”

“அதுக்காக அவகிட்ட என்ன வேணும்னாலும் கேப்பியா? உன் வயசென்ன அவ வயசென்ன?”

“உடனே ஃபோன் போட்டு சொல்லியாச்சா?”

“ஒண்ணும் சொல்லலை. உன் லீலையை சொல்லிதான் தெரியணுமா. அது பாவம்டா.”

“.சரி..உன் ஆத்திச்சூடியை ஆரம்பிச்சுடாதே.”

“அப்பா நாளைக்கு கிளம்பறார்.. ஒரு எட்டு வந்து பாத்துட்டு போய்டு.”

”அவர்கிட்ட ஸ்ட்ரிக்டா சொல்லிடு.. எதையும் விக்கச் சொல்லாத.”

“நீயும் அதெல்லாம் பாக்கப் போறதில்லை. நானும் பாக்கப் போறதில்ல.. எல்லாத்தையும் செட்டில் பண்ணிடம்னு நெனக்கிறார். தப்பாடா?”

“லாயர் மாதிரியே பேசாதேக்கா.”

சிரித்தாள்.

தலையசைத்தேன்.

ஷ்யாம் ஃபோனை எடுக்கவில்லை.

 அவாய்ட் பண்றானா?

மெலிதாக விரல் நடுங்கியது.

தப்பான பாதையில் போகிறேனா?

மண்டைக்குள் நிறையகொக்கிகள்.

அரைமணி நேரம் கழித்துக் கூப்பிட்டான்.

“ஸாரிடா.. ஹெச்ஓலருந்து கூப்பிட்டாங்க.அதான்.”

“அவங்க தூங்க மாட்டாங்களா?”

“எப்டி தூக்கம் வரும். எஃப் ஐலாம் மில்லியன் மில்லியனா ஃபண்ட்ல கொண்டு வந்து கொட்டுறாங்க.. என்னப் புடிச்சு நோண்டிக்கிட்டு இருக்கானுங்க.”

“எப்டி பெர்ஃபாம் பண்ணுது உன் ஃபண்ட்.”

“எராட்டிக்.. மார்க்கெட் வொலைட்டைலா இருக்கு. சக ஃபண்ட் மேனஜர்லாம் பத்தாவது மாடிலேர்ந்து குதிச்சிக்கிட்டே இருக்கானுங்க. என்ன பண்றதுன்னே தெரிலடா. படுத்தா தூக்கம் வர மாட்டேங்குது. இதுல கண்ணாலம் கட்டி புள்ள ரெண்டு வேற.”

“என்ன மாமே சலிச்சுக்கறே.. டாலர்ல வாரித்தர்றாங்கல்ல.”

“என்ன தர்றாங்க.. உன்ன மாதிரி இருக்கணும்டா.”

“என்ன மாதிரியா? திருவோடு தூக்காத குறை தான்.”

“நீதான் ராஜா வீட்டு கன்னுகுட்டியாச்சேடா.”

“அப்பாட்ட சல்லி காசு வாங்கற மாதிரில்ல. அத விடு. என் விஷயம் என்னாச்சு?”

தயங்கினான்.

“என்ன”

“மேடம் கொஞ்சம் யோசிக்கறாங்க.”

“என்னவாம்?”

“அவங்க க்ளையண்ட் தயங்கறாங்களாம்?”

”என்?”

“உன் ஐடியா நல்லாருக்காம். பட்..”

”பட்.. இட் பிலாங்க்ஸ் டு ஃப்யூச்சர்.”

“யெஸ்.ஃப்யூச்சர் கான்செப்ட்தான்.பட்”

”பட்.”

“ஓகே.பாஸ். யூ கால் ஹெர் டைரக்ட்லி.”

“சரி.”

“நைட் வீட்டுக்கு வர்றியா?”

“ஏன்?”

“சஞ்சு அம்மா வீட்டுக்கு போய்ருக்கா.”

“ஸோ..”

“ஸோ.. ஒரு ஜாய்ண்ட் இருக்கு. பத்து மில்லிகிராம் ரெண்டாயிரத்து நூறு டாலார். கொலம்பியன் சரக்கு. பேரு ஹெவன். அங்கேயே போய்டலாம்.’

“இதெல்லாம் காசு கொடுத்து வாங்கறியா என்ன?”

“வாங்கறாங்க.அந்த போர்ட்காரன் கொடுத்தான்..”

”அந்த போர்ட் வழியாத்தான் ட்ரக்ஸ் உள்ற வருதாம்ல.”

“அடேய் பழிகாரா. அரசியல் பேசாதே. கொன்னுடுவானுங்க..வர்றியா வரலையா?”

”வரலை.”

“கிடைக்காதுடா இது. ஒரு டோஸ் ஏத்தினா ஜெனிஃபர் லோபெஸ், அனிஸ்டன், லாரன்ஸ் எல்லாரோடயும் டான்ஸ் பண்ணலாம் மாமா.”

“ரம்பா, ஊர்வசி,மேனகாவுக்குப் பதிலாக..”

“எக்ஸாக்ட்லி.”

“போடாங்கொய்யால.”

“தென் லீவ் இட் யா. டோண்ட் ஃபர்ஹெட் டு கால் மேடம் அண்ட் ட்ரை டு செட்டில் திங்க்ஸ் மேன்.”

“மேடமாம்.. மேடம்”

”ஓகே.. ஓகே. இஸபெல் மக்லீன்மேடம்.’

“இடியட்.”

சிரித்தான்.

ஸபெல் மக்லீன்

உடனே பேசினாள்.

“ஹாய்.”

“மேம்”

“கால் மீ இஸ்.”

“இஸ்.. என்னாச்சு என் புரபோசல்.”

தயங்கினாள்.

“டோண்ட் நோ த சிச்சுவேஷன் ?”

“இட்ஸ் எ ரெகுலர் ஃபினாமினா தானே?”

”நோ. இட்ஸ் இர்ர்ரெகுலர். யூ நோ த கரெண்ட் சினாரியோ. வேர்ல்ட் மார்க்கெட் டர்புலன்டாருக்கு…நிறைய வெஞ்சர் கேபிடலிஸ்ட்ஸ் பேண்ட்ல மூத்திரம் போய்ட்ட்ருக்கானுங்க.”

அமைதியாயிருந்தேன்.

“யூ நோ ஒய்? நைண்ட்டி பெர்செண்ட் ஆஃப் த ஸ்டார்ட் அப் கம்பெனிஸ் வெண்ட் பாங்க்ரப்ட்.”

“எல்லாரும் இல்ல.”

“அல்மோஸ்ட் ஆல். ட்யூஷன் எடுத்த கம்பெனி, சோறு கொண்டு வந்து கொடுத்த கம்பெனி, காசு டிரான்ஸ்ஃபர் பண்ற கம்பெனின்னு. இட்ஸ் எ பிக் லிஸ்ட்.”

“அது வேற டைப். என்னது வேற. என் ஐடியா ஏஐயோட கனெக்ட் ஆகும். மேடம். ஃப்யூச்சர் பிலாங்க்ஸ் டு ஏஐ ஒன்லி.”

“ஓகே. வெய்ட் ஃபார் த பால் டு ட்ராப். கீப் இன் டச்.”

ரானியன் நெஸ்ட்.

கூட்டம் அதிகமில்லை.

தூரத்து டேபிள்களின் குறைந்த ஒளியில் சில ஜோடிகள் அனாடமி ஆராய்ச்சியாளர்களாய் இருந்தனர்.

“இங்க எதுக்கு மாயா?”

“காலம்பற ரொம்ப கோச்சுட்டியா? அதான். இங்க ஈரானியன் சாய். இட்டாலியன் பீட்ஸா, திபெத்தியன் மோமோஸ் ஸ்பெஷல்.”

“நான் உன் கிட்ட கேட்டது இதில்லை.’
“பின்ன சீரங்கம் அக்கார அடிசல், தஞ்சாவூர் இடியாப்பம்,மணப்பாறை முறுக்கா?”

“ஸ்டாப் இட் மாயா.”

“என்னதாண்டா வேணும் உனக்கு. வர வர ரொம்ப படுத்தற.”

“பிட்ச்..நானா படுத்தறேன். நீதான். எப்ப பாத்தாலும் அழுமூஞ்சி.  குளிக்கறப்ப அப்பன் பாத்தான். மாமா மடில உக்கார வச்சு தடவினான். புருஷன் ஃபர்ஸ்ட் நைட்ல அங்க கடிச்சு வச்சான்.க்ளையண்ட் ரூம் போடவாங்குறான்.கலீக் முழங்கையால இடிக்கிறான்.. டெய்லி ஒரு புலம்பல். எல்லா குப்பையையும் என் தலைல கொட்டு. என்னை குப்பைத்தொட்டியாத்தான் யூஸ் பண்றே.”’

அவள் கண்களைப் பொத்திக் கொண்டு சொன்னாள்.

“ஸ்..ஸ்.. டோண்ட் ரெய்ஸ் யுவர் வாய்ஸ். எல்லாரும் பாக்கறாங்க..என்ன சொன்னே.. குப்பைத் தொட்டியா? ”

திணறினாள்.

“முட்டாள்.. முட்டாள்.. நீ எனக்கு வெண்ட்டிலேட்டர்டா.. நீ இல்லேன்னா எப்பவோ மூச்சு தெணறி செத்துருப்பேன்டா படுபாவி.”

கண்களில் ரௌத்திரம்.

அமைதியாக இருந்தேன்.

டிஸ்யூ எடுத்து நீட்டினேன்.

மூக்கை சிந்தினாள்.

என்னைப் பார்த்துச் சிரிப்பது போல் ஏதோ செய்தாள்.

கொஞ்சம் கடுப்பாக வந்தது.

“சரி. நைட் என் வீட்டுக்கு வா.”

“எனக்கு ஒண்ணும் பிச்சை போட வேண்டாம்.”

கண்களைத் துடைத்து கொண்டு சிரித்தாள்.

“பெக்கர். ஷேம்லெஸ் பெக்கர். வரும் போது மெடிக்கல்ஸ்ல ஒரு பாக்கெட் வாங்கிட்டு வா.”

“வாட். எதுக்கு?”

“ஒரு சேஃப்டிக்கு.”

“என்ன சேஃப்டி?”

“நீ எத்தனை பேர்கிட்ட ஃப்ளர்ட் பண்ணிட்டு திரியுரியோ தெரியாது. எப்ப பாத்தாலும் ஃபோன் எங்கேஜ்ட். எங்காவது போய்ட்டு வந்து அத என்கிட்ட ஒட்டிட்டின்னா.. அதான் சேஃப்டிக்கு.”

மண்டைக்குள் ஒரு ஸாக்ஸஃபோன் ப்ப்ர்ரிட்டது.

ஓங்கிய என் கையைக் கண்ட மாயா கண்களை மூடிக் கொண்டாள்.

கைகளை திசை திருப்பி டேபிளில் இருந்த கோப்பையைத் தட்டிவிட்டேன்.

ஒரு பட்டுசேலை நழுவியது போல் ரூபாய் நூற்றிருபது மற்றும் ஜீயெஸ்டிக்கு விற்கப்பட்ட அந்த ஈரானியன் டீ தரையில் விரிக்கப் பட்ட காஷ்மீரக் கம்பளத்தில் இந்திய மேப் போல படர ஆரம்பித்தது.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.