முகப்புக் கண்ணாடியில் படர்ந்திருந்த நீர்திவலைகளின் நிழல்கள் தனது புறங்கைமேல் புள்ளிகளாய் அதிர்வதை, புழுக்களாய் நெளிவதைக் கண்ட முத்தப்பன் அரைக்கணம் விழிமூடி பெருமூச்செடுத்தான். பிறகு அவர் யாராக இருந்தாலும், அவரது நோக்கம் எத்தனை இருண்டதாக இருந்தாலும், இந்த சில நிமிடங்களை சகித்துக்கொள்வதே உகந்தது என்கிற முடிவை நிர்மாணித்து ஸ்திரப்படுத்திக் கொண்டான். இவரையும், இச்சூழலையும் விட்டு அகன்ற கணமே அகத்தின் அனைத்து நமைச்சலும் மறைந்துவிடும்.
Tag: தமிழ்
உங்க வீட்ல தங்க விளைய..
போதும், கல்யாணம் பண்ணிக்கன்னு சொன்னா, அழுகை. மேல படிக்கணும்னு. எட்டாவது முடிச்சோன்னயே, படிப்பை நிறுத்திட்டு கல்யாணம் பண்ணிடலாம் சொன்னேன். வேணாம்னு சொல்லிடாக. இப்ப பாருங்க. மாப்பிள தேடினா கிடைக்க மாட்டேங்குது. மளிகை கடை வச்சிருக்க நம்ம சொந்தகார பையனை முடிச்சிடலாம்னு பாத்தா, படிச்ச புள்ள மளிகை கடையில உக்காராதுனு என்கிட்டயே சொல்றான்.”
