அங்கு பள்ளியில் தவில் படிப்பு என்பது என்பது மூன்று ஆண்டுப் பயிற்சி. என் குருநாதருக்கு என்னை இன்னும் கூட அவருடன் வைத்து நிறையச் சொல்லித் தர வேண்டுமென்று ஆசை இருந்திருக்கும் போல. எனக்கு அந்த வயதில் அது புரியாமல் போனது. மற்ற பிள்ளைகள் மூன்றாண்டுப் படிப்பை முடித்துக் கிளம்பும்போது நானும் பெட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டேன். நான் அப்படிச் செய்ததைப் பார்த்ததும் அவருக்குக் கடும் கோபம். “போ! போ! இனி என் முகத்திலேயே விழிக்காதே.”, என்று திட்டினார்.
Tag: சந்திப்பு
உண்மைகள் எளிதானவை- பாவண்ணன்
தாய்மொழிப்பயிற்சி உள்ள ஏராளமான பள்ளிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளன. ஒரு மாநிலத்தில் இயங்கக்கூடிய தனியார் பள்ளிகளின் எண்ணிக்கையையும் அரசு பள்ளிகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலேயே இதைப் புரிந்துகொள்ளமுடியும். அங்கெல்லாம் மாணவமாணவிகள் தாய்மொழியில்தான் படிக்கிறார்கள். எதிர்காலத்தைப்பற்றிய அச்சத்தைத் துறந்துவிட்டு தாய்மொழியில் படிக்கும் அவர்கள்தான் இந்த நாட்டின் உண்மையான தூண்கள். அவர்கள் வழியாக தாய்மொழிகள் கண்டிப்பாக வாழும்.
சித்தார்த் வெங்கடேசன் – பேட்டி
வாசிக்கும் பழக்கம் அம்மாவின் மூலமாகவே வந்தது. அம்மா ஒரு நல்ல கதைசொல்லி. கதை கேட்டலின் வழியாகத்தான் அனைவருக்குமே வாசிப்பு துவங்குகிறது என நம்புகிறேன். ஒரு கட்டத்தில் நம் கதைசொல்லிகளின் எல்லைகளை உணரும் பொழுது அல்லது அது ஒரு போதாமையை நமக்கு தரும் பொழுது வேறு கதைசொல்லல் ஊடகத்தை தேர்ந்தெடுக்கிறோம். நான் வளர்ந்த காலத்தில் காட்சி ஊடகம் பெரிதாக இல்லாததால் வாசிப்பு இயல்பான அடுத்தக்கட்டமாக இருந்தது.
பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி
1. உங்களைப் பற்றி அறிமுகக் குறிப்பு தர முடியுமா? என் அப்பாவுக்குச் சொந்த ஊர் கரூருக்கு அருகில் உள்ள வாங்கல் கிராமம். என் அம்மா பிறந்தது வெங்கரையில். நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில். பள்ளிப் படிப்பு தி.நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி (வடகிளை)யில். பிறகு கல்வி லயோலா “பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி”
