ஜீவநதி

தனிமைக்கூட்டினுள் உடல் ஒடுக்கி வாழும் நோயுற்ற  பட்சியென பின்வந்த நாட்களில் மாறிப்போனாள் சிவகாமி கிழவி. தெருவாசிகளும் அவள் விழிகளைச் சந்திப்பதை ஏனோ தவிர்க்கத் துவங்கினர். ஆனாலும் கிழவி இறப்பது வரை அங்கு நடந்தேறிய அனைத்து சுபநிகழ்வுகளும் அவளது ஆசியுடனே துவங்கியது. அவளும் ஒவ்வொருவரையும் கண்களில் நீர் வழிய மனதார வாழ்த்தி வந்தாள்.

நிழல்களின் ஓலம்

முகப்புக் கண்ணாடியில் படர்ந்திருந்த நீர்திவலைகளின் நிழல்கள் தனது புறங்கைமேல் புள்ளிகளாய் அதிர்வதை, புழுக்களாய் நெளிவதைக் கண்ட முத்தப்பன் அரைக்கணம் விழிமூடி பெருமூச்செடுத்தான். பிறகு அவர் யாராக இருந்தாலும், அவரது நோக்கம் எத்தனை இருண்டதாக இருந்தாலும், இந்த சில நிமிடங்களை சகித்துக்கொள்வதே உகந்தது என்கிற முடிவை நிர்மாணித்து ஸ்திரப்படுத்திக் கொண்டான். இவரையும், இச்சூழலையும் விட்டு அகன்ற கணமே அகத்தின் அனைத்து நமைச்சலும் மறைந்துவிடும்.

சிறகடிப்பு

கொஞ்சம் தேறிக்கொண்டு வந்த குழந்தை மீண்டும் பிரமை பிடித்ததைப்போல் ஒடுங்கிக்கொண்டு வெடவெடக்க ஆரம்பித்தது. சிஸ்டர் ஒருத்தி அதை எழுப்பி தன்னோடு அணைத்துக்கொண்டு ஓரமாக நின்றுகொண்டாள். நானும் தோழியும் சேர்ந்து மூக்காண்டியை சமாதானப்படுத்தி அமர்த்தி விஷயத்தை எடுத்துச் சொன்னோம். ஆனால் எதுவும் அவருக்குள் நுழையவேயில்லை. வரம்பை மீறிய வசைச்சொற்களை முணுமுணுத்துக்கொண்டே இருந்தார்.