இவர்களின் படைப்புகளில் தனித்துவமான அம்சம் என்னவென்றால், ஒவ்வொரு ஆக்கமும் புதிய பல எண்ணங்களை விதைக்கிறது; ஒவ்வொரு கட்டுரையும் பற்பல கோணங்களைத் திறக்கிறது. பெண்களின் உள்ளுணர்வுகளை சூழலோடு பின்னிப் படைக்கும் திறன், அறிவியலையும் இலக்கியத்தையும் இணைக்கும் அதிர்ஷ்டமான சேர்க்கை, வரலாற்றை புனைவில் புதைக்காமல் ஒளிர வைக்கும் கலை — இவை இந்த எழுத்தாளர்களை சொல்வனம் குடும்பத்தில் தனித்துவமாக்குகின்றன.
Tag: ஆசிரியர் குழு
சொல்வனம் சிறப்பிதழ்: இந்திரா பார்த்தசாரதிஅவர்களின் படைப்புலகம்
தில்லி, போலந்து என்று உலகின் பல்வேறு கல்விச் சூழல்களில் ஆய்வாளராகவும் பேராசிரியராவும் பணியாற்றிய இ.பா., கல்விச் சூழலில் வாழ்ந்தாலும் எப்போதும் இலக்கியத்தோடும் வாசகர்களோடும் நேரடி நாடி தொடர்பை வைத்திருந்தார். இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில், புதிய குரல்களை அடையாளம் கண்டு களத்தில் நிறுத்துவதில் அவர் காட்டிய தன்னல மறுப்பு, தமிழ் இலக்கிய வரலாற்றில் பதிவாக வேண்டிய ஒன்று.
அறிவிப்பு: வங்க மொழிச் சிறப்பிதழ்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் அடுத்த இதழ் (240) வங்க மொழி இலக்கியம், கலை ஆகியவற்றைச் சிறப்பிக்கும் இதழாக அமையும்.
