ஏரோசால் (தூசிப் படலம்)

எல்லாவகை ஏரோசால்களும் சூழலுக்கு  ஒரே மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.
கடல் உப்பு அடிப்படை கொண்ட வெளிர் நிற ஏரோசால்கள் ஒளியை பிரதிபலிக்கக் கூடியவை.  இவை பூமியைக்  குளிர்விக்கின்றன.
காட்டுத்தீ கக்கும் ஒளிர் கருநிற (jet -black ) புகைக்கரி சூரிய வெப்பத்தை கிரகித்துக் கொள்கிறது. அதிக உயரப் பிரதேசங்களில் ஏரோசால் இதைச் செய்வதால் குறைவான வெப்பமே நிலப் பரப்பைத் தாக்குகிறது. கருத்த ஏரோசால் வெண்பனி மற்றும் பனிப் பொழிவுகளைக்  கருப்பாக்கி விடுகிறது. அதனால் அவற்றின் ஒளி திருப்பும் திறன் (albedo) குறைந்து பனி உருக ஆரம்பிக்கிறது.

ஈக்கோசிஸ்டம் (சூழல்சார் தொகுதி)

ஈக்கோசிஸ்டம் (Ecosystem ) என்னும் சொல், சூழல்சார் தொகுதியைக் குறிக்கிறது. சூழலியல் (Ecology) என்பது சூழல் தொகுதிகள் பற்றிய கல்வி. ஈக்கோ சிஸ்டங்கள், இயற்கை வாழ்விடம் (Habitat), சூழல் உயிரினக் குழுமம் (Biome ), மற்றும் உயிர்க்கோளம் (Biosphere ) என்னும் பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன. ஈக்கோ சிஸ்டம் என்னும் சொல்லுக்கு, Oxford Languages தரும் அதிகார பூர்வ வரையறுப்பு: இடைவினைகள் (interactions) மேற்கொள்ளும் உயிரினங்களையும் (தாவரங்கள், விலங்குகள் மற்றும் சிதைப்புயிரிகள் ) அவற்றின் பௌதீக (உயிரற்ற) சுற்றுச்சூழலையும் (காற்று, நீர் மற்றும் மண் ) உள்ளடக்கிய ஓரிடத்து உயிரிய சமூகம்.

புலம்பெயரும் பவளப்பாறைகள்

பவளப்பாறைகள் பாறை வகைகளில் ஒன்றல்ல. சில வகைக் கடலினங்களின் வாழ்ந்து முடிந்த எச்சங்களும் வாழ்ந்துகொண்டிருக்கும் சில உயிரினங்களின் தொகுப்புகளுமே பவளப்பாறைத் திட்டுகளாகின்றன. இவை வெறும் சுண்ணாம்புத் திட்டுகள் மட்டுமே.

தானுந்து பேட்டரி மறுசுழற்சியும் காரீய நஞ்சேற்றமும்

காரீயம் எளிதில் சுவாசம் அல்லது வாய் மூலமாக உடலினுள் சென்று ரத்த ஓட்டத்தில் கலந்து உணவுப் பாதை மற்றும் மூளையில் உபாதைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிந்திருக்கின்றனர். சிறிய அளவு காரீயம்கூட இளம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, IQ, கவனம் ஆகியவற்றின் குறைபாடுகளுக்குக் காரணமாகிவிடும். காரீயம் ஒரு வலிய நரம்பு நச்சு (neurotoxin). சில நேரங்களில் வன்முறையைத் தூண்டிவிடவும்கூடும்.