ஒரு நாள், ராசாத்தி காய்கறி வாங்கிக்கொண்டு உள்ளே வந்தபோது, “டெய்லி, அவ கூட என்னடி பேச்சு? அவங்களைத்தான வேண்டாத குடும்பம், ஆகாத குடும்பம், அசிங்கமான குடும்பம், போலீஸ்ல புகார் சொல்லுவோம்”-ன்னு சொல்லிச்சொல்லி செத்திங்களே, சாவடிச்சிங்களே. இப்ப எதுக்கு அப்படி பேசறே? பழகறே, ஒன்னுமே புரியல, எனக்கு
Author: விஜயபிரபா
அறிவுப்புருசன்
“அவரும் ஐ.ஏ.எஸ் அகாடமி வச்சு நடத்திட்டிருக்காரு. அவர் எம்.ஏ.எம்.பில் முடிச்சுவரு. பி.எச்.டி. படிச்சுட்டு இருக்காரு, மெட்ராஸ் யுனிவர்சிட்டியிலே. ஆந்தரபாலஜிப்பா. உணவைப்பத்தி ஆராய்ச்சி பண்றாரு. சரியான ஆளு. மோத்தேபாளையம் சொந்த ஊராம். இங்கேயே வந்துட்டாங்களாம்.
நிழல் மகன்
இறந்த மனைவி ரத்னா பரமசமுத்திரத்தில் டீச்சராக, அதுவும், பெண்கள் உறைபள்ளியில் வேலை செய்தாள். அவளும் கர்னூல்காரி. ஜொன்ன ரொட்டியில் கெட்டிக்காரி. கடப்பா காரதோசை செய்வதில் எக்ஸ்பெர்ட். அவளுடைய மிளகாய் ஊறுகாயிக்கும் கோங்குராப் பச்சடிக்கும் நானும், என் மகளும் மாத சந்தாதாரர்கள்.
கழிவுமுடிவுகள் -பல்ஸ் பார்த்தபோது
அவர், எல்லா தலைப்புகளிலும். எந்த நேரமும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார். சமூகவியல் கருத்தரங்கமா? அவருடைய உயர்ந்த சமூகப் பார்வை இருக்கும். உளவியல் கருத்தரங்கமா? உங்கள் மனதை புட்டு புட்டு வைப்பார். இயற்பியல் கருத்தரங்கமா? அவருக்கு தெரியாத குவாண்டம் பிஸிக்ஸா? எல்லாம் கூகுள் அப்பாவின் உதவிகள். சரியா தவறா – கிடையாது. சும்மா, அடித்து விளையாடுவார்.
மலையோதிகள்
இயற்கை செதுக்கிய ஓதிமலை. மனிதர்கள் இது வரைக்கும் தன்னை எதுவும் செய்யாமல் விட்டதற்கு நன்றி – என்பதைபோல – இளவெயிலில் மின்னியது. அந்த மினுப்பில் “எத்தனை முறை நான் பகைகளைப் பார்த்தவன்” “நான் கடவுள்- கடவுள் மோதலைப் பார்த்தவன் மட்டுமல்ல, கடவுள்-அசுரன் பகை மோதலையும் பார்த்தவன்” என்கின்ற நயதொனியில்,
எலும்புச் சடங்கன்கள்
அவன் சதிஸ். காமாட்சி உயிரோடு இருந்திருந்தால், ’டேய், சதிஸ், பெரியவன் வீட்டுக்கு போனியா, எப்படிறான் இருக்கான்?, அவனுக்கு உடம்பும், கட்டினவளும் சரியில்லப்பா என்று சொல்லி அவனுக்கு காபிபோட்டு பெரியவன் வீட்டு சங்கதிகளைக் கேட்டிருப்பாள். சதிஸும், காபியோடு கலங்கியிருந்த பால் போல, சுவைத்துச் சொல்லியிருப்பான். சதிஸைப் பார்த்ததும், இங்கேயும் கோள் வைக்க வந்துவிட்டான் என்பதைப் போல், வண்டிக்கு ஒரு வெள்ளிக்கோள் வேகம் எடுக்கவைக்கப்பட்டது.
