இன்றைக்குக் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் நான்தான். அராபிகா, ரொபஸ்டா என்று இரண்டு வகையில் என்னைப் பயிரிடுகிறார்கள். இந்த இரண்டு வகைகளையும் கலந்து காபி தயாரிப்பவர்களும் உண்டு. இவை இரண்டுதான் முக்கியமான வகைகள் என்றாலும் நான் நூற்றுக்கணக்கான வகைகளில் பயிரிடப்படுகிறேன்.
Author: இலவசக் கொத்தனார்
உலக நிகழ்வுகளும் ஊகச் சந்தையும்
உதாரணமாக இந்த நேரத்தில் இந்தியா வெல்லும் என்று நூறு டாலர் பந்தயம் கட்டி இந்தியா வென்றால் உங்களுக்கு கட்டிய நூறு டாலரோடு இன்னும் 125 டாலர் சேர்த்து 225 டாலர் கிடைக்கும் என்று சொல்வார்கள். நாம் 100 டாலர் பந்தயம் கட்டலாம். நாளைக்கு இந்தியா வென்றால் 100 டாலருக்கு 150 டாலர் கிடைக்கும் என்று விலை மாறலாம். ஆனால் நாம் கட்டிய பந்தயம் அதனால் பாதிப்புக்குள்ளாகாது. அது போல நாம் ஒரு முறை பந்தயம் கட்டினால் கட்டியதுதான். அதிலிருந்து பின்வாங்க முடியாது. வாங்கி விற்கவும் வழி கிடையாது
உலகக் கோப்பை உற்சவம்!
முதல் போட்டியில் நெதர்லாந்து அணி பாகிஸ்தானை கிட்டத்தட்ட தோற்கடித்துவிட்டனர். அதே போல அமெரிக்கா இந்தியாவையும், ஆப்கானிஸ்தான் நியூசிலாந்தையும், நேபால் இங்கிலாந்தையும் திணறச் செய்தனர். பெரிய போட்டிகளில் வெற்றி பெற்ற அனுபவம் இல்லாத காரணத்தினாலேயே கடைசிக் கணத்தில் அவர்கள் கோட்டை விட்டனர். அவர்கள் முக்கியமான சில கேட்சுகளைக் கோட்டை விட்டதும் கூட ஒரு காரணம். யாருக்கும் வெற்றி உறுதி இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
தன்மை விலையிடல் – பேரம் பேசுதலின் நவீனப் பரிணாமம்!
நான்கு நகரங்களில் கிட்டத்தட்ட ஐந்நூறு நுகர்வோர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தன்மை விலையிடல் காரணமாகக் குறைந்தபட்ச விலைக்கும் அதிகபட்ச விலைக்கும் கிட்டத்தட்ட 25% சதவிகித வித்தியாசம் இருப்பதாகக் கண்டறிந்திருக்கின்றனர். வெறும் பலசரக்கு மட்டும் வாங்குவதில் இந்த வித்தியாசமானது ஒரு வருடத்தில் ஆயிரத்து இருநூறு டாலர் வரை செலவினத்தை அதிகமாக்கும் எனச் சொல்கின்றனர். இப்படி மாறுபடும் விலைகளை வைப்பதே ஒரு விதத்தில் பேரம் பேசுவதுதான்
காந்தா பாடலும் கல்லிடைக்குறிச்சி ஐயர்களும்
பக்திங்கிறது நாம பாடற விதத்தில் வரணும். ராமரைப் பத்திப் பாடும் போது கேட்கறவாளுக்கு என்ன பக்தி வரதோ அதே பக்தி நான் டேபிள் சேரைப் பத்திப் பாடினா வரணும். அதுதான் சங்கீதம்ன்னு சொன்னா. அதுதான் சரிங்கறேன். பக்தி சங்கீதத்தில் இருக்கணும்
தீக்ஷிதர் 250!
ஒரு மனிதர். அவரின் பல பரிமாணங்களைப் பற்றிப் பேச முப்பது செயல்முறை விளக்கங்கள். ஒருவரைப் பற்றி முப்பது பேர் பேசப் போகிறார்கள். திரும்பத் திரும்ப அரைத்த மாவையேதான் அரைத்திருப்பார்கள் என்று நினைத்தால் அதுதான் இல்லை. முப்பது பேரும் முப்பது விதமாக அவரை அலசி ஆராய்ந்தார்கள். ஒருவருக்குக் கூட அவர்கள் தலைப்பில் கொடுத்த நேரத்தில் பேசி முடிக்க முடியவில்லை. அவ்வளவு விஷயங்களைக் கொட்டித் தீர்த்தார்கள்.
கண்ணியமான கடைசிக் காலம்
இந்தியா வெகுவேகமாக மூப்படைந்து கொண்டு இருக்கிறது. அடுத்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் ஐந்து இந்தியர்களில் ஒருவர் அறுபது வயதிற்கு மேலானவராக இருப்பார். தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் ஆயுள் எதிர்பார்ப்பு அதிகம் இருப்பதாலும், குடும்பங்களில் சிறிதாகிக் கொண்டே போவதாலும் மூப்பின் பாதிப்பு அதிகம் இருக்கப் போகிறது.
போதும் என்ற மனமே…
நம்மிடையே மிகச் சிறந்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுதுமே சரி செய்ய வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்களே தவிர, சமயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. எதைக் கட்டாயம் சரி செய்ய வேண்டுமோ அவற்றை சரி செய்து, மற்றவற்றைக் கொஞ்சம் பாராமுகமாகக் கடந்து, வயதில் மூத்தோருக்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதை விட அவர்கள் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
எங்கே செல்லும் இந்தப் பாதை?
இருக்கும் முதியோர் இல்லங்களில் கூட அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதில்தான் கவனம் இருக்கிறதே தவிர அவர்களுக்கு ஒரு தரமான வாழ்வுமுறையை அமைத்துத் தர வேண்டும் என்ற முனைப்பு இருப்பதில்லை. இந்நிறுவனங்கள் தாங்கள் வசூலிக்கும் கட்டணங்களைப் பொறுத்து சாப்பாடு, உறைவிடம், மருத்துவத் தேவைகள் போன்ற அடிப்படை வசதிகளை ஓரளவு நன்றாகச் செய்து தருகின்றன. இந்நிறுவனங்களில் நல்ல முறையில் கவனிப்பு இருந்தாலும் இவை இங்கிருப்பவர்களின் வாழ்க்கையை எவ்வளவு தூரம் அர்த்தமுள்ளதாகச் செய்கின்றன என்பது கேள்விக்குரியதே
சாண்ட்விச் தலைமுறையும் சொல்ல இயலா சங்கடங்களும்!
நம் பெற்றோருக்கு வயது கூடக் கூட அவர்களின் தேவை ஒரே மாதிரியாகவும், இதுதான் என்று எதிர்பார்க்கக்கூடியவையாகவும் இருப்பதில்லை. அவர்கள் தேவைகளுக்கெல்லாம் ஈடு கொடுக்க நம் வாழ்வுமுறைகளில் நாம் பெரும் சமரசத்தைச் செய்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது, நம்மைப் பல விதங்களில் பாதிக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
பராக்குப் பார்த்தல்!
தமிழிலும் இதற்குத் தொன்மையான ஒரு பெயர் உண்டு. அது பராக்குப் பார்த்தல். அக்கு என்றால் கண். பர என்றால் மற்றயவை. பரலோகம் என்றால் நம்முடைய உலகம் இல்லாத மற்றொரு உலகம். பரமண்டலம், பரதேசமெல்லாமும் அப்படியே. பரோபகாரி என்றால் மற்றவர்களுக்கு உதவி செய்வபன். ஆக பார்க்க வேண்டியவற்றை விட்டுவிட்டு மற்றவற்றில் கண்ணை வைப்பதற்குப் பராக்கு என்றார்கள். பொதுவாக கவனமின்மை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டாலும், வேடிக்கை பார்ப்பதற்கும் இந்தச் சொல்லைப் பயன்படுத்தலாம்.
மண்டை பத்திரம்!
விதி மாற்றம்தான் என்ன? ஆட்டத்தின் பொழுது ஒரு வீரருக்கு தலையிலோ கழுத்திலோ அடிபட்டால் அணியின் மருத்துவர் அந்த வீரரை சோதித்து அவருக்கு தாற்காலிக மூளை அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறதா எனச் சோதனை செய்ய வேண்டும். அப்படி அதிர்ச்சி உண்டாகி இருக்கும் பட்சத்தில், அவருக்குப் பதிலாக மாற்றாள் ஒருவரை அணியில் சேர்க்க மேட்ச் ரெபரியிடம் வேண்டலாம். அந்த மாற்றாள் அடிபட்ட வீரருக்கு ஒத்த திறமை உள்ளவராக இருக்க வேண்டும்.
பயணப்படியும் பரலோகப் பயணமும் பின்னே பஸ் ஆல்டரினும்
மனிதன் நிலவில் காலடி வைத்தது 1969 ஆம் ஆண்டு. இவ்வருடம் அந்நிகழ்வு நடந்து ஐம்பது வருடங்கள் ஆனதால் அது குறித்து ஏராளமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிலவுக்கே போய் வந்தாலும் நம் அரசு அலுவலங்களின் சிகப்பு நாடாவில் இருந்து தப்ப முடியாது என்ற ஒரு கட்டுரை மிக சுவாரசியமானது.
