இராஜேந்திரனின் காதலி

பனங்காடுகள் நிறைந்த அந்த இடத்தின் ஒரு பகுதியில் சம்பந்தப் பெருமானால் பாடப்பெற்ற பனங்காட்டேஸ்வரர் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் கோவில் கொண்டிருந்தார். ஒரு காலத்தில் பாடல் பெற்று புகழ் கொண்டு விளங்கிய அந்தத் தலத்தின் தற்போதைய நிலை கண்டு ராஜேந்திரன் இதயம் கலங்கியது. கோவிலைப் புனர்நிர்மாணம் செய்ய உத்தரவிட்டான். தவிர அந்தப் பணியை தன்னுடைய அணுக்கியான பரவையே முன்னின்று நடத்தவேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தான். பனங்காட்டேஸ்வரரான ஈசன் ‘பரவை ஈஸ்வரமுடையார் மகாதேவர்’ என்ற பெயராலும் அந்த ஊர் பரவை புரம் என்ற பெயராலும் அழைக்கப்படட்டும் என்று ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.

இந்தியா: பண்டைக்காலத்து நீதித்துறை அமைப்பு

தமிழகத்தின் கிராம சபைகளைக் குறிக்கும் ஆகப் பழைய கல்வெட்டான பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையனின் மானூர் அம்பலவாண சுவாமி கோவில் கல்வெட்டு (பொயு 898),

‘மக்கள் சபையில் மன்றாடுகிறது ஒரு தர்மம் உட்பட மந்திரப் ப்ராம்மணம் வல்லார் சுவ்ருத்தராய் இருப்பாரே ஒரு பங்கினுக்கு ஒருத்தரே சபையில் மன்றாடுவதாகவும்’

என்று அந்தக் கிராமத்தின் நீதி சபையின் உறுப்பினர்களின் தகுதியை நிர்ணயம் செய்கிறது. அதாவது உறுப்பினராகக் கோருவோர் தர்ம சாஸ்திரங்களின் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்கவேண்டும்.

மனதை விட்டு அகல மறுக்கும் தாய் மொழி

ஒலியின் விதத்தை அடிப்படையாகக் கொண்ட மாண்டரின் போன்ற மொழிகளைப் பேசுபவர்களுக்கு மூளையின் இடதுபுறம் அதிகமாக வேலை செய்யுமாம். ஒலி வேறுபாட்டில்லாத ஆங்கிலம் போன்ற மொழிகளைப் பேசுபவர்களுக்கு வலது மூளை அதிகமாக வேலை செய்கிறதாம், ஏனெனில் இத்தகைய மொழிகளில் வார்த்தைகளின் வேறுபாடு உச்சரிப்பைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை.

தெலுங்குச் சோழர்கள்

தென்னிந்திய வரலாற்றைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களாகத் தெலுங்குச் சோழர்களைச் சொல்லலாம். இருப்பினும் , அவர்களைப் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. பெரும் பேரரசுகளின் வரலாறுகள் குறிப்பிடப்படும் போது போகிற போக்கில் தெலுங்குச் சோழர்களும் இடம்பெறுவதே வழக்கம். இவர்கள் சோழர்களின் வம்சாவளியினர் என்பது தெரிந்த செய்தியாக இருந்தாலும், இவர்களுடைய ஆட்சி எந்தக் காலத்தில் ஆந்திராவில் உருவானது? சோழர்களுக்கும் இவர்களுக்குமான உறவுமுறை எத்தகையது என்பது பற்றியெல்லாம் அதிகம் ஆராயப்படவில்லை.

தெலுங்குச் சோழர்களின் தோற்றத்தைப் பற்றியே பல விதமான கருத்துகள் உள்ளன. சோழர்கள் என்று இவர்கள் தங்களைக் கூறிக்கொள்வதினால் தமிழகச் சோழர்களின் வம்சாவளி என்று பெரும்பாலானோர் கருதினாலும், சிலர் இவர்களை ஆந்திர மாநிலத்தில் ஆட்சி செய்த பல்லவர்களின் வழித்தோன்றல்கள் என்றும், சிலர் சாளுக்கியர்கள் வழிவந்தவர்கள் என்றும் கூறுவது உண்டு. ஆனால், இவர்கள் சோழர்கள் வம்சாவளியினர்தான் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் கல்வெட்டு ஆதாரங்களும் இலக்கிய ஆதாரங்களும் அடங்கும். சோழன் என்பதின் தெலுங்கு வடிவம்தான் சோடன் என்பது.

பல பிரிவுகளாக ஆந்திராவின் தென்பகுதியை ஆண்ட தெலுங்குச் சோழர்களின் கல்வெட்டுகள் பெரும்பாலும் இந்த வரிகளோடுதான் துவங்குகின்றன:

திருவாலங்காட்டுச் செப்பேடுகள் சொல்லும் சமூக வரலாறு

தமிழக வரலாற்றை ஓரளவுக்குத் தொகுத்த எழுத உதவும் சான்றுகளாக இருப்பவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும்தான்… பிற்காலச் சோழ வரலாற்றில் ஒரு மைல்கல் என்று இதைச் சொல்லலாம். லெய்டன் செப்பேடுகளோடு சேர்ந்து பிற்காலச் சோழர் வரலாற்றை முழுமையாக்கியதன் பெரும்பங்கு இச்செப்பேடுகளுக்கு உண்டு. வரலாற்றுச் செய்திகளைத் தவிர அக்காலச் சமூகம், அதிகாரவர்க்கம் ஆகியவற்றைப் பற்றியும் இது போன்ற செப்பேடுகளின் மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது.

முதலாம் ராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்ட இந்தச் செப்பேட்டில் 31 ஏடுகள் உள்ளன. அதில் முதல் 10 ஏடுகள் சமஸ்கிருதத்திலும் அடுத்த 21 ஏடுகள் தமிழிலும் உள்ளன. இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம், அக்காலச் செப்பேடுகள் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதப்பட்டவை என்பது. சமஸ்கிருதப் பகுதியில் பெரும்பாலும் அரசர்களின் வம்சத்தைப் பற்றியும் அவரது பெருமைகளைப் பற்றியும் கண்டிருக்கும். தமிழ்ப்பகுதி தானமாக வழங்கிய பகுதிகளையும் அதனை நிர்வகிக்கும் வழிமுறைகளைப் பற்றியும் விரிவாகக் குறித்திருக்கும்.

மருது பாண்டியரின் கனவு

இந்திய விடுதலைப் போராட்டத்தின் நீண்ட நெடிய வரலாற்றைப் பொருத்தவரை, முதல் சுதந்தரப் போர் என்று நம்மாலும் சிப்பாய்க் கலகம் என்று பிரிட்டிஷாராலும் அழைக்கப்படும் 1857ம் ஆண்டுக் கிளர்ச்சியே விடுதலைக்காக நடந்த முதல் ஒருங்கிணைந்த முயற்சியாகக் கருதப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னால், விடுதலைக்காக இப்படி ஒரு கூட்டு முயற்சியை தென்னகத்தில் மேற்கொண்டவர், மருது பாண்டியர்களில் இளையவரான சின்ன மருது. போரின் ஒரு கட்டத்தில் இதற்கான பிரகடனத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார். விடுதலைப் போரின் பல கட்டங்களில் நாம் பார்க்கும் துரோகமும், சதிச்செயல்களும் இந்த ஒரு முயற்சியையும் முறியடித்துவிட்டன என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் செய்தி
‘மூத்தது மோழை இளையது காளை’ என்ற பிரபலமான தமிழ்ப் பழமொழி, மருது சகோதரர்களில் பெரிய மருதுவிற்குப் பொருந்தி வராவிட்டாலும், இளையவரான சின்ன மருதுவிற்கு பொருந்துகிறது என்பது பல வரலாற்று ஆவணங்களாலும் தெளிவாக விளங்குகிறது. அவர் வீரத்திலும், தீரத்திலும், விவேகத்திலும் …

அகதிக் கடத்தல்

மேற்காசியாவிலும் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள நாடுகளில் இருந்தும் யூரோப்பில் குடியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்த படியே இருக்கிறது என்றும் அதன் விளைவுகளைப் பற்றியும் சொல்வனத்தின் முந்தைய இதழ்களில் படித்திருக்கிறோம். யூரோப் வளமிக்க வாழ்க்கையை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டம் கூட்டமாக அகதிகளாக இம்மக்கள் குடியேறுகின்றனர். பிரிட்டன் போன்ற சில நாடுகள் யூரோப்பிய யூனியனிலிருந்து தனியாக செல்லும் நிலைமைக்கும் இந்த அகதிகள் பிரச்சனை பெரும் காரணமாக இருந்ததைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். எல்லாவற்றையும் காசாக்கி ஆதாயம் தேடும் சிலர் இந்த ‘வாய்ப்பையும்’ பயன்படுத்தி இந்த நாடோடிகளுக்கு உதவுகின்றனர். போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் போன்று பெரிய அளவில் வளர்ந்து வரும்…

பிரிட்டனும் யூரோப்பும் – அடுத்தது என்ன?

பிரிட்டன் யூரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியவுடன், உலகப் பொருளாதாரம் மாபெரும் சிக்கலைச் சந்திக்கும் என்றும், யூரோப் மட்டுமல்லாது உலக அளவிலும் நாடுகளின் உறவுகளிலும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் பல ஆருடங்கள் கூறப்பட்டன. அதன்படியே முதல் சில நாட்களில் முக்கியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்னவோ உண்மைதான். ஆனால், சீக்கிரமே சுதாரித்துக்கொண்டு பங்குச் சந்தைகள் மீண்டுவிட்டன. பல சந்தைகளின் குறியீடுகள் ஓட்டெடுப்புக்கு முந்தைய அளவை எட்டியதோடுமல்லாமல், அதையும் தாண்டி முன்னேறத் தொடங்கியுள்ளன. இது சுட்டுவது என்ன?

பிரிட்டனின் முடிவு – யாருக்கு வெற்றி?

இப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரவேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்த பிரதமர் டேவிட் காமரன்தான், பிரிட்டன் வெளியேறுவதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் என்பது ஒரு நகைமுரண். பிரிட்டனின் பிரதான கட்சிகளுக்கு மாற்றாக வளர்ந்து வந்த வலதுசாரிகளான யூகேஐபி (UK Independence Party) கட்சி உள்ளூர் தேர்தல்களில் வெற்றிகளைக் குவித்து வந்தது. யூகேஐபி, பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தீவிரமாகப் பிரச்சாரம் செய்த கட்சி. இது ஒருபுறமிருக்க 2013ல் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், பிரிட்டன் பொதுத்தேர்தலில் காமரனின் கன்சர்வேட்டிவ் கட்சியை விட, தொழிற்கட்சிக்கு ஆதரவு அதிகரித்திருப்பதாகத் தெரிவித்தன. நிலைமை இப்படியே தொடர்ந்தால், தமது கட்சி தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று உணர்ந்த டேவிட் காமரன், ஒரு அதிரடித் திட்டத்தை அறிவித்தார்.

ஒலியின் உருவம்

ஒலி, வடிவமும் உருவமும் இல்லாதது என்று காலங்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிர்வுகளால் ஆன, காதால் மட்டும் கேட்டுணரப்படும் புலனான ஒலியில் ஒரு குறிப்பிட்ட வீச்சுக்கு அப்பாற்பட்ட அதிர்வெண்கள் சாதாரண மனிதப்புலன்களுக்கு எட்டாதது என்பதும் அறிவியல் உண்மைகளில் ஒன்று. கேளா ஒலி என்று அறியப்படும் இந்த வகை ஒலி அதிர்வுகள் சில உயிரினங்களால் உணரக்கூடியது என்பதும் நாம் அறிந்த ஒன்று. ஆனால் கேட்கக்கூடிய, அதன் அதிர்வுகள் மூலம் உணரக்கூடிய ஒலியை சில வடிவங்களாகக் காணவும் செய்யலாம் என்பது உலக அறிவியல் வரலாற்றின் அண்மைக்காலத்திய ஆராய்ச்சிகளின் முடிவு.

ஆடி அடங்கும் எல் நீன்யோ

கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக உலக வானிலையையும், அதன் மூலம் பல நாடுகளின் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைத்த எல்-நீன்யோவின் தாக்கம் ஒருவழியாகக் குறைந்து கொண்டு வருகிறது. பெரும்பாலான வானிலையாளர்களின் கருத்துப்படி, இவ் வருட மத்தியில், அதாவது இந்திய வருடக்கணக்கில் ஆடி மாதம், அது சமநிலைக்குத் திரும்பக்கூடும் என்று தெரிகிறது.
இதற்குச் சான்றாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டுவது பின்வரும் காரணிகளைத்தான்…
ந்தியாவில் தென்மேற்குப் பருவமழை பொய்த்துப்போனது, வடகிழக்குப் பருவமழை சக்கைப்போடு போட்டு, சென்னை வரலாறு காணாத வெள்ளத்தைச் சந்தித்தது. இதுபோல உலகத்தில் பல பகுதிகளில் அதீத மழைப்பொழிவு, மற்ற சில பகுதிகளில் வறட்சி என்ற எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது எல்-நீன்யோ. இந்தோனேசியா, தாய்லாந்து, வியாட்னாம், பிலிப்பைன்ஸ், அமெரிக்க பசிபிக் தீவுகள் ஆகிய இடங்களில் வறண்ட வானிலையை உருவாக்கியது…
ஏற்கனவே உயர்ந்து வரும் உலக வெப்பநிலையோடு எல் நீன்யோவின் விளைவுகளும் சேர்ந்துகொண்டதால், கடந்த ஒரு வருடங்களாக பல மாதங்கள் சராசரியை விட அதிக…

எல் நீன்யோ – தொடரும் பருவநிலை மாற்றங்கள்

தென்மேற்குப் பருவமழையளவைக் குறைத்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எல் நீன்யோ, வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்த வரை அதற்கு நேரெதிரான விளைவையே ஏற்படுத்தி வந்துள்ளது. எல் நீன்யோ நிகழ்வு நடைபெறும் நேரங்களில் வடகிழக்குப் பருவமழை வழக்கத்திற்கு அதிகமாகவே பெய்து வந்திருக்கிறது. இம்முறையும் அதே போல், அதிக அளவு மழைப்பொழிவே இருக்கும் என்பது வானிலையாளர்களின் கணிப்பு. மேலும் இரு முக்கிய காரணிகளான ஐஓடியும் MJOவும் இம்முறை சாதகமாக இருப்பதால், மழையளவு அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், வழக்கமாக அக்டோபர் மத்தியில், ஐப்பசி முதல் வாரத்தில் துவங்கவேண்டிய வடகிழக்குப் பருவமழை இவ்வருடம் தாமதமாக, அக்டோபர் 28ம் தேதி துவங்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தியப் பருவமழையும் காரணிகளும்

பெருங்கடல்களை நாம் பல்வேறு பெயரிட்டு அழைத்தாலும் அவையெல்லாம் ஒன்றோடொன்று இணைந்தவையே. அதனால், பெருங்கடல்களில் ஓரிடத்தில் ஏற்படும் பாதிப்பு மற்றோரிடத்தில் அது தொடர்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில் ஒன்றுதான் எல்-நினோ. இந்தோனேசியாவைக் கிழக்கெல்லையாகவும் தென்னமெரிக்காவை மேற்கெல்லையாகவும் கொண்டு பரந்து விரிந்திருக்கும் பசிபிக் கடலின் வெப்பம் ஒவ்வோரு இடத்திலும் வேறுபட்டு இருக்கும்.