மேப்பிள் பாகு

வட அமெரிக்காவின், வடகிழக்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மேப்பிள் சாறு அங்கே யூரோப்பியர்கள் வருவதற்கு வெகுகாலத்துக்கு முன்னரே  மரத்திலிருந்து சேகரிக்கப்பட்டு காய்ச்சிப் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருந்தது.  அமெரிக்கப் பூர்வீகக் குடிகளின் சடங்குகளில் மேப்பிள் சாறு காய்ச்சி பதப்படுத்தப்பட்டு பயன்படுத்தபட்டது. வசந்தகாலத்தின் முதல் முழுநிலவில் மேப்பிள் சாற்றை அருந்தி மேப்பிள் நடனமிடுவதும் அவர்களின் கலாச்சாரத்தின் முக்கிய அங்கமாக இருந்தது. 

விழியிலிருந்து நினைவுக்கு

கவிஞர்களை இரு வரிசைகளில் எதிரெதிரே அமர்த்தி இருவர் இருவராகக் கவிதைகள் புனைந்து சிறந்த கவிதையைத் தேர்ந்தெடுக்கும் முறை இருந்தது. கவிஞர் யுய்யே எழுதிய பாடலுக்குப் போட்டியாகப் புனையப்பட்ட இப்பாடல் பரிசை வென்றது. இரு பாடல்களும் உதிர்ந்து கிடக்கும் செந்நிற மேப்பிள் இலைகள் அவ்விடத்தை அழகுபடுத்துவதாகப் புனையப்பட்டவைதான்.