மிளகு அத்தியாயம் அறுபத்தொன்பது

ஒரு கல்யாணமாகாத பெண் உலகத்தைப் பார்க்கறதுக்கும் கல்யாணமான பெண் பார்க்கறதுக்கும் வித்தியாசம் இருக்கும். கல்யாணமாகி குழந்தை குட்டி பெற்று அதுகளையும் கட்டியவனையும் பராமரித்துக்கொண்டு, அதோடு ராஜாங்க காரியங்களையும் கவனிக்கறது கஷ்டம் தான். ஒண்ணு வேணும்னா செய்திருப்பேன். சமையல்கட்டை பெரிசாக்கி சமைச்சுக்கிட்டே அரசியல் பேசி நிர்வாகம் பண்ணியிருப்பேன். சமையலும் பண்ணியிருப்பேன். அப்புறம் ஒண்ணு. எனக்கு சரியாக சமைக்க தெரியாது. ஆனால் கற்றுக்கொண்டிருப்பேன்

மிளகு அத்தியாயம் அறுபத்தாறு

ராணி மகாராணியா நாற்காலியை இறுகப் பிடிச்சுக்கிட்டு பதவி போதையிலே, அதிகார போதையிலே, புகழ் போதையிலே இருக்கணும், மகனே ஆனாலும் ராஜ பதவி எல்லாம் தர முடியாது. மூணு வேலை நெய் விட்டு சாப்பிட்டுவிட்டு வயத்தைத் தடவிக்கிட்டு நிம்மதியாக உறங்கி உறங்கி மோர்க்குழம்பிலே போட்ட சேப்பங்கிழங்கு மாதிரி வழவழ கொழகொழன்னு ஏதாவது பேசிக்கிட்டிருக்கணும். அதான் ராணியம்மாவுக்கு வேண்டியது. 

மிளகு   அத்தியாயம் ஐம்பத்தேழு

வரிசையாக மூன்று சாரட்டுகள் ஐந்து நிமிட இடைவேளையில் வந்து நிற்கின்றன. மிர்ஜான் கோட்டையில் மகாராணி வசிக்கிறார் என்பதோடு அவருடைய பிரியத்துக்குரிய வைத்தியரும் மனைவியும் கூட கோட்டைக்குள் வசிப்பதால், நடந்து கூட வந்திருக்கலாம். மொத்தம் பத்து நிமிடம் தான் பிடித்திருக்கும். ஆனால் பாதுகாப்பு வழிமுறைகள் அதை அனுமதிப்பதில்லை என்பதால் ரதங்கள் குதிரை பூட்டி வரவேண்டியிருக்கிறது. 

 மிளகு   அத்தியாயம் ஐம்பத்தாறு

அடுத்து ஹொன்னாவரில் இந்த சாக்கடை அடைப்பை சீர்செய்ய இருபதாயிரம் வராகன் செலவுக்கு வழி செய்வது குறித்து ஏற்கனவே சொல்லிவிட்டேன். மற்ற பிரச்சனைகள் நீ சொன்னவற்றையும் கருத்தில் கொண்டு அடுத்தடுத்து சரி செய்ய முயல்கிறேன். ஆனால், ஒன்று நீ கவனிக்க வேண்டும். 

மிளகு அத்தியாயம் முப்பத்தாறு

வெடியுப்பை வைத்து விளையாடியிருக்கிறார்கள் அவர்கள். தீபாவளி முடிந்து சுவதேசி பட்டாசு தயாரிக்கிற முயற்சியாம். எக்குத்தப்பாக ஒரு சிறு கரண்டி வெடியுப்பை நகக்கண் அளவு இத்தனூண்டு கந்தகத்தோடு கலந்து எரிய விட்டத்தில் ஏதோ வெடிப்பு உண்டாச்சாம். விரல் பிழைத்தது பகவான் கருணை. காயம் சீக்கிரம் ஆற மூலிகைச் சாறு தடவணும். அதுக்குத்தான் பறிச்சுட்டுப் போறேன். ஏற்கனவே நாலைந்து வருஷம் முந்தி இதே மாதிரி வெடியுப்போட விளையாடினாங்க. மூலிகை அரைச்சுப் பத்து போட்டு குணமாக்கினேன். இப்போ அதைவிட அதிகமா வெடியுப்பு. தேவையில்லாத இதர சேர்மானம். அதிகம் மூலிகை. அதிகம் நாள் எடுத்து குணமாகறது”. வைத்தியர் விளக்கினார்.

 மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்கு

பெத்ரோ அவர்களே, உத்தரவு எல்லாம் யாரும் யாருக்கும் தரவோ பெறவோ வேண்டியதில்லை. எங்கள் அரசியல் அமைப்பில் பாதுகாப்புப் பணியை அதற்கான கட்டணம் பெற்றுக்கொண்டு விஜயநகரம் செய்து வருகிறது. நாடுகளின் தொகுப்பு அவர்களால் நிர்வகிக்கப்பட்டு பரஸ்பர ’விற்பனை – வாங்குதல்’ சார்ந்த பணம் ’கொடுத்தல் – வாங்குதல்’ அவர்களால் சீராகத் தீர்வு செய்யப்படுகிறது. பார்த்திருப்பீர்களே, இங்கே உத்தர கன்னடத்திலும், அடுத்த பிரதேசங்களில் அத்தனை நாடுகளிலும் விஜயநகர் காசு பணம் தான் புழங்குகிறது. வராகன், பணம், காசு, விசா. அவற்றின் மதிப்பு எல்லா இடங்களிலும் ஒன்றுதான். அந்த நிதி மதிப்பு நிர்வாகம் விஜயநகரம் செய்வது”

மிளகு – அத்தியாயம் இருபத்தெட்டு

கைவேலை காட்டமாட்டாள் அவள் விருந்தாளிகளிடம். சந்தோஷமாக கள்ளும்  பிராந்தியும் கலந்து அருந்தி ஓவென்று குதித்துக் கூக்குரலிட்டு அனுபவிக்கட்டும். நாளை முதல் தள்ளுபடி விலை, இலவச பானம் அவ்வப்போது. நிச்சயம் வந்து விடுவார்கள். கேட்ட மதுவில் ஒரு சிறு நகக்கண் அளவு ஊமத்தைப் பொடி கலந்து விடுவாள். ஒன்றும் புதுசாகத் தெரியாது. கொஞ்சம் தலை கிர்ரென்று சுத்தலாம் என்று வைத்திய செங்கமலம் சொன்னாள். அரிந்தம் வைத்தியரின் சிஷ்யர்களும் அதைத்தான் ஆவலோடு எதிர்பார்த்தார்கள். வரும் திங்களுக்குள் இந்த வீரர்கள்   ஹொன்னாவர் வீதிகளில் போதம் கெட்டு அலைவார்கள்

மிளகு அத்தியாயம் இருபத்தாறு 

சென்னா பதிலுக்குக் காத்திராமல் சிட்டுக்குருவியாக ஓடிப் போகிறாள். வரதன் புன்முறுவலோடு அவள் வரக் காத்திருக்கிறான். ஐந்து நிமிடம் போனது. பத்து நிமிடம். என்ன ஆனது சென்னாவுக்கு? மகாராணி எங்கே? நடுநடுங்கி வெறும் உபாத்தியாயன் வரதன் தோட்டத்துக்கு இட்டுச் செல்லும் ஒழுங்கையில் நடக்கத் தொடங்குகிறான் சென்னாவைத் தேடி. மாலை மயங்கிவரப் பாதை இருண்டு வருகிறது. ஒரு திருப்பத்தில் வரதன் மேல் பூக்குவியல் ஒன்று விழுகிறது. அவனை இறுக அணைக்கும் கரங்கள் சென்னாவின் பூங்கரங்கள்.  அவனைத் தரைக்கு இழுக்கும் வலிமை வாய்ந்த கரங்கள் அவை. வரதன் தன்னை இழக்கிறான். சென்னாவின் செவ்விதழ்களில் முத்தமிட்டுப் பற்றிக்கொள்கிறான். கைகள் ஊர்கின்றன. நிலைக்கின்றன. மறுபடி ஊர்கின்றன. யாரோ கோல்விளக்கோடு தொலைவில் கதவு திறந்து வருகிறார்கள். சென்னா விலகிக் கொள்கிறாள். கற்றுத்தந்த மாணவி முன்னே நடக்க, கற்ற உபாத்தியாயன் தொடர்கிறான்.

மிளகு – அத்தியாயம் பதினேழு

உங்களில் எத்தனை பெயர் உலகைத் துறக்க, உணவுச் சுவை துறக்க, உறவுச் சுமை துறக்க, ஆடை துறக்க மனம் ஒப்புகிறீர்கள்? யாரும் மாட்டீர்கள். மனம் பக்குவப்படும் வரை”.