டோண்ட் கேரால் நம்பவே முடியவில்லை!. பொடி நடையாகவே அவர், ‘யான உழுந்தான் பாசா’ பக்கம் வந்திருந்தார். தனது அப்பா காலத்தில், இந்தப் பாசாவில் யானை ஒன்று விழுந்து மேலே ஏறி வர முடியாமல் நாளெல்லாம் பிளிறிக் கொண்டிருந்ததாம்!. வனத்துறை ஆட்கள் வந்தே அதைக் காப்பாற்றினார்களாம். அன்றிலிருந்து அது ‘யான உழுந்தான் பாசா’ ஆகிப்போனது. அன்று, அங்கே பாஷாணம் அடிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. சந்தனசாமிதான் கங்காணி!. டோண்ட் கேரைப் பார்த்ததும் கையசைத்து நட்பைக் காட்டினான்.
Tag: மலேசியா ஸ்ரீகாந்தன்
பூச்சாண்டி
‘பொதங்கிழம வயசுக்கு வந்துருக்கியா?. பரவால்ல நல்ல நாளுதான்..’ன்னு அம்மா சொன்னாங்க. ஆனா, அன்னிலேர்ந்து அவுங்க குடுத்த சாப்பாடுதான் வயித்த கொமட்டுது. சொன்னா நம்ப மாட்ட பூச்சாண்டி!. பச்ச முட்டய ஒடச்சி, அதுல நல்லெண்ணிய ஊத்தி, அப்படியே குடிக்க சொல்றாங்க.
எரிதழல்
மை சன், கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும், விளையாட்டின் விதிமுறைகள் தெரியாதவர்களும் வேடிக்கைக்காக இந்த விளையாட்டை விளையாடினால் தவறுதலாக துர்த்தேவதைகளின் கட்டுப்பாட்டிற்கு ஆளாகிப் போகும் அபாயம் இதில் இருக்கிறது. அதோடு, மனோதிடம் அற்றவர்கள்; கோழைகள் இதனால் எளிதில் மனநல பாதிப்பிற்குள்ளாகிப் போகும் ஆபத்தும் உண்டு. அதனால்தான் சைத்தானின் விளையாட்டு என்று சொல்லி, எங்களின் மார்க்கம் இதைத் தடைச் செய்திருக்கிறது. நான் உனக்கு உதவுவதுகூட எனது மார்க்கத்திற்கு விரோதமான செயல்தான்.
கடிதம்
கண்ணு, இந்த கொஞ்ச நாள்லியே என்னமா எளச்சி போயிட்டடீ?. முந்தியெல்லம்கூட ஒனக்கு இப்படி ஒடம்புக்கு முடியாம போயிருக்குதான்!. ஆனா, கூட கூட போனாக்கா ரெண்டு நாளு. பேரு வெட்டி வந்துருவியே?.. ஏண்டி, இந்த தடவ ஒடம்புக்கு ரொம்ப முடியிலியா?. நா வந்ததுகூட தெரியாமா கண்ண மூடியே கெடக்குறியேடீ?. அது சரி! நாந்தான் எனக்கு புள்ளிங்களே கெடையாதுன்னு சொல்லிட்டன்!. எனக்காவ நீயும் அவுங்கள ஒரேடியா ஒதுக்கி வெச்சி, பெத்த மனம் பித்துன்றத பொய்யாக்கிட்டியேடீ!. இப்படி முடியாம இருக்கறப்பகூட அவுங்கள பத்தியெல்லாம் ஏங்கிட்ட ஒரு வார்த்த பேசுனது இல்லியே!.
சப் செய் (SUP SEI)
உள்ளே, பதற்றமும், பரபரப்புமாக ஒரே களேபரமாய் இருந்தது. நான், அதையெல்லாம் ஒன்றும் சட்டையே செய்யவில்லை!. எனக்கு இதெல்லாம் சலித்துப்போனக் காட்சி!.. ஒவ்வொரு தடவையும் நான், எனது வேலையைச் செய்யும்போது, இந்தக் கண்றவியைத்தான் பார்க்கிறேன். நோயில் படுத்து இன்னும் சாகாமல் இழுத்துக் கொண்டிருக்கும்போது, ‘இந்த சனியன் வேற இன்னும் சாகாம உயிர வாங்குது..’ என்றோ; ‘ஒத்த கால வெச்சிக்கிட்டு இது இன்னும் என்னத்த சாதிக்கறதுக்கு இப்படி இழுத்து பறிச்சிக்கிட்டு கெடக்குது?’ என்றோ கட்டிய மனைவியே வாயிற்குள் முணுமுணுத்துக்கொள்வதை உயிரைப் பறிக்கப்போன எத்தனை இடங்களில் நான் பார்த்திருப்பேன்!.
அகோரம்
ஏழாவது நாள், லீ மயக்கத்திலிருந்து மீண்ட சில மணி நேரத்திற்குப் பின்னர் மனைவியைப் பற்றிக் கேட்டபோது, டாக்டர் ஈஸ்வரின் அணி நிலைகுலைந்து போனது. தடுமாற்றத்தில் அவரின் மனைவி யாரென்றுத் தெரியாமல் திகைத்தனர். உடனே கம்ப்யூட்டரில் தேடிப் பார்த்து, ஒரே முகவரியிலிருந்து, அவரின் மனைவி யாரென்பதைக் கண்டுப் பிடித்தபோது, எமியின் மரணம் அவர்களுக்கு என்றோ மறந்து போயிருந்தது. உடனே டாக்டர், ஒரு ஃபைலைப் பார்க்கும் பாவனையில் அருகிலிருந்த தாதியிடம் ‘எமி நலமுடன் இருப்பதாக’ எழுதிக் காட்டச் சொல்லி முணுமுணுத்தார். அந்தத் தாதி, ஒரு வெள்ளைத்தாளில்,‘Dia sihat. Dah balik rumah..’ (அவர் நலமாக இருக்கிறார். வீட்டிற்கு போய்விட்டார்) என்று மலாய் மொழியில் எழுதிக் காட்டினாள்.
இலவசமாய் ஒரு வேலைக்காரி
ராதாபாய், கல்யாணமாகி இரண்டு வருடங்களாகியும் கருத்தரிக்காதபோது, ‘எங்கே மலடியாக இருப்பாளோ?’ என்று கதி கலங்கிப் போனாள். ஜாதகத்தில் வேறு புத்திர பாக்கியம் மத்திமம் என்று இருந்தது இப்போது அச்சத்தைக் கொடுக்க ஆரம்பித்திருந்தது. முதல் வருஷத்திலேயே பிரதி வெள்ளியும் அம்பாளுக்கு நெய்விளக்கு ஏற்றி வணங்க ஆரம்பித்தாள்.
நண்பன்
அந்த எஸ்டேட் ஒரு பட்டிக்காடு! (1)‘கருப்புப் பிரதேச’ காலத்தைத் தாண்டாத (2)மேக்கட லயங்கள்.‘ துரை பங்களா, கிராணிமார்கள் பங்களா, ஆபீஸ், ‘மருந்து காம்பரா’, பால் ஸ்டோர் என்று தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்ட மின்சார நாகரிகம்!. ஒவ்வொரு இரவும் இருட்டை விரட்ட முடியாமல் குளிரைப் போர்த்திக்கொண்டு நடுங்கும் மண்ணெண்ணை “நண்பன்”
