மனித இனக்குழு தன் தாய்நிலத்திலிருந்து புலம் பெயர்ந்து மற்றொரு புதிய நிலப் பகுதியில் குடியேறிய பிறகு, அப்பகுதியில் நிலவும் இயற்கைச் சூழலுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொண்டு வாழத் தொடங்குவர். சுற்றுச்சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொண்டு வாழ்வது அடிப்படை பரிணாமவியல் கொள்கை. இதுவே மக்களின் தோற்றம், நிறம், உடலமைப்பு ஆகியவற்றில் காணப்படும் மாறுபாடுகளுக்குக் காரணம். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் தோலின் நிறம் மாறுபடக் காரணம் அவர்கள் வாழும் பகுதியின் புற ஊதாக் கதிர்களின் அளவின் தாக்கத்தை எதிர்கொள்ள அவர்களின் தோலின் நிறமிகளில் ஏற்படும் மாறுபாடு என்ற ஒரு தகவமைப்பு என்பது நினா ஜப்லோன்ஸ்கி தரும் விளக்கம்
Tag: பரிணாமவியல்
ஏனோ ராதா, இந்தப் பொறாமை?
கல்வியாலும், கலாசாரத்தினாலும் பொறாமையின் ஒரு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பண்பாடு, ஒன்றுமில்லாததிலிருந்தா பொறாமையைக் கொண்டு வந்திருக்கும்?நம் மனம் பதப்பட்டு, நம் கலவி இணையர் மற்றொருவருடன் கொள்ளும் உறவில் துன்பம் கொள்ளாமல், மகிழ்ச்சி அடைபவராக நாம் இருக்கிறோமா?அப்படிப்பட்ட பண்பாடுகள் இருக்கின்றனவா? உலகெங்கும் எல்லாப் பண்பாடுகளிலும் இணை வேறொருவரோடு கலவி செய்வது குறைந்த பட்சம் மனத் துன்பத்தைக் கொணராது இல்லை என்பது, இது பண்பாடுகளைத் தாண்டிய இயற்கை நியதி என்று காட்டவில்லையா?
சிறிய, சிறப்பான அம்சங்கள்
டார்வின் தன் புத்தகத்தைப் பிரசுரிப்பதில் இருபது வருடங்கள் தாமதம் காட்டி இருந்ததற்குக் காரணம், தன் மனைவி எம்மாவுக்கு மனத் துன்பம் கொடுப்பது பற்றிய அச்சம்தான். மரபுவழி ஆங்கிலிகன் கிருஸ்தவரான எம்மா, இறுதித் தீர்ப்பை நம்பினார், மரித்தவர்கள் மீண்டும் உயிர் பெறுவர் என்பதையும், வேறு உலக வாழ்வு கிட்டப் போகிறது என்பதையும் முழுதும் நம்பினார்.
