மனித இனப் பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சியும்

மனித இனக்குழு தன் தாய்நிலத்திலிருந்து புலம் பெயர்ந்து மற்றொரு புதிய நிலப் பகுதியில் குடியேறிய பிறகு, அப்பகுதியில் நிலவும் இயற்கைச் சூழலுக்கு ஏற்பத் தங்களைத்  தகவமைத்துக் கொண்டு வாழத் தொடங்குவர். சுற்றுச்சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொண்டு வாழ்வது அடிப்படை பரிணாமவியல் கொள்கை. இதுவே மக்களின் தோற்றம், நிறம், உடலமைப்பு ஆகியவற்றில் காணப்படும் மாறுபாடுகளுக்குக் காரணம்.  உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் தோலின் நிறம் மாறுபடக் காரணம் அவர்கள் வாழும் பகுதியின் புற ஊதாக் கதிர்களின் அளவின் தாக்கத்தை எதிர்கொள்ள அவர்களின் தோலின் நிறமிகளில் ஏற்படும் மாறுபாடு என்ற ஒரு தகவமைப்பு என்பது நினா ஜப்லோன்ஸ்கி தரும் விளக்கம்