ஈழத்தின் தமிழ்த்திரைப்படங்கள் வர்த்தக ரீதியில் வெற்றி சார்பான பார்வை

தாண்டி ஒரு படைப்பை தயாரித்து வெளியிட்டால் அதற்காக செலவிடப்பட்ட முதலீட்டில் குறிப்பிட்ட தொகையை த்தானும் பெறமுடியாத இக்கட்டான தோல்வி நிலையை பல படைப்புகள் சந்தித்து விடுகின்றன. இவ்வாறான தோல்விகள் படைப்பாளர்களை மீளவும் தலை தூக்கமுடியாத நிலைக்கும் கொண்டு சேர்த்துவிடுகின்றன். அப்படியான நிலைமையிருந்தும் பலர் துணிவுடன் அடுத்தடுத்த படைப்புகளை உருவாக்கும் முயற்சியில் துணிகரமாக ஈடுபடுவதை நாம் எம் கண்முன்னே காணக்கூடியதாக இருக்கின்றது.

நாடக அரங்கக்கலையில் நவீனத்துவத்தை உட்புகுத்திய நாடகர்

இவருடைய அரங்க கலைப்படைப்புகள் சில மக்களின் உளவியல் ரீதியிலான பாதிப்புகளை சரியான முறையில் அடையாளம் கண்டு அந்தப்பாதிப்புகளை தத்ரூபமாக வெளிக்கொணர்வதாய் அமைந்தன. மிக முக்கியமாக போர்ச்சூழலால் ஏற்பட்ட பாதிப்புகளின் மூலம் உருவாகியிருக்கக் கூடிய உள ரீதியான பாதிப்புகள் மிகத் தெளிவாக உணரப்பட்டு சில நாடகங்களின் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன

கவியோகி ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலி மொழிபெயர்ப்புக்கள்

இவர் வங்க தேசத்தின் விடுதலைப் போராட்டச் செயற்பாடுகளில் ஆரம்பத்தில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாலும் பின்னர் அதிலிருந்து தன்னை முற்றாக விடுவித்து ஆன்மீகம் மற்றும் மெய்யியல் சார் விடயங்களுக்குள் அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டார். இந்தியா மற்றும் வங்கம் ஆகிய இரு நாடுகளினதும் தேசிய கீதங்களைப் படைத்தை பெருமையும் இவரையே சாரும்.