கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே

இந்த அரைத்தூக்க நிலை அல்லது தூக்க மயக்கம் பல சுவையான விவாதங்களுக்கும் இட்டுச் சென்றிருக்கிறது; புதிர் நிறைந்த ஒன்று இது, சட்டமும், தத்துவமும் இதை எப்படிப் பார்க்கின்றன? தூக்கத்தில் நடப்பவர்களுக்கு, பகல் நேர ‘தான்’ என்பது  விடுபட்டு இரவு நேர ‘தான்’ என்று சுயேச்சையாக மாறுகிறதோ? ஆயினும் பகல் நேர ‘தான்’ முழுவதும் விடுபட்டுப் போய்விடுவதில்லை அல்லவா? தூக்க நடையாளரைப் பற்றி கலைக்களஞ்சியங்கள் பதிவு செய்துள்ளன. அதில் குறிப்பிடத்தகுந்த ஒன்று திருச்சபையின் இளைய குருவைப் பற்றியது. அவர் தன் இசையையும், பிரசங்கங்களையும் உறக்கத்தில் இருக்கும்போதே உண்டாக்கியுள்ளார்.

உறங்காமை

தூக்கமின்மை உள்ளவர்கள் நன்றாகத் தூங்குபவர்களுடன் சரியாக இணைகிறார்கள், ஆனால் அந்த நல்ல தூக்கம் உள்ளவர்கள் கூட அவர்கள் தூங்க வேண்டிய அளவுக்குத் தூங்குவதில்லை. மனிதர்கள் “இருநிலை” (biphasic) தூக்கத்திற்காகவே படைக்கப்பட்டுள்ளனர் என்று வாக்கர் கூறுகிறார் – அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு தூக்க அமர்வுகள் தேவையாம். நவீனமயமாக்கப்பட்ட சமூகங்களில் உள்ளவர்களை விட  நீண்ட காலம் தூங்கும் பாரம்பரிய சமூகங்களில் உள்ளவர்கள்,  சிறிது நேரம் உயிர் காக்கும் தூக்கத்தை, அதாவது இரு வேளை தூக்கத்தை மேற்கொள்கிறார்கள்.