நம்பிக்கை

அந்த அறையில் தான் பஜனை நடக்கும். கூட்டுப் பிரார்த்தனை நடக்கும். நிறைய அற்புதங்கள் நடந்திருப்பதாக அக்கம் பக்கத்தில் பேசுவார்கள். படங்களில் அவ்வப்போது மஞ்சள்நிறப் பொடி கசிவதும்  உண்டு. கணேசன் பார்த்தது இல்லை. ஆனால் நம்புவான். அவனுக்கு சிறுவயதில் இருந்தே மகான்களிடத்தில் நம்பிக்கையும் ப்ரேமையும் உண்டு.

ஒலிமுகவாசல்

அந்தச் சிறு அவகாசத்திற்குள் அவன் அந்தப் பெண்ணைக் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றி இருந்தான். அவர்கள் கடற்கொள்ளைக்காரர்களா, தரையில் கொள்ளையடிப்பவர்களா என்பதில் அவனுக்கு ஒரு குழப்பம் இருந்தது. கொள்ளைக்காரர்களை விரட்டி விட்டு, அவளது சிவிகையை ஒற்றைத் தோளில் சுமந்து அரசரிடம் ஒப்படைத்து இருந்தான்.

தெப்பம்

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு தினுசில் கொலு வைக்கப்படும். சில பொம்மைகள் எல்லா வீடுகளிலும் இடம்பெறும் என்றாலும், ஏதோவொரு விதத்தில் அவைகள் வேறுபடும். மாக்கல், மரச்சொப்பு, பீங்கான், ரோஸ்வுட் என்று விதம்விதமான சொப்புகள் கணேசன் வீட்டில் இடம்பெறும். ராகவையங்கார் வீட்டின் பெரியகூடம் அவர்களது பொம்மைகளுக்குக் காணாது என்றால் லலிதாம்பா மாமி வீட்டின் கொலு சிறியதாக இருந்தாலும், காரமான சுண்டல் பெருங்கூட்டத்தை ஈர்க்கும்

நாய்கள் ஜாக்கிரதை

“ஏங்க? ரூல்ஸை நான் என்ன உள்ளங்கைலயா பச்சை குத்தி வச்சிருக்கேன், காட்டறதுக்கு? ஏத்தக் கூடாதுன்னா ஏத்தக் கூடாதுதாங்க.. அடுத்த ஸ்டேஷன்ல எறங்கி ஒழுங்கா லக்கேஜ் புக் பண்ணி லக்கேஜ் வேன்ல ஏத்துங்க… இல்லேன்னா பாசஞ்சர் சேஃப்டிக்குக் குந்தகம் வெளவிச்சீங்கன்னு அடுத்த ஸ்டேஷன்ல நாயோட சேத்து எறக்கி விட்ருவோம், தெரிஞ்சுக்குங்க”

கடாரம் கொண்டான்

பாட்டி என்றால் நார்மடிப் பாட்டி இல்லை. நாகரீகப் பாட்டி. சுருக்கங்கள் இல்லாத ரவிக்கை அணிந்து இருக்கிறாள். காதில் வைரத்தோடு துலங்க கம்பீரமாக, தாத்தா போன இந்த பத்து வருடங்களில் ஓரிரண்டு சுற்றுகள் பெருத்தும் நிறத்தும் இருக்கிறாள்.”ஏன் பாட்டி.. நீ நல்லவளாத் தான இருந்தே? ராமாயணம் வியாசர் விருந்துன்னு படி படின்னு படிச்சுண்டு இருந்தே.. இந்த கூட்டத்தோட சேர்ந்து இப்படிக் கெட்டுப் போயிட்டியே..”

ஒரு முடிவிலாக் குறிப்பு

நல்ல நிறுவனத்தில், நல்ல பதவி, நல்ல சம்பளத்தோடு வேறு வேலை உடனே கிடைத்தது. என் திறமையின் காரணமாக எனக்கு கிடைத்த வேலை என்பதான என் நம்பிக்கையை – “பெருந்தொற்றுக் காலத்தில் வேலை கிடைப்பதே கடினம் ; நீ அதிர்ஷ்டக் காரன்” என்று கூறி – லேசாகக் கீறினார்கள் சில நண்பர்கள். வாயு வெளியேறியது. பெருந்தொற்றுக் காலத்தில் நிறுவனங்களின் மோசமான நிதி நிலைமை காரணத்தால் வேலையை இழந்த சில நண்பர்கள் வாயிலிருந்தும் வேறு சில துவாரங்களிலிருந்தும் உஷ்ணப்புகை.