கார்கன்சுவா குறித்த சித்தரிப்பானது, சுழலும் கருந்துளைகளைப் பற்றிய பொதுச் சார்பியல் கோட்பாட்டின் தீர்வுகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது. சுழற்சியற்ற கருந்துளைகளைக் காட்டிலும், மெய்யான வானியல் கருந்துளைகள் கோண உந்தம் கொண்டவையாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்தச் சுழற்சியானது அவற்றின் கட்டமைப்பை அடிப்படையிலேயே மாற்றியமைக்கிறது. இங்கே கருந்துளையின் சுழற்சியால் கால-வெளியே நூல் இழை போல முறுக்கப்படுகிறது
Tag: ஐன்ஸ்டீன்
ஈர்ப்பு அலைகள் – பகுதி 2
1915 –ல் ஐன்ஸ்டீன் தன்னுடைய பொது ஒப்புமைக் கொள்கையுடன், ஈர்ப்பு சக்தி பற்றிய சமன்பாடுகளையும் முன் வைத்தார். அவருடைய நண்பர், Karl Schwarzchild அந்த சமன்பாடுகளை தீர்க்க முயற்சித்தார். இவருடைய தீர்வில், ஒரு ஆரத்திற்குள் ஈர்ப்பு சக்தி முடிவிலியாக மாறியது – இதை Schwarzchild radius என்று அழைக்கப்படுகிறது. ஒரு வானியல் பொருள் இந்த ஆரத்திற்குள் சுறுக்கப்பட்டால், அதிலிருந்து ஒளி கூட வெளிவராது. இதை முதலில் ஒரு கணக்கியல் தவறு என்று முடிவு கட்டினார்கள்.
ஐன்ஸ்டீனின் அற்புத ஆண்டு
இன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் வழிகாட்டி(GPS), நுண்ணலை அடுப்பு (Microwave Oven) முதல், உலகையே அழிக்க வல்லமை படைத்த அணு ஆயுதம்(Atomic Bomb) வரை உருவான அனைத்தும் அந்த மூளையில் தோன்றிய சிந்தனையே காரணம். குறிப்பாக இன்றைய மருத்துவ துறையில் புற்றுநோயின் வீச்சை தடுக்க உதவும் கதிர்வீக்க சிகிச்சை, சிந்தனையின் அதிமுக்கிய பயன்பாடுகளில் ஒன்றாகும்.
