கனடா! கனடா!

“எந்த கங்கையில் இந்தக் கைகளைக் கழுவுவது?” என்ற கவிதை நூலுக்காக இளவாலை விஜயேந்திரன் பரிசு பெற்றார். இலங்கையின் மலையக நகரான நுவுரேலியாவில் பிறந்தவருக்கும் கங்கை என்ற நதியின் குறியீட்டுப் பாதிப்பு இருப்பதைக் கண்டு வியந்தேன். புனித நதிகள் என்ற கோட்பாடு இந்தியாவுக்கு மட்டும்தானா? பிற ஆசிய நாடுகளுக்குக் கூட இல்லையா? இவரும் தன் உரையாற்றும்போது மிகுந்த மனவெழுச்சியுடன் காணப்பட்டார். 

பட்டாவளி

இப்போதும் ஒன்றும் தாமதமாகவில்லை. கைவசம் அவர்களைத் தொகுத்துக் கொண்டால், இந்த இதழில் எவரெவரைத் தவற விட்டோமோ, அவர்களை வரும் வெளியீடுகளில் கவனிக்கலாம். வரும் வாரங்களில் வாசிக்க எடுத்து வைக்கலாம். குறைந்த பட்சம் மற்றவர்களையாவது படிக்குமாறு தூண்டலாம்.இதுதான் இந்த பட்டியல் பதிவின் குறிக்கோள்

விருதேற்பு உரை

எழுத்தில் எது உண்மை எது போலி என்று பாகுபடுத்துவது எளிதான காரியம் இல்லை. மேலும், உண்மை என்றால் என்ன என்ற கேள்வி எழுகிறது. எதற்கு உண்மையாக இருப்பது எழுத்து? எண்ணங்களுக்கா, வாழ்க்கைக்கா, சுற்றியுள்ள யதார்த்தத்துக்கா, எதற்கு? எழுத்து என்பது இதற்கு எல்லாம் உண்மையாக இருப்பதுதானா? என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் உள்ள ”உண்மைகளை”ப் பற்றியது அல்ல இலக்கியம். உண்மை என்று நாம் உணர்வதற்கும் நமக்கும் இடையே உள்ள உறவு பற்றியது இலக்கியம். இந்த “உண்மை”யின் தன்மை மாறியபடி இருக்கிறது நம் வாழ்வில் என்பதுதான் உண்மை. வாழ்க்கையின் போக்குக்கு ஏற்ப இதை நாம் பல்வேறு கட்டங்களில் பல வகைகளில் உணருகிறோம். அதை நாம் எப்படி மொழியாக்குகிறோம் என்பதுதான் இலக்கியம். நம் உணர்வுகளின் வெளிப்படை சில சமயங்களிலும், அவற்றின் மறைப்பு சில சமயங்களிலும், உணர்வுகளை இலக்கியமாக்குகிறது.