ஏனோ ராதா, இந்தப் பொறாமை?

கல்வியாலும், கலாசாரத்தினாலும் பொறாமையின் ஒரு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், பண்பாடு, ஒன்றுமில்லாததிலிருந்தா பொறாமையைக் கொண்டு வந்திருக்கும்?நம் மனம் பதப்பட்டு, நம் கலவி இணையர் மற்றொருவருடன் கொள்ளும் உறவில் துன்பம் கொள்ளாமல், மகிழ்ச்சி அடைபவராக நாம் இருக்கிறோமா?அப்படிப்பட்ட பண்பாடுகள் இருக்கின்றனவா? உலகெங்கும் எல்லாப் பண்பாடுகளிலும் இணை வேறொருவரோடு கலவி செய்வது குறைந்த பட்சம் மனத் துன்பத்தைக் கொணராது இல்லை என்பது, இது பண்பாடுகளைத் தாண்டிய இயற்கை நியதி என்று காட்டவில்லையா?

இசைபட வாழ்வோம்- 2

This entry is part 2 of 2 in the series இசைபட வாழ்வோம்

“அதாவது நான் முன்னமே சொன்னது போல, உன்னுடைய உடல் ரீதியான எம்.எஸ்.வி ரசாயன மாற்றங்களை சற்று மாற்றினால், செலின் டியானின் இசையை ரசித்து மெய் சிலிர்க்க வைக்க முடியும். அதே போல, கணேஷை டெய்லர் ஸ்விஃப்டின் இசையில் மெய் மறக்கச் செய்ய முடியும்.”

புத்துருவாக்கமும் பிறழ் மைய நடத்தைகளும்!

மனச் சிதைவுக்கு ஆளான தாய்மார்களது குழந்தைகளிடம் ஸ்கிட்ஸோடைப்பல் இயல்பும் காணப்பட்டது அதே சமையம் மற்றவர்களைவிடவும் மிக உயர்ந்த கற்பனை வளமும், படைப்பாக்க சிந்தனையும் இணைந்திருந்தது.
இது போன்ற கற்பனை வளமும், படைப்பாக்கத் திறனும் கொண்டவர்களிடையே எதிர்காலத்தைப் புலப்படுத்தும் கனவுகள், ரெலிபதி, கடந்த காலம் பற்றிய உணர்வு என்பன குறித்த நம்பிக்கைகள் ஆழமாக இருப்பதையும் ஆய்வுகள் புலப்படுத்தின.
இது போன்ற விபரீத எண்ணப்போக்கினுக்கும், புத்துருவாக்கத் திறனுக்கும் இடையே காணப்படும் தொடர்பு, பல ஆய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

மனதை விட்டு அகல மறுக்கும் தாய் மொழி

ஒலியின் விதத்தை அடிப்படையாகக் கொண்ட மாண்டரின் போன்ற மொழிகளைப் பேசுபவர்களுக்கு மூளையின் இடதுபுறம் அதிகமாக வேலை செய்யுமாம். ஒலி வேறுபாட்டில்லாத ஆங்கிலம் போன்ற மொழிகளைப் பேசுபவர்களுக்கு வலது மூளை அதிகமாக வேலை செய்கிறதாம், ஏனெனில் இத்தகைய மொழிகளில் வார்த்தைகளின் வேறுபாடு உச்சரிப்பைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுவதில்லை.

மகரந்தம்

 அகிலம் ஒரு பெட்டிக்குள் இல்லை பெட்டகத்தைத் தாண்டிச் சிந்தித்திருக்கிறார் ஜூலியன் பார்பர்.அவருடன் நடந்த உரையாடலை மேற்குறிப்பிட்ட சுட்டியில் விரிவாகப் பார்க்கலாம். காலம் முன்னோக்கித்தான் நகர்கிறது. குழந்தைகள்தான் பெரியவர்களாக ஆகிறார்கள். காலமும், இயக்கமும் மனித சிந்தனையில் இரசிக்கத்தக்க இடத்தைப் பிடித்துள்ளன. அறிவியல் சட்டங்களின் படி ஒரு நிகழ்வு காலத்தில் திரும்பிப்பார்க்கப்படுகையிலும் “மகரந்தம்”

பருவநிலை மாற்றத்தின் கலங்க வைக்கும் உண்மை

இதுவரை நிகழ்ந்துள்ள உமிழ்வுகள் மட்டுமே உலகளாவிய தட்பவெப்பத்தை தொழில்மயமாவதற்கு முற்பட்ட நிலையோடு ஒப்பிட 1.5°C டிகிரி மேல் உயர்த்த வாய்ப்பில்லை. மனிதனால் ஏற்படும் புவிவெப்ப வாயுக்களின் உமிழ்வு உடனடியாக சூன்யத்தைத் தொட்டால், இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள 1°C என்ற அளவுக்கு மேல் தொடர்ந்து வெப்பமடைவதுஎன்பது அடுத்த 20 முதல் 30 ஆண்டுகளில் 0.5°C என்ற அளவே உயரக்கூடும் என்று ஐபிசிசி அறிக்கை கூறுகிறது. அதாவது, நாம் உடனே செயல்பட்டால், நிலைமையைச் சரி செய்யும் தொழில்நுட்பச் சாத்தியம் உண்டு. இதைச் சாதிக்கும் வகையில் வலுவான உலகளாவிய கொள்கைத் திட்டம் எதுவும் இல்லை என்பதே குறை.