சண்முகநாதன், “டேட்டிங் செய்ததுக்கு அப்புறம், கண்டிப்பாக இது ஒரு அற்புத கண்டுபிடிப்பா இருக்கும்” என்றார். அவை வளர்ந்த ஓர் ஆணுடைய எலும்புகள். அந்த எலும்புக் குவியலில் இருந்து, ஒவ்வொரு எலும்பாக கவனமாக எடுத்து நானும் நாதனும் பிரஷ்கொண்டு மெல்ல வருடி, உடற்பாகத்திற்கு ஏற்றவாறு மேசையின் மீது வைத்துக்கொண்டிருந்தோம்.
Author: விஜய் ரெங்கராஜன்
மெய்கண்டவன்
மந்திரித்துவிட்டதுபோல் தன் புலன்களுக்கு ஆளாகி சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டது தவறோ என்று நினைத்தான். அவ்வாறு நினைத்துக்கொண்டிருக்கும்பொழுதே, உடல் மெதுவாக எழுந்து உடை மாற்றிக்கொண்டது. டியோ இரண்டு அழுத்தும், தலையை சரியாக அமைத்துக்கொண்டும், பாக்கெட்டில் வாலட்டும் திறன்பேசியும் இருக்கிறதா என்று பார்த்துவிட்டும், அறையின் மின்விசிறியை அணைக்காமல் மெதுவாக கதவைத் திறந்துகொண்டு மண்டபத்தைவிட்டு வெளியேறி இருபது நிமிடத்தில் சொன்ன இடத்தில் இருந்தான்.
வெறியாட்டு
இந்த ஆட்டால்தான் என்ன செய்ய இயலும். ஒருவேளை மற்ற ஆடுகளைப் போன்று வீதிவீதியாக ஓடியிருக்கலாமோ. மற்ற ஆடுகளைப்போன்றே சுவரில் தன் முதுகைத் தேய்த்துக்கொண்டிருக்கலாமோ. மற்ற ஆடுகளைப்போன்றே சினிமா போஸ்டர்களைப் புல்லுக்குப் பதிலாக தின்றுக்கொண்டிருக்கலாமோ. இந்த ஆடுதான் இயற்கைக்கு எதிராக என்னசெய்தது. இவர்கள் கையில் இதை யார் கொடுத்தது.
குறியீடு
“இரண்டு எலும்பு வகைகள் இருக்கின்றன” லிடியா. “ஒன்று மனிதன். பதின்ம வயது பையனாக இருக்கலாம் என்று கணிக்கிறேன். மற்றது குதிரை.” மித்ரன் குழியில் பார்த்தார். மனித உருவம் பக்கவாட்டில் முட்டி மடக்கி ஆங்கில “என்” போல் இருந்தது. பக்கத்தில் பெரிய உருவமாக இன்னொரு எலும்பு தொகுப்பு.
