ஸிந்துஜா – முப்பது வருடங்களுக்குப் பிறகு

ஸிந்துஜாவை இந்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தியாக வேண்டும் என்று நினைக்கிறேன். போன நூற்றாண்டின் எழுபதுகளின் முற்பாதியில் பத்திரிக்கைப் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். குறிப்பாக இலக்கியச் சிறுபத்திரிக்கைளின் பரிச்சயம் கொண்டிருந்தவர்களுக்கு, “டாகூர் சுடலைமாடன் தெருவுக்கு வருகிறார்” என்றோ, இல்லை ”சுடலை மாடன் தெருவில் டாகூர்” என்றோ திருநெல்வேலி சுடலைமாடன் தெருவில் வசிக்கும் கலாப்ரியா தாகூர் கவிதைகள் சிலவற்றைத் தழுவி தன் பெயரில் வெளியிட்டதைக் குறிப்பிட்டு எழுதிய கட்டுரை ஸிந்துஜாவின் ஆளுமையைப் பற்றியும் சொன்னது. பெரும் பரபரப்பைக் கிளப்பிய எழுத்து அது.

பிரயாண இலக்கியம் – தி ஜானகிராமனும் மற்றோரும் – இரண்டு புத்தகங்கள்

தான் முன்னரே தீர்மானித்துக்கொண்ட தமிழ் இனத்தின், சரித்திரத்தின், கலாச்சாரத்தின் உன்னதங்களைத் திரும்பச் சொல்லும் சந்தர்ப்பங்களை அடுக்கிச் சொல்வதும் அல்ல. ஒரு சிந்திக்கும் மனது தன் பார்வையில் பட்டதையெல்லாம் பற்றி தீவிரமாக சிந்திக்கிறது. வெளித்தோற்றத்தில் முரண்பட்ட மேற்கத்திய கலாச்சார அம்சங்களும் கீழைத் தேய கலாச்சார பண்புகளும் உடன் வாழ்வதன் அடியில் என்ன தான் இருக்கிறது இந்த அந்நிய மண்ணின் சமூக, கலாச்சார சூழலில். என்று ஒரு சிந்தனை அடிக்கடி தோன்றுகிறது. இந்தப் பயண வரலாறு முழுதுமே தி. ஜானகிராமனின் மனதில் நிகழும் ஒரு மௌன சம்பாஷணை.

தி ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’

தி. ஜானகிராமனின் பலமே சம்பாஷணைகளாலேயே கதை சொல்லும் அவர் சிறப்புத் தான். அவரது எல்லா எழுத்துக்களிலும் போல இந்த நாவலிலும் அவர் சம்பாஷணைகளில்தான் அவர் உலகமே விரிகிறது. இன்றைய எந்த தமிழ் எழுத்திலும் இதற்கு இணையான ஒரு சிருஷ்டிகரத்தை காணமுடியாது. கதை சொல்லல் வெகு சரளமாக, எளிமையாக, அதே சமயம் கொள்ளை அழகுடன் ஆற்றின் புது வெள்ளம் போலச் ஓடுவது அறியாது செல்கிறது. ஒரு குதூகலத்தின் துள்ளல், ஆரவாரம். எப்படிச் சொன்னாலும் அது அப்படியாகத் தான் தோன்றும்.

தி.ஜானகிராமனுடன் ஓர் உரையாடல்

காவிரின்னா சங்கீதம்னு சொல்றபடி இருக்கு. இது நமக்கு பிதுரார்ஜிதம், நீங்க எழுத ஆரம்பிச்சபோதும் சரி… இப்போதும் சரி… சுற்றியிருக்கிற எழுத்தாளர்கள் இந்தக் காவிரிக் கரையிலிருந்து வந்தவர்கள் தான். உங்க எழுத்தில வர்ற சங்கீதம் ஒரு சூழலா ஒவ்வொருத்தவர் உள்ளேயும் ஒரு ஆத்மிக உத்வேகமா வந்திருக்கு. பிரமாதமான விஷயம் அது… நான் பார்த்து ரொம்பவும் சந்தோஷப்பட்டது… வியப்படைந்தது. பிரமாதமான விஷயம்.

தி ஜானகிராமன் – ஓர் அஞ்சலி

சரியாக இனம் கண்டுகொள்ளப்பட்டிருந்தால் தமிழ் இலக்கியச் சூழலில் தீர்க்கமான கலையுணர்வு இருந்திருக்குமானால் மோகமுள் எழுதிய கைகளுக்கு முதல் ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில், இன்றைய தமிழ்நாட்டில் அது அமிழ்ந்திருக்கும் ரக அறிவார்த்த கலைச்சூழலில் எந்த ஒரு கலைஞனும் அறிவாளியும் சிலுவை சுமக்கப் பிறந்தவன்தான். தி.ஜானகிராமன் அதிர்ஷ்டவசமாக, அல்லது அவருக்கிருந்த அவர் எழுத்துக்கிருந்த இனிமை, கவர்ச்சி காரணமாக அவருக்கிருந்த அடங்கிப்போகும் சுபாவம் காரணமாக சிலுவை சுமக்க நேர்ந்ததில்லை.

ஓர் அஞ்சலி – மறைந்த விஜயபாஸ்கரனுக்கு

விஜய பாஸ்கரன் முற்போக்கு குழாத்தில் அடையாளம் காணப்படுபவர். சரஸ்வதி பத்திரிகையில் அதிகம் எழுதுபவர்கள் முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். பத்திரிகையும் ஜனசக்தி அச்சகத்தில் அச்சிடப்படுகிறது. தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியினராலும் மற்ற முற்போக்கு எழுத்தாளர்களாலும் மிகவும் மதிக்கப்படுபவர் தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் லிட்டரரி கமிஸாராக அதிகாரம் வகித்து வந்த, கொஞ்சம் மென்மையாகவும், நம் மரபு ஒழுகியும் சொல்வதென்றால் தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களுக்கு கொள்கை வழிகாட்டும் குரு எனச் சொல்லத்தக்க அந்த சிதம்பர ரகுநாதனை எழுத்து பத்திரிகையில் சமீபத்தில்தான் நான் மிகவும் கடுமையாகவும் கிண்டலாகவும் எதிர்த்து எழுதியிருந்தேன். அந்த சாமிநாதனையாக்கும் விஜய பாஸ்கரன் சரஸ்வதியில் எழுதச் சொல்கிறார். இது தகுமா ஒரு முற்போக்கு பத்திரிகையாளருக்கு?

மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்

ஊட்டியில் வசிக்கும் மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர் நிர்மால்யா மொழிபெயர்த்த உமர் என்ற நாவல் இந்த வருடத்திய சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்புக்கான விருதைப் பெற்றுள்ளது. நிர்மால்யா அவர்களுக்கும், புத்தகத்தை வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்துக்கும் சொல்வனத்தின் வாழ்த்துகள். இச்சமயத்தில் நிர்மால்யா மொழிபெயர்த்த வேறொரு புத்தகத்தின் விமர்சனத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துகள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல

நாஞ்சில்நாடன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். நாஞ்சில்நாடு என்னும் அந்த ஒரு சின்ன இடத்தைத்தான் எழுதுகிறார். அந்த மண்ணைச் சேர்ந்தவர்களைத்தான் திரும்பத் திரும்ப எங்கு சென்றாலும் பார்க்கிறார். ஆனால், அவர் இன்றைய தமிழ்நாட்டின் சீர்கேட்டையே அந்தச் சின்ன சித்திரத்தில் பார்க்கச் செய்துவிடுகிறார். இது யாருக்கு உவப்பாக இருக்கும்? சாகித்ய அகாடமிக்காரர்களுக்கு இது எப்படி உவப்பாகிப்போனது? அதன் ஆகி வந்த மரபும் பண்பும் என்ன ஆனது? புதிர்தான். விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், பாரதிதாசனின் கவிதைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு பிசிராந்தையார் என்னும் அவர் நாடகத்துக்கா தமிழ் மேதைகள் உலகம் பரிசு தந்திருக்கும்? பாரதிதாசன் அந்த சமயம் உயிரோடிருப்பாராயின் என்ன வார்த்தைகளால் அவர் அகாடமிக்காரர்களை அர்ச்சித்திருப்பார் என்று நினைத்துப்பார்த்தால், பயங்கரமாக இருக்கும். அந்த வார்த்தைகள் கவிதையாக இருந்திராது என்பது நிச்சயம்.

சிங்கப்பூர் வாழ்க்கை – சில காட்சிகள்

ஜெயந்தி சங்கரின் கதைகளில் சிங்கப்பூரின் மாறி வரும் சமூக மதிப்புகளையும், வாழ்க்கையின் சலனங்களையும் பார்க்கிறோம். பல சிங்கப்பூரில் வாழ்வதால் தமிழர் எதிர்கொள்ள வேண்டி வருபவை. பல் தமிழகத்திலும் நடக்கக்கூடும் என்றாலும், அவற்றின் ரூபமும் தீவிரமும் சிங்கப்பூரின் சமூக மாற்றத்தால் விளைபவை.

பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீரங்கம் வி. மோஹனரங்கன்

நாற்பது வருடங்களுக்கும் மேலாக கவிஞர்களாக உலா வருகிறவர்கள், விருதும் பாராட்டு விழாக்களுமாகத்தான் உலா வருகின்றனர். கவிதை எனச் சொல்லத் தக்க எதுவும் எழுதியறியாதே. அவை கவிதை இல்லை என்று நான் தர்க்கித்து நிறுவ முடியாது. தர்க்கித்தல் விதிகள் சார்ந்தது.

தொடரும் பயணம்

அத்தொடக்க காலத்தில், இலக்கிய பூர்வமாக எனக்கு மிக அருகில் இருந்தவர்கள் க.நா.சுப்ரமண்யமும், செல்லப்பாவும் தான். இருவரும் தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய திருப்பத்தை, இல்லை பெரும் மாற்றத்தைக் கொணர்ந்தவர்கள். இந்த இருவரும் சேர்ந்து அமைத்த பாதையில் தான் நான் என் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறேன். இந்த இருவரிடமும் நான் கொண்ட கருத்தொற்றுமையும் நிறைய. கருத்து வேறு பாடுகளும் நிறைய.

வார்த்தைப் பாடாகிவிட்ட தமிழ் வாழ்க்கை

வார்த்தைகள் நம் தமிழ் வாழ்க்கையில் அர்த்தமிழந்து போயின. அவை எதையும் சொல்லாத வெற்று ஒலிகள். ஆனால் சொல்லிவிட்டதாக ஆணைகள் பிறக்கின்றன. ஒரு பயங்கர ஆக்கிரமிப்பு சக்தியாகிவிட்டன வார்த்தைகள். ஆணைகள் இன்றியே ஆணையாக உணரும் மந்தைத் தனம் தமிழருக்குப் பழகிவிட்டது. வார்த்தைகளால் நம் அலைக்கழிக்கப்படுவதைச் சொல்லும் அகஸ்டஸின் கவிதை மிக நீண்டது. அவரது கவிதை மொழி அவருக்கே உரியது.

மார்க்ஸை தலை கீழாக நிற்க வைத்த போலந்தில் ஒரு விலாங்கு மீன்

இந்திரா பார்த்தசாரதிக்குள்ளிருக்கும் மார்க்ஸ் என்ன ஆனார்? அவரும் மிக பத்திரமாக எவ்வித கஷ்டமும் இன்றி இருந்து கொண்டிருக்கிறார் தான். விலாங்கு மீன் எங்காவது யார் கையிலாவது சுலபத்தில் சிக்கி விடுமா? நழுவிக்கொண்டேயிருப்பது தானே அதன் குணம்? God That Failed எழுதிய எழுத்தாளர்களும் கலைஞர்களும் சிந்தனையாளர்களும் ஒரு காலத்தில் மார்க்ஸிஸத்தை நம்பி பின் அனுபவித்த மனவேதனைகளும் மனசாட்சி உறுத்தல்களும் நம்பிக்கைகள் கைவிட்ட ஏமாற்றமும் நாம் சர்ச்சித்துக் கொண்டிருக்கும் மார்க்ஸிஸ்டின் கிட்டக் கூட நெருங்கவில்லை.

பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்

பொட்டுக் கட்டுதல், தலித் என்று சொன்ன மாத்திரத்திலேயே அச் சொற்கள்
நம்மில் எழுப்பும் பிம்பம், பின் ஒரு செடல் அச்சமூகத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து தானே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வாள் என்னும் சாத்தியங்கள் பற்றியெல்லாம் நமக்கு முன் தீர்மானமான சித்திரங்கள் உண்டு. அதை உடைக்கிறது இமையத்தின் செடல் நாவல். அதை இமையம் குரல் எழுப்பாமல், நாடகமாக்காமல், அடங்கிய குரலில், ஆவணப் படுத்தப்பட்ட ஒரு சமூக நிகழ்வு
என்று சொல்லத்தக்க நம்பகத் தன்மை கொண்ட, ஒரு கலைஞனுக்கே சாத்தியமாகும் ஒதுங்கி நின்று சொல்லும் குரல் இது. தலித் அரசியலும் சொல்ல விரும்பாத, சொல்வதைத் தவிர்க்கும் குரல் இது.

“குலாபி டாக்கீஸ்” திரைப்படத்தை முன்வைத்து

கன்னட சமூகத்தில் ராஜ்குமாரும், இருக்கிறார்தான். அவரை தெய்வமாக்கிய கன்னட சினிமாவும் சினிமா ரசிகர்களும் உண்டுதான். அவருக்கு கன்னட அரசியல் தலைமையும் தலை வணங்குகிறார்கள்தான். ஆனால் அங்கு கிரீஷ் காஸரவல்லிக்கும் இடம் இருக்கிறது. பி.வி.காரந்துக்கும், கே.வி.சுப்பண்ணாவுக்கும் இடம் இருக்கிறது. ஆனால் இங்கு அம்மாதிரி யாருக்குமே இடம் இருப்பதில்லையே? நமக்கு ரஜினிகாந்தும், கமலஹாசனுமே, எல்லாமாக, காஸரவல்லியிம், ராஜ்குமாருமாக இருக்கிறார்களே. எத்தகைய கலாசாரத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம்? காஸரவல்லியின் குடும்பம் யக்ஷகானாவுடன் நெருங்கிய உறவு கொண்டது. கே.வி.சுப்பண்ணாவும் காஸரவல்லியின் உறவினர் தான். ஆனால் காஸரவல்லியோ, கே.வி.சுப்பண்ணாவோ, யக்ஷகானா தான் நவீன கன்னட நாடகத்திற்கும் சினிமாவுக்கும் உறபத்தி ஸ்தானம், யக்ஷகானாவை பிரதி செய்து கோமாளித்தனம் பண்ணுவது தான் எங்கள் பணி என்று கிளம்பவில்லையே? ஏன், நாம் மட்டும் இப்படி?

முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்

ராஜ மார்த்தாண்டனுக்கு பிடித்தமான உலகம், அவருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தரும் உலகம், மரங்களின், பறவைகளின், பூக்களின், குழந்தைகளின் உலகம் தான். அவரது சிறந்த கவிதைகள் இவற்றைப் பற்றியன தான். இந்த உலகில் அவர் ஆழ்ந்து விடும் போது அவரிடமிருந்து பிறக்கும் கவிதைகள் ஒரு ஜென் ஞானியின் உலகிற்கு நம்மை இட்டுச் செல்லும்.