தாவர நூல்கள்

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு மரம் நிச்சயமாக இருக்கும். சிலருக்கு ஓரிரு மரங்கள் இருக்கலாம், சிலருக்கு பல மரங்கள் இருக்கலாம்.  அந்த சிலர் எழுத்தாளர்களாக இருந்தால் அவர்கள் தமது வாழ்வில் கண்டு வியந்த, தமது வாழ்வில் ஒன்றிப்போன மரங்களைப் பற்றி எழுதாமல் இருக்கவே மாட்டார்கள். நாஞ்சில் நாடனின் ஆலமரமும், மதுமிதாவின் மனோரஞ்சிதமும் அதற்கு சில எடுத்துக்காட்டு. இவர்களைப் போல பல படைப்பாளிகளின் நினைவில் இருக்கும் மரங்களைப் பற்றி அவர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. அனைவரும் படிக்க வேண்டிய நூல்.

பாண்டிச்சேரியும் பவழ மல்லியும்

வேப்ப மரம் பூப்பதை வைத்து அது சித்திரை மாதமென்றும், அது கோடை காலமென்றும் சொல்கிறோம். அதே போல திரிபுராவில் உள்ள கிராம மக்கள் குறிப்பாக விவசாயம் செய்பவர்கள் ஒரு பருவத்தில் அதிக மழை வருமா, ஓரளவிற்கு மழை வருமா, அல்லது பருவ மழை பொய்த்துவிடுமா என்பதை பவழ மல்லி பூக்கும் விதத்தை வைத்தே சொல்லிவிடுகின்றனர். இதை உறுதி செய்ய ஆராய்ச்சியாளர்கள் 2002லிருந்து 2007 வரை 270 பழவ மல்லி மரங்களின் பூக்கும் விதத்தை அவதானித்து அதை ஆவணப்படுத்தினர்.

வன்னி மரத்தைப் பார்க்கப் பயணம்

தல மரங்கள் எனும் concept எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மரங்களை அதுவும் நம் மண்ணுக்குச் சொந்தமான மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் காரணிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை ஆமோதித்து அரவணைத்துக் கொள்வது இயற்கைப் பாதுகாவலர்களின் கடமை என்பது எனது எண்ணம்.

பூத்துக் குலுங்கும் கொன்றை, மருதம், மனோரஞ்சிதம்

சூழல் பற்றியும், இயற்கைசார்ந்த உயிரினங்கள் பற்றியும் எழுதும் நல்லாரைச் சொல்வனம் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும் ஒரு பத்திரிகை. இந்தத் தேடலில் நமக்குச் சமீபத்தில் கிட்டிய ஒரு அறிஞர் ஜெகநாதன். இவர் ஒரு வன உயிரியலாளர். இந்த இதழில் இவரது கட்டுரைகள் பூக்கள் பற்றி அமைந்திருக்கின்றன.