இசைவழி ஓடும் வாழ்க்கை

சுமார் 20 வருடங்கள் முன்னால் நண்பர் எனக்கு பீட்டர் காப்ரியேலை அறிமுகப் படுத்தி இருந்தார். குறிப்பாக இந்தப் பாட்டை, இந்த இசைத் தொகுப்பை அவர்தான் எனக்கு ஒரு ஒலிநாடாவாக வாங்கிக் கொடுத்திருந்தார். சூழலில் நிறைய தொழிலாளர்கள் என்பதால் இந்தப் பாட்டு அன்று உடலுக்குள்ளெல்லாம் பயணித்து மனதைப் பிழிந்தது.

முதலியத்தை விமர்சிக்கும் மர்ம நாவல்கள்

பல நாடுகளிலும் துப்பறியும் நாவல்கள், மர்மக் கதைகள் சமூக விமர்சனத்துக்குக் கருவியாகப் பயன்பட்டிருக்கின்றன. ஆனால் ஸ்வீடன், நார்வே, ஃபின்லாந்து போன்ற ஸ்காண்டிநேவிய நாடுகளில் சமீபகாலமாக மர்ம நாவல்கள் நிறைய வெளிவருவதோடு, அவை மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கில மொழி உலகில் பரவலாக விற்பதும், அவை எல்லாமே ஒரு விதமான சமூக விமர்சன நோக்கோடு வெளிவருவதும் கவனிக்கத் தக்கன.

பூச்சுகளற்ற எதார்த்தம், இடரில் நகைப்பு- போலிஷ் கவிதைகள்

இவருடைய பல கவிதைத் தொகுப்புகளும், படித்தவர் மனதில் ஸ்டாலினிய காலத்து அடக்கு முறை ஆட்சியில் மக்கள் பட்ட பெருந்துன்பங்களையும், யூரோப்பின் இருண்டகாலம் எனப்படும் அந்த வருடங்களையும் ஒருக்காலும் மறக்க் முடியாமல் பதிப்பன எனச் சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் பரபரப்பான முழக்கங்கள் நிறைந்த, ஆரவாரிப்புகள் உள்ள கவிதைகள் அல்ல இவருடையவை. அவை அரசியல் கவிதைகளே அல்ல, கவனமான உளவியல் பார்வை கொண்டவை.

துயரில் விளைந்த ஜனநாயகம் – போலந்து

சென்ற வார இறுதியில் – சனிக்கிழமையன்று, போலந்து நாட்டின் அதிபர் லெஹ் கசின்ஸ்கியும், அவருடன் சுமார் 95 போலிஷ் தலைவர்களும், பல முக்கியஸ்தர்களும் பயணித்த ஒரு விமானம் ரஷ்யாவில் ஒரு விமானதளத்தில் இறங்க முயற்சித்தபோது ஏற்பட்ட விபத்தில் இறந்தார்கள். போலந்தின் தற்போதைய அரசின் பல முக்கிய தலைவர்கள் இதில் இறந்தார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் பெரிதும் அதிர்ச்சி அடைந்த போலிஷ் மக்கள் மிகவும் ஆத்திரமடைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ரஷ்யா ஏதோ சதி செய்து தம் அதிபரைக் கொன்றதாகப் போலிஷ் மக்கள் கருதுகின்றனர் எனத் தெரிகிறது. இது குறித்து மாஸ்கோ டைம்ஸ் என்கிற ரஷ்யப் பத்திரிகையே கூட ரஷ்ய அரசு ஏதோ சதி செய்திருக்கக் கூடும் என்று சந்தேகப்பட்டு, அந்த சம்பவம் திறந்த ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்று சொல்கிறது.

போலந்தில் சமீபத்தில் ஷேல் எனப்படும் மண்ணடுக்குகளில் எரிவாயு கிடைப்பது கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. யூரோப்பின் எரிவாயுச் சப்ளை மீது ரஷ்யாவுக்கு இன்று இருக்கும் இரும்புப்பிடி பயனற்றுப் போய்விடும்.

நீடு எஞ்சுதலும், நவீனத்துவமும்

உரைநடையை எப்படிக் கவிதையின் அமைதியோடு எழுதுவது, அதே நேரம் அதில் ஒரு இசைத் தன்மையை எப்படிக் கொணர்வது என்று துவக்க காலக் கவிஞர்கள் கவனத்தோடு செயல்பட்டனர். சந்தத்தை உரைநடையோடு இணைக்கும் முயற்சி அது. மேற்கில் என்ன காரணங்களுக்காக மாடர்ன் பொயட்ரி என்ற உரு பரவியது என்பதை யோசித்து, அதே வகைக் காரணங்கள் தமிழில் இல்லாதபோதும், ஒரு சில ஒற்றுமைகளை பெரும்தளத்து அளவில் தமிழ்க் கவிஞர்கள் உணர்ந்தனர். அதாவது, சமூக, பண்பாட்டு, இலக்கிய மரபிலிருந்து விடுபடுதல் ஒரு முதல் கட்ட நகர்தல்.

தனிப்பாடல்

வண்ணங்கள் அவன் மனதில் ஓசைகளாய் ஒலித்தன என்பதைய் அவன் கண்டான். கோடைக்காலச் சூரிய ஒளி வீறிடும் சுரம். குளிர்கால நிலவொளி மெலிவான சோகப் புலம்பலொலி. வசந்தத்தின் புதுப்பச்சை கன்னாப்பின்னா தாளங்களில் முணு முணுப்பாயிற்று (ஆனாலும் காதில் விழுந்தது.) இலைகளூடே மின்னித் தெறித்து ஓடும் செந்நரியோ அதிர்ச்சியில் திக்கித் திணறும் மூச்சொலி. அத்தனை ஒலிகளையும் அவன் தன் வாத்தியத்தில் வாசிக்கப் பழகினான்.