அந்த மாபெரும் பண்ணையைச் சுற்றி வருகையில், 20 வருடங்களுக்கும் மேலாக வளர்ந்துவரும் ஒரு கொடியில் இரு பச்சை நிறக் காய்களைக் கண்டு அப்படியே மலைத்து நின்றவர் ’’இவை எப்போது காய்த்தன’’ என்று எட்மண்டிடம் கேட்டார். ’’நான் சில நாட்களுக்கு முன்பு கைகளால் இதன் மலர்களுக்கு மணம் செய்துவைத்தேன், எனவேதான் காய்கள் வரத் தொடங்கி இருக்கின்றன’’ என்ற எட்மண்டை அவர் அப்போது நம்பவில்லை.
Author: லோகமாதேவி
எருக்கு
திருமண தோஷம் உள்ளவர்கள் முதலில் வாழைக்குத் தாலி கட்டுவதை போலவே பல சமூகங்களில் எருக்குக்கு தாலி கட்டுவதும் வழக்கத்தில் இருக்கிறது.
கன்னிக்கருவறை: பார்த்தீனியம்
ஆக்கிரமிப்பு தாவர இனங்கள் குறுகிய வாழ்க்கைச் சுழற்சிகளைக் கொண்டுள்ளன, இனப்பெருக்கத்தில் அதிக கவனம் கொண்டு,மிக அதிக அளவில் விதைகளை உற்பத்தி செய்து, வேகமாக முளைத்து,அதிகமாக பரவுகின்றன..மேலும் பல ஆக்கிரமிப்பு தாவரங்கள் ‘பினோடிபிக் பிளாஸ்டிசிட்டி’ Phenotypic plasticity எனப்படும் ஆக்கிரமித்திருக்கும் புதிய வாழ்விடங்களுக்கேற்ப மாறும் திறனையும் கொண்டிருக்கின்றன.
காகித மலர் – ழ்ஜான் பாரெ
உறுதியான கொடியையும் அதன் பிரகாசமான காகிதங்களைப் போல இருந்த இளஞ்சிவப்பு மலர்களையும் சோதித்த கம்மர்சன் அசந்துபோனார்.
’’பாரெ, இம்மலர்கள் மிக அழகியவை’’என்ற கம்மர்சனிடம் ’’ இவை மலர்கள் அல்ல, பிரேக்ட் (Bract) எனப்படும் மலரடிச் செதில்கள் , உள்ளே சிறிய குச்சிகளை போல வெண்ணிறத்தில் இவற்றினால் மறைக்கப்பட்டுள்ளவைதான் உண்மையில் மலர்கள் ‘’ என்றார் பாரெ.
மருதாணி
பண்டைய இந்தியாவின் உடற்கலையின் ஒரு முக்கிய வடிவமாக மருதாணி இலைச் சாற்றின் சித்திரங்கள் இருந்து வருகின்றன. அக்காலப் பெண்கள் தங்கள் மார்பில் மருதாணிச் சித்திரங்களை வரைந்துகொள்வது ’தொய்யல்’ எனப்பட்டது.
தேர்தல் திருவிழா
தேர்தல் பணிக்கு வந்த நான் உள்ளிட்ட பல பெண்கள் அலைபேசியில் வீட்டை நிர்வகித்துக் கொண்டு இருந்தோம். ’’அரைமணிநேரம் மோட்டாரை போடு, அப்பாவுக்கு பரிமாறிடு, வாசற்கதவை நல்லா பூட்டிக்கோ, சாமி விளக்கேற்று,’’ என்றெல்லாம்.
ஒரு இளம் தாய் தன் கணவரிடம்’’ ஏங்க, பாப்பா உந்தி உந்தி கட்டிலிலிருந்து நகர்ந்து ஃபேனுக்குள்ள கையை விட்டுருவா,கொஞ்சம் பாத்துக்கங்க ’’என்ற பின்னர் தாழ்ந்த குரலில்’ “ இன்னைக்கும் குடிச்சிட்டு வந்துடாதீங்க. பாப்பா பாவம்,’’ என்றார்.
குங்குமப்பூவே!
கிராமங்களால் சூழப்பட்டிருக்கும் சிறு நகர்களில், மகப்பேறு மருத்துவமனைகளுக்கும் கிளினிக்குகள் அருகிலிருக்கும் சின்னச் சின்ன மருந்தகங்களில் கர்ப்பிணிப் பெண்கள் குங்குமச்சிமிழ் போன்ற சிறு பெட்டிகளில் 700 லிருந்து 1000 ரூபாய்கள் வரை கொடுத்து சில கிராம் குங்குமப்பூ வாங்கி செல்லுவதை சாதாரணமாகக் காணலாம். உண்மையில் இந்த ஏழை எளியவர்கள் வாங்கிச் “குங்குமப்பூவே!”
காடு
நெட்ஃப்ளிக்ஸ் ஆவணப் படத்திற்காக மூன்று மாதங்களாக இங்கேயே இருக்கிறாராம். வாட்டிய ரொட்டித் துண்டுகளைச் சாப்பிட்டுவிட்டுப் ஃப்ளாஸ்க்கில் கருப்புக் காபியுடன் வந்தால் மாலைதான் அறைக்கு திரும்புவது, சில சமயங்களில் இரவிலும் காத்திருக்கிறாராம். அவரின் இந்த அர்ப்பணிப்பு வியப்பை ஏற்படுத்தியது. தொலைக்காட்சியில் விலங்குகள் குறித்த ஆவணப் படங்களை ஒரு நொடியில் மாற்றி அடுத்த சேனலுக்குத் தாவியிருக்கும் பலநூறு சந்தர்பங்களை எண்ணி வெட்கினேன்.
காடு
பொங்கல் விடுமுறை 5 நாட்கள் என்று அறிவிக்கப்பட்டதும், கர்நாடகாவின் கபினி வனப்பகுதியின் ‘’Ghost’’ என அழைக்கப்படும் கருஞ்சிறுத்தையை காண வேண்டுமென பலநாட்களாக காத்துக்கொண்டிருக்கும் கானுயிர் புகைப்படக்காரனான இளைய மகன் தருணின் பொருட்டும் அங்கிருக்கும் காட்டுமரங்களின் முதலைமரப்பட்டைகளையும் ( Crocodile bark ), அங்கு அதிகமாக வளரும் தந்தப்பாலை செடிகளையும் “காடு”
சருமம், டாக்டர் மற்றும் முனைவர்
பின்னர் மருத்துவர் தகுந்த பாதுகாப்புடன் உடற்கவசம், முகக்கவசம், முகத்தின் மேல் மற்றுமொரு வெல்டிங் செய்பவர்கள் அணிவது போன்ற பாதுகாப்புக் கவசமென்று அணிந்து உயிரி ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போரில் கலந்துகொள்ளும் வீராங்கனையைப்போலவும், தமிழ் சினிமாக்களில் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணரைப்போலவும் வந்து இருக்கையில் அமர்ந்தார்.
வாஷோகுவும் வஸாபியும்!
ஜப்பானிய உணவுகளில் மிக முக்கியமானது சுஷி மற்றும் சஷிமி. இவ்வுணவுகளுடன் தவறாமல் பச்சை நிறத்தில் மிகச்சிறிய அளவில் விழுதாக அளிக்கப்படும் ஒரு துணை உணவே வஸாபி. வஸாபியைச் சுவைத்தவர்கள், கேள்விப்பட்டிருப்பவர்கள், அதன் பச்சை நிறத்தைக்கொண்டு அது ஏதோ ஒரு செடியின் இலைகளின் பசையென்றோ அல்லது செடியை அரைத்த விழுதென்றோ நினைக்கக்கூடும்.
பியர்: கசக்கும் உண்மைகள்
பியரின் கசப்புச் சுவை சர்வதேசக் கசப்பு அலகில் IBU (International Bittering Units) அளவிடப்படும். வெவ்வேறு வகையான பியர்களின் கசப்புச் சுவையை அளவிட்டு விளம்பரப்படுதுகின்றன பல பியர் தயரிப்பு நிறுவனங்கள். IBU அலகின் வரம்பு 0 – 1,000 ஆகும், ஆனால் மனிதச் சுவை ஏற்பிகள் அதிகபட்சமாக 120 IBU கசப்பை மட்டுமே ஏற்க முடியும்.
இணையவழி: கற்றலும் கற்பித்தலும்
பல வண்ண உடைகளில் கிளர்ந்து ஒளிரும் இளமையுடன் இருக்கும் மாணவர்களைக் கண்ணுக்கு கண் சந்தித்துப் பாடமெடுத்ததற்கும் மாற்றாக, நான் யாரை நோக்கிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே தெரியாமல், நான் பேசிக்கொண்டிருப்பதை யாரேனும் கவனிக்கிறார்களா இல்லையா என்றும் தெரியாமல் 40 / 50 நிமிடங்கள் பேசுவதென்பது பெரிய கொடுமையாக இருந்தது.
நீலச்சிறுமலர்-ஸ்வேதை
தாவரவியல் சுவாரஸ்யமானதும், அதன் அடிப்படைகளையாவது அனைவரும் அறிந்து கொண்டிருக்க வேண்டியதுமான இன்றியமையாத ஒரு துறை. அதிலும் தாவர அறிவியல் பெயர்களும் அவற்றின் பொருளை அறிந்து கொள்ளுவதென்பதும் மிகமிக சுவாரஸ்யம். ஒரு தாவரத்தின் வட்டார வழக்குப்பெயரானாலும், ஆங்கிலப் பொதுப்பெயரானாலும், லத்தீன் மொழியிலான தாவர அறிவியல் பெயரானாலும் சரி ஒவ்வொன்றும் மிகச்சுவாரஸ்யமான “நீலச்சிறுமலர்-ஸ்வேதை”
