வித்தியாசமாக சிந்தித்தால் வெற்றி பெற முடியாது

எந்த வண்ணப்படம் விற்கும் என்பதை சரியாக யாராலும் சொல்ல முடியாது. பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்து அருமையாக படம் பிடித்து மேலேற்றினால், அந்தப் படத்தை யாரும் பொருட்படுத்தவே மாட்டார்கள். முதலில் விற்ற என்னுடைய படங்கள் எனக்கு எதையும் கற்பிக்கவில்லை. மாறாக, என்னைத் தவறாக சந்தையை கணிக்கத் தூண்டியது. என் தன்நம்பிக்கையை குலைக்கவும் செய்தது. ஏன், அசட்டுத்தனமாக இந்தத் தொழிலில் வெற்றி பெறலாம் என்று தப்புக் கணக்குப் போடேன் என்று பல தருணங்களில் நினைக்க வைத்தது. நான் எந்தப் படங்கள் சிறந்தவை என்று எண்ணியிருந்தேனோ, அவை அதிகம் விற்றதே இல்லை!

ஆட்டத்தின் ஐந்து விதிகள் – 2

நேரடியாக பேசுவோம். விற்பனை என்பது அடிப்படையில் ஒரு பரிமாற்றச் செயல்பாடு. விற்பனையாளரும், வாங்குபவரும் இணைந்து அவர்களுக்கிடையே நிகழ்த்தும் பரிமாற்றச் செயல். இதில் வாய்ப்புகள் அதிகம் இருப்பது வாங்குபவரிடமே. ஏனெனில் ஏற்பு, மறுப்பு ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் முடிவு வாங்குபவரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் விற்பனையாளர் என்ன செய்துவிட முடியும்? வாங்குபவரை ஏற்பினை நோக்கி உந்துவதே அடிப்படையில் விற்பனையாளரின் செயல். இந்த உந்துதலைச் செய்வதில்தான் விற்பனையாளருக்கு எண்ணற்ற வழிமுறைகள் போதிக்கப்படுகின்றன.