மனசாட்சி ஒரு காட்டு விலங்கு

ஒரு சிறுகதைக்குள் மூன்று பாத்திரங்கள் முழுமையாகவும், அவற்றின் அகக் கொந்தளிப்புகளோடும் சித்தரிக்கப்பட்டிருப்பது உங்கள் எழுத்தின் தேர்ச்சியைக் காட்டுகிறது. உங்கள் கதை சொல்லும் விதம் கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருந்தது. வாசித்தேன் என்று சொல்வதை விட கதையைக் கண்டேன் என்றே சொல்லலாம். அந்த அளவு கதை சொல்லல் உங்களுக்கு சரளமாகக் கைவந்திருக்கிறது.

தீபாவளி சிறப்பிதழ் – வாசகர் மறுவினை

ராமையா எழுதிய அடைக்கும் தாழ் சிறுகதை படித்தேன். கதை பின்னோக்கு உத்தியில் சொல்லப்பட்டுள்ளது. பேசாமலே இருந்த ப்ரியா மறதி நோய் உள்ள பாட்டியின் மூலம் அவர்கள் வீட்டிற்குச் சென்று மாமாவின் அன்பால் பேசத் தொடங்குகிறாள். ஆனால் தன் குழந்தைக்குப் பிராமண பாஷை வந்துவிடுமோ என எண்ணிய சரவணன் ப்ரியாவை அங்கு அனுப்ப மறுத்துவிடுகிறான்…