கரவாஜியோ இறந்து இப்பொழுது நானூறு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இன்றும் செவ்வியல் முறையின் முக்கிய மாமேதை என்றும் இருளையும் ஒளியையும் ஓவியத்தில் எப்படிப் பயன்படுத்துவது என்று நமக்குக் கற்றுக்கொடுத்த வித்தகர் என்றும் புகழப்படுகிறார். கரவாஜியோவின் ஓவியங்கள் பரோக் (Baroque) என்ற மாபெரும் வகைப்பாட்டை ஓவியங்களில் துவக்கிவைத்தது
