கிரேக்கத்து ஸிஸிபஸும் கேரளத்துப் ப்ராந்தனும் – அல்பேர் கமூவின் அபத்தவாதம்

This entry is part 4 of 14 in the series குடாகாயம்

ஸிஸிபஸின் தண்டனையைப் பலரும் ஓவியமாக வடித்திருக்கிறார்கள்.  இவைகளுக்குள்ளே முன் பொதுயுகம் 530-ல் சுட்ட களிமண் பானையில் வரையப்பட்டதே நமக்குக் கிடைத்தவற்றில் மிகப் பழமையானது.   பொதுயுகம் 1549-ல் இத்தாலியஓவிய மேதை டிஷியன் என்பவரால் திரைச்சீலையில் தைலவண்ணம் கொண்டு வரையப்பட்ட ஸிஸிபஸ் ஓவியங்களுக்குளே மிகச் சிறப்பானதாக அறியப்படுகிறது.