“இந்த கதையைப் படிக்கின்ற ஒவ்வொரு முறையும் , என் உலகம் , ஒரு வலிய, மைக்ரொஸ்கோப்பால் பரிசீலிக்கப் படுவதை உணர்கிறேன்” என்கிறார் Zade Smith என்னும் நாவலாசிரியர். கதையில் இலியிச் ஒரு நீதி அரசர். (ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ரஷ்ய நாட்டவர் வில்லனாகச் சித்தரிக்கப் படுவது போல, டால்ஸ்டொயின் புதினத்தில் முக்கிய பாத்திரமாக நீதியரசர் இருக்கிறார் என்றால் அது டால்ஸ்டாய் தன் ஆன்மிக மதிப்பீட்டின் படி, வில்லனுக்கு சமமான இடத்தை நீதியரசருக்கு வழங்கியிருப்பதாக விளங்கிக் கொள்ளவேண்டும் என்று கட்டுரையாளர் கருத்து தெரிவிக்கிறார்) .
Author: கோரா
எண்ணை விலை உயர்வால் உலகமயமாக்கம் முடங்குமா?
எண்ணை விலை (ஒரு பேரல் விலை டாலர்களில்) மூன்றிலக்கமாகும் போது, உலகமயமாக்கலுக்குப் பின்னடைவு ஏற்படும். அது உள்ளூர்ப் பொருளாதாரங்கள் மறுமலர்ச்சி அடைய வழி வகுக்கும். நாம் எதிர்கொள்ளப் போகிற உலகில், தூரம் விலையேற்றத்தை ஏற்படுத்தும். குறைவான ஊதியம் ஏற்கும் உழைப்பாளர் கிடைப்பதால், சீனாவில் உற்பத்தி செய்து, அந்த சரக்குகளை மேற்கு ஐரோப்பாவிற்கோ அல்லது வட அமெரிக்காவுக்கோ ஏற்றுமதி செய்வது பல சமயங்களில் விவேகமான செய்கையாக இருக்காது. சரியாகச் சொன்னால், உழைப்பின் விலையால் நீங்கள் சேமித்ததை விட அதிக தொகையை போக்குவரவில் இழந்திருப்பீர்கள்.
தற்செயலாய் உருவான பிரபஞ்சம்-பகுதி 2
இதமான வாழ்வுக்குத் தேவையான பிராணவாயு, தண்ணீர் (அதன் உறை நிலை பூஜ்யம் டிகிரியாகவும் ,கொதி நிலை நூறு டிகிரியாகவும் இருப்பது) போன்ற எத்தனையோ நல்ல அம்சங்களைக் கொண்ட இந்த பூமியில் நாம் ஏன் வாழ நேர்ந்தது என்று கேட்டாலும் , இதே போன்ற பதில் தான் கிடைக்கும் . இது தற்செயலா? நம் அதிர்ஷ்டமா? இறையருளா? வேறெதுவோ?
தற்செயலாய் உருவான பிரபஞ்சம்
முன்பு விபத்துகளாகக் கருதப்பட்ட நிகழ்வுகளை, அடிப்படைக் கொள்கைகளுக்கும் காரணங்களுக்கும் உட்பட்ட நிகழ்வுகளாக நிலைநிறுத்துவதே அறிவியலின் வரலாற்றுச் செயல்பாடுகள். இதுவரை தெள்ளத் தெளிய விளக்கப்பட்ட நிகழ்வுகளோடு பட்டியலில் சேர்க்க வேண்டியவை இதோ: வானத்தின் நீல நிறம், கோள்களின் சுற்றுப்பாதைகள், ஏரியில் இயக்கப்படும் படகு விட்டுச்செல்லும் வழித்தடம் , உதிர்பனித்துகளின் அறுகோணப் பாங்கு, பறந்து செல்லும் வான்கோழியின் எடை, கொதிக்கும் நீரின் வெப்ப நிலை, மழைத்துளியின் பரிமாணம், சூரியனின் வட்டவடிவத் தோற்றம் எனப்பல.
