மகரந்தம்

பொதுவாக நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள் குறித்த ஜோக்குகளில் அவர்கள் ஆப்பிரிக்கர்களாகவே காட்டப்படுவது காலனிய பிரச்சாரத்தின் எச்சமாக பொதுபுத்தியில் இன்றும் வாழ்கிறது. ஆனால் அண்மையில் தெற்கு ஜெர்மனியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டடைந்த விஷயம் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் பெரிய அளவில் மனித மாமிசத்தை சடங்கு ரீதியாக உண்டார்கள் என்பதே.

உலக எய்ட்ஸ் தினம்

ஒவ்வொரு வருட டிசம்பர் ஒன்றாம் தேதி “உலக எய்ட்ஸ் தினம்”-ஆக கடைபிடிக்கப்படுகிறது. உலகமெங்குலும் இக்கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்பட தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

அனுஷ்கா ஷங்கர் – சங்கம இசை

அனுஷ்கா ஷங்கர், பிரபல சித்தார் கலைஞரான ரவிஷங்கரின் மகள். இவரது இசை ஆக்கங்கள் இவருக்கு உலகளாவிய புகழை பெற்றுத்தந்திருக்கிறது. ஒரு உலக விழவில் அவர் நிகழ்த்திய சங்கம இசை நிகழ்ச்சி

நேஷனல் ஜியாகிரஃபிக் புகைப்படப் போட்டி

உலகின் பிரபலமான புகைப்படப் போட்டிகளில் ஒன்று வருடந்தோறும் நேஷனல் ஜியாகிரஃபிக் நிறுவனம் நடத்தும் புகைப்படப்போட்டி. ஆரம்பநிலை ஆர்வலர்களிலிருந்து தேர்ந்த கலைஞர்கள் வரை பங்குபெறும் இப்போட்டிக்கு உலகெங்கிலுமிருந்து புகைப்படங்கள் வந்து குவிகின்றன. அப்படிக் குவிந்த புகைப்படங்களிலிருந்து “நேஷனல் ஜியாகிரஃபிக் புகைப்படப் போட்டி”

தாராசுரம் கோயிலில் கார்ல் சாகன்

பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்த விஞ்ஞானத்தின் பார்வையையும் இந்திய தொன்மங்களின் பார்வையையும் ஒப்பிட்டு பேசுகிறார் கார்ல் சாகன்

மகரந்தம்

டார்வின் பலவிதங்களில் மிகவே வித்தியாசமான அறிவியலாளர். இன்றைய சூழலில் டார்வின் அவரது ஆராய்ச்சி பயணத்துக்கு நிதி கேட்டிருந்தால், அறிவியல் செயல்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் இன்றைய விதிகளின் படி அது நிராகரிக்கப்பட்டிருக்கும் என வேடிக்கையாக குறிப்பிடுவார்கள். டார்வினின் வாழ்க்கை ஒரு பாசமிக்க கணவனாக, பெரும் அன்பு கொண்ட தந்தையாக, எதிலும் பொருந்தாத ஒரு மாணவனாக, பெற்றோரால் வேலைக்காகாது என நினைக்கப்பட்ட மைந்தனாக இருந்தவர்.

செவ்வாய் கிரகப் புகைப்படங்கள்

செவ்வாய் கிரகத்தை 2006 ஆம் வருடத்திலிருந்து சுற்றிவரும் Mars Reconnaissance Orbiter என்ற நாசா செயற்கைக்கோள், அதிலிருக்கும் HiRISE என்ற உயர்தொழில்நுட்பக் கேமரா வழியகப் பல புகைப்படங்களை எடுத்து அனுப்பியிருக்கிறது. செவ்வாய் கிரகத்தின் கோள்பரப்பை “செவ்வாய் கிரகப் புகைப்படங்கள்”

மகரந்தம்

“மனுசன் குரங்கிலிருந்து வந்தான் அப்படீன்னா ஏன் குரங்கு இன்னும் மனுசனாக மாட்டேங்குது?” என்று அசட்டுத்தனமாக கேட்டுவிட்டு பெரிய அறிவாளியாக புளித்த ஏப்பம் விடும் படைப்புவாதிகளை நீங்கள் பார்த்திருக்கலாம்.

உலக விலங்குகள் தினம் – அக்டோபர் 4

அக்டோபர் நான்காம் தேதி உலக விலங்குகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி Boston.com வெளியிட்டதொரு சிறப்பான புகைப்படத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

மகரந்தம்

நம்பிக்கைகளின் அடிப்படையில் மனிதகுலம் மிகப்பெரும் பிளவை சந்திக்கிறது. இந்தப் பிளவின் இடைவெளியில் புதைக்கப்பட்ட பிணங்கள் கணக்கிலடங்காதவை. மதம் சார்ந்த நம்பிக்கையாளர்களின் பூசல் ஒரு பக்கம். இந்நாணயத்தின் மற்றுமொரு பக்கம், கடவுள் மறுப்பாளர்களுக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் இடையே நடைபெறும் பூசல்.

மகரந்தம்

சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி. இந்த இதழில் இடம்பெறும் பகுதிகள்: காலியாகும் குடியிருப்புகள், கணையமும் ஷவர் குளியலும், இருவர், விலங்குகளின் கணிதத் திறன்

மகரந்தம்

மனத்தளர்ச்சி பரிணாமவியலோடு இணைந்த வாழ்வியலா? பாலில் தண்ணீர் கலக்கும் பால்காரர்கள் குறித்த நகைச்சுவைத் துணுக்குகள் பல வருடங்களாக நம் பத்திரிகைகளில் பவனி வருபவை. ஆனால் பிரபஞ்ச உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டும்தான் பாலின் தேவையைக் கடந்து முழு வளர்ச்சியடைந்த பின்னரும் தொடர்ந்து பால் அருந்துபவர்கள், அதுவும் பிற உயிரினங்களிடமிருந்து! பிற உயிரினங்கள் குழந்தைப் பிராயத்தைக் கடந்த பின்னர் பாலைச் செரிக்கும் சக்தியை இழந்து விடுகின்றன. ஏன், வெகு சமீபம் வரை மனிதனாலும் வளர்ச்சியடைந்தபின் பாலைச் செரிக்க முடியாமல்தான் இருந்தது. பிறகு எப்படி வந்தது இந்த பால் குடிக்கும் பழக்கம்? ஏகபோகத்தைக் (monopoly) கடுமையாக எதிர்க்கும் இந்திய இடதுசாரிகள் சீனாவின் ஏகாதிபத்தியம் குறித்து என்னவிதமான எதிர்வினை புரிவார்கள்?

மகரந்தம்

மேற்குலகில், ஆண்களின் இருப்பையும்/அவசியத்தையும் கேள்விக்குள்ளாக்கும் பெண்ணியத்தின் “நான்காவது அலை” தொடங்கிவிட்டது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெண்ணியம் குறிப்பிடப்படும்படியான வெற்றியை அடைந்ததுள்ளது. பெண்கள் மிகவும் அவதியுறும் ஈரான் போன்ற நாடுகளில் பெண்ணியத்தின் வெற்றி வெகு தொலைவில் இருந்தாலும், அதன் தேவை மிக அதிகம்.

மகரந்தம்

சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி. இந்த இதழில் இடம்பெறும் பகுதிகள்: மனம் பிறழ்ந்த கலைமனம், கணிணித் தகவலில் ஒரு துளி “சிவம்” – இன்னும் பல.

மகரந்தம்

எயிட்ஸ் மருத்துவ ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறதா? தென்-கொரிய இளைஞர்களை பொருளாதாரத் தேக்கம் எந்த அளவில் பாதித்திருக்கிறது? அமெரிக்கர்கள் தொலைத்த முக்கியமான ரகசிய ஆவணங்கள் என்னவானது?

மகரந்தம்

சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி. இந்த இதழில் இடம்பெறும் பகுதிகள்: சீனாவின் மன நோயாளிகள், ஈரான் தேர்தல், சந்திரயான் புகைப்படங்கள், மரபணு வித்தியாசங்கள் – இன்னும் பல.

மகரந்தம்

சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி. இந்த இதழில் இடம்பெறும் பகுதிகள்: லெபனான் தேர்தல், அணு ஆயுதங்களின் வரலாறு, கிழக்குஜெர்மனி குறித்த ரகசிய ஆவணப்படம், கண்ணீரின் தேவை என்ன? கூகுள் Vs மைக்ரோசாஃப்ட் தொடரும் யுத்தம்.