நடியாவின் பாடல்: ஸொஹேர் கஷோக்கி

இந்தத் தலைப்பு கொண்ட ஆங்கிலப் புதினத்தை, நடியாவுக்கான பாடல் எனவும் பொருள் கொள்ளலாம். இதுதான் சரியான தலைப்பாக அமையும். இந்தப் புதினம் அரபு நாடுகளின் பண்பாட்டின், கலாச்சாரத்தின் பிரதிபலிப்பாக, பெண்கள் வாழும், (வாழ அனுமதிக்கப்படும்) முறையை விவரித்து, கரிமா அஹமது எனும் ஒரு பெண்ணின் வாழ்வின் வெற்றிப் பெருமிதத்தையும் சோகக் கதையையும் வெகு அழகாக விவரிக்கின்றது. இதை எழுதியவரும் ஒரு பெண்ணே என்பது தான் இதன் கூடுதல் சுவாரசியம்.

கவிதைகள் சொல்லும் (சிறு)கதைகள்

கதை சொல்லுவதில் ஆர்வம் கொண்ட மனிதன் எவ்வாறு அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டான் என்று யோசிக்கிறோம். வாய்மொழியாகவே சிறுகதைகள் வெகுகாலத்திற்கு முன் வழங்கப்பட்டன. பாட்டிகள் சொல்லும் பல கதைகள் இன்றைக்கும் இதற்குச் சான்றாக உள்ளன! உலகில் எல்லா மொழிகளிலும் எழுத்தும் இலக்கியமும் வளரத் துவங்கியதும், கவிதை (அ) செய்யுள் ஒன்றே இலக்கிய வடிவமாகக் கருதப் பட்டிருந்தது. கதை சொல்லும் மனிதன் எவ்வாறு அதைச் சொன்னான்?

மோட்ஸார்ட்டும் ஒரு இலையுதிர்கால மாலைப் பொழுதும்

நான் அவளுடன் வேலை பார்த்த ஆரம்ப நாட்களில் குழந்தையைக் காப்பகத்தில் விட ஆரம்பித்திருந்தேன். அவன் அங்கு ‘அட்ஜஸ்ட்’ செய்து கொண்டு விட்டானா என விசாரிப்பாள். ஐந்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்கிய தாய் ஆனதால், குழந்தை வளர்ப்பின் நுணுக்கங்களை மனோதத்துவ முறைப்படி எனக்கு விளக்குவாள். இரண்டு வயதுக் குழந்தை நான் சொன்னதையே கேட்க மாட்டேன் என்கிறான் என்று ஒருமுறை அவளிடம் பாதி அலுப்புடனும், பாதி ஒரு தாய்க்குரிய பெருமையுடனும் விவரித்தபோது, சொன்னாள்: “அவன் நீ சொல்லும் எல்லாவற்றிற்கும், ‘சரி அம்மா,’ ‘அப்படியே செய்கிறேன் அம்மா,’ என்று சொல்லிய வண்ணம் இருந்தால் அவனுடைய தனித்தன்மை எவ்வாறு வளர்ச்சி பெறும்? அவன் எவ்வாறு ஒரு முழு மனிதனாவான்?” என்று கரிசனத்துடன் கூறினாள்.

எதிர்பாராததை எதிர்பார்க்க வைக்கும் தாகூரின் சிறுகதைகள்

விதியின் விளையாட்டினால் அப்போது வங்கத்திலும், பிஹார், ஒரிஸ்ஸா ஆகிய இடங்களிலும் கொடும் பஞ்சம் தலை விரித்தாடி மக்களை எலும்பும் தோலுமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. தாகூர் கிண்டலும் எகத்தாளமுமாக இவ்வாறு எழுதுகிறார்: ‘வைத்யநாத் நிறைந்து வழியும் தனது செல்வங்களின் நடுவில் அமர்ந்து கொண்டு யார் இதை ஒருநாள் உண்ணப் போகிறார்கள் எனக் கவலைப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், கொலைப் பட்டினியிலும் பஞ்சத்திலும் வருந்திக் கொண்டிருந்த ஒரு பெரிய நாடு தனது காலித் தட்டைப் பார்த்தபடி, என்ன சாப்பிடக் கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டிருந்தது.’